கொஞ்சம்சிரியுங்கபாஸ்! பகுதி 58
1. நீங்க பொங்கலை வாசல்ல வைப்பீங்களா இல்லே கிச்சன்லே வைப்பீங்களா?
நாங்க பானையிலேதான் வைப்போம்!
2. புதுப் புடவையிலே வேலைக்காரி ப்ரைட்டா இருக்கான்னு வாய்விட்டு வொய்ஃப்கிட்ட சொல்லிட்டேன்
அப்புறம்?
அன்னிக்கு பூரா என் நேரம் டார்க்கா ஆயிருச்சு!
3. கரும்பு கடை என்ன விலைன்னே?
கடையெல்லாம் விற்கிறதுக்கு இல்லே! கரும்பு மட்டும் வாங்கிக்க!
4. எதிரி நம்மை நெருங்கிவிட்டான் மன்னா…!
உதிரிகள் ஆகும் முன் ஓடிவிடலாமா அமைச்சரே!
5. தலைவர் ஏன் சம்பந்தமே இல்லாம இனி நான் பீடா போட மாட்டேன்னு மேடையிலே அறிவிக்கிறாரு…!
ஜல்லிக்கட்டுக்கு தடைவாங்கினது பீடா கம்பெனிக்காரங்கன்னு தப்பா புரிஞ்சிகிட்டிருக்கார்!
6. தலைவர் தீவிர சிவாஜி ரசிகராம்…!
அதனாலே…
ஜல்லிக்கட்டுக்கு மட்டும்தான் தடைவிதிப்பீங்களா? முரட்டுக் காளைக்கும் தடைவிதிக்கணும்னு அறிக்கை விட்டு இருக்கார்!
7. படையெடுப்பு என்று தெரிந்ததும் மக்கள்…
பொங்கி எழுந்து தயார் ஆகிறார்களா?
ஊகும்… அடுத்த நாட்டிற்கு நடை எடுத்து விட்டார்கள்!
8. அந்த பாடகர் பாடினா ரசிகர்கள் இருக்கையைவிட்டு நகரவே மாட்டாங்க…!
அவ்ளோ சூப்பரா பாடுவாரா?
ஊகும் கட்டிப் போட்டுட்டுதான் பாடவே ஆரம்பிப்பாரு!
9. எதுக்குங்க சீட்டுக் கட்டுக்குள்ள சர்க்கரையை தூவறீங்க?
டாக்டர்தான் சொன்னார் சுகரை கட்டுக்குள்ள கொண்டுவரணும்னு!
10. படம் முழுக்க “ஃபாரின்லே எடுத்தீங்களாமே எந்தெந்த நாடுகள்ள எடுத்தீங்க?
நீங்க வேற டாஸ்மாக் பாருக்கு உள்ளெ எடுத்ததைத்தான் டைரக்டர் அப்படி கவுரமா சொல்லிக்கிட்டு திரியறாரு!
11. மன்னர் ஏன் புலவர் மேல் கோபமாக இருக்கிறார்?
மன்னர் டாஸ்மாக்கிலே இருக்கும்போது நுழைந்து “ பார்” வேந்தே! என்னை ‘பார்” வேந்தேன்னு டயலாக் விட்டாராம்!
12. அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்றே?
போஸ்ட் மார்ட்டம் பண்ணப் போற பாடிக்கு மயக்க மருந்து கொடுக்க சொல்றாரே!
13.வீட்டு வாசல்லெ கோலம் போடாம இருந்தா என் மனைவிக்கு பிடிக்காது!
வெரிகுட் நல்ல பழக்கம்!
கிழிஞ்சுது! விடிகாலை பனியிலே நான் இல்லே கோலம் போட வேண்டியிருக்கு!
14.பொங்கலுக்கு நீங்க என்ன செய்து கிழிச்சீங்கன்னு யாரும் என்னை கேக்க முடியாது…!
எப்படி?
வீட்டுல இருந்த நாலு காலண்டர்லேயும் தேதிகிழிச்சது நானாச்சே!
15.சமூக வலைதளங்கள்லே உங்க படத்தை கிழிச்சு எடுக்கிறாங்களாமே அப்படி என்ன படம் எடுத்தீங்க?
தாரை தப்பட்டை!
16. நகர்வலம் போகையிலே மன்னருக்கு ஒரு ‘தொடுப்பு’ ஏற்பட்டுவிட்டதாம்!
அப்புறம்?
விஷயம் தெரிந்த ராணியார் நகர்வலத்துக்கு ‘தடுப்பு” போட்டுவிட்டார்கள்!
17. பேங்க் பேலன்ஸுக்கு வண்டி பேலன்ஸுக்கும் என்ன சம்பந்தம்?
வண்டியிலே பேலண்ஸ் இல்லேன்னா கீழே தள்ளிவிட்டுடும் பேங்க்ல பேலன்ஸ் இல்லேன்னா பொண்ணு தள்ளி விட்டுரும்!
18. மன்னர் எதற்கு நாட்டில் உள்ள உண்டியல்களை சிறியதாக பண்ணச் சொல்கிறார்?
வைத்தியர் அவரை ‘உண்டி சுருக்குமாறு” கூறிவிட்டாராம்!
19. என் உடல் பொருள் ஆவி அனைத்தும் உங்களுக்குத்தான்...!
அப்படியே உங்க பேங்க் அக்கவுண்டையும் எங்க பேருக்கு மாத்திடுங்க தலைவரே!
20. தலைவர் பேச ஆரம்பிச்சதும் மக்கள் எல்லாம் தெறிச்சு ஓடறாங்களே ஏன்?
அவர்தான் தெறிக்க விடறாரே!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!