1
. தலைவர் நிமிர்ந்து நடக்க ஆரம்பிச்சிட்டாரா?
ஆமாம்! அவரோட அமைச்சர் பதவியை பறிச்சிட்டாங்க!
2. மூணுநாள் ஸ்கூல் லீவ் விட்டும் ஏன் கஷ்டபடறே?
முன்னூறு பக்கம் ஹோம் ஒர்க் கொடுத்து இல்லே அனுப்பி விடறாங்க!
3. தலைவர் நிறைய கனவுகளை சுமந்துகிட்டு சட்ட சபைக்கு போயிக்கிட்டு இருக்கார்!
ஓ அதனாலதான் சபையில தினமும் தூங்கி வழியறாரா?
4. வந்துட்டான்! எதிரி திரும்ப வந்துட்டான்.. மன்னா!
ஓடிருவோம்! திரும்பவும் ஓடிருவோம் தளபதியாரே!
5. நம்ம தலைவருக்கு கொஞ்சம் கூட சபை நாகரீகமே தெரியலை…!
எப்படி சொல்றே?
எதிர்கட்சிக்காரரை பேர் சொல்லும்போது பெருமதிப்புக்குரிய மாண்புமிகுன்னு ஆரம்பிக்கிறாரே!
6. புலவர் டபுள் கேம் ஆடுகிறாரா? என்ன சொல்கிறீர்?
மன்னரது வாட்சப் குருப்பில் மட்டுமில்லாமல் எதிரியின் வாட்சப் குருப்பிலும் இருக்கிறாராம்!
7. அந்த டாக்டர் கொஞ்சம் வித்தியாசமானவரா எப்படி?
ஆபரேஷன் பண்றப்போ அனஸ்தீஷியா கொடுக்கிறதுக்கு பதிலா வாட்சப் வீடியோக்களை காமிச்சு மயக்கம் வர வைக்கிறாரே!
8. பர்ஸ்ட் டே! பர்ஸ்ட் ஷோ பாக்கணும்னு ஆசைப்பட்டேன் ஆனா டிக்கெட் கிடைக்கவே இல்லை!
அப்புறம்!
ஆன் லைன்ல படமே கிடைச்சிருச்சு!
9. தலைவருக்கு ஜிம்னாஸ்டிக்ஸ்லே ஆர்வம் ஜாஸ்தியாமே!
ஆமா! சின்ன வயசிலே ஸ்கூல்லே இருந்து ஜன்னல் கம்பி வழியா நுழைஞ்சி வெளியே வந்து வேடிக்கை காண்பிப்பாராம்!
10. வரப்போகிற உள்ளாட்சி தேர்தலில்….
கண்டெயினர் வாங்கலைன்னா கூட ஒரு குட்டியானையாவது வாங்கிடனும் தலைவா….!
11. தலைவரே உங்க மீம்ஸ் வைரலா பரவுதுதான்! அதுக்காக அதை தடுப்பூசி போட்டு எல்லாம் கட்டுப்படுத்த முடியாது….!
12.அந்த ஓட்டல்ல கடனுக்கு சாப்பிடலாம்னு சொல்றியே கடன் கொடுப்பாங்களா?
ஊகும்! வேற வழியில்லாம கடனேன்னு சாப்பிடலாம்னு சொல்ல வந்தேன்!
13.மன்னா! எதிரி போக்கிமான் ஆட அழைப்பு விடுக்கிறான் மன்னா?
பதுங்கு குழியில் இருக்கும் என்னை பொறி வைத்து பிடிக்க ஆசைப்படுகிறானா? நான் சிக்க மாட்டேன்!
14. தலைவருக்கு கிரிக்கெட் பீவர் அதிகமாயிருச்சு!
அதுக்காக சபாநாயகர் தீர்ப்புக்கு ரிவ்யூ வேணும்னு மூணாவது சபாநாயகருக்கு அனுப்பனும்னு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு!
15.மன்னருக்கு திடுமென கிரிக்கெட்டில் ஆர்வம் அதிகரிச்சிருக்கே ஏன்?
அரண்மணை நர்த்தகிகள் ஆடும் ஆட்டம் போரடித்துவிட்டதாம்! சியர்ஸ் கேர்ள்கள் ஆடுவதை பார்க்க கிளம்பி விடுகிறார்!
16. அந்த சாமியார் ரொம்பவும் ஹைடெக்கான ஆசாமி போல!
எப்படி சொல்றே?
ஆசிரமம் தன் சேவைகளை 4ஜி ஸ்பீடில் தரும்னு அறிவிச்சிருக்காரே!
17.ஒரு பொண்ணை ஒரு தலையா காதலிச்சிட்டு இருந்தியே என்ன ஆச்சு!
அவ சம்மதம் கிடைச்சி இதய சிறையிலே வைச்சிட்டதாலே விடுதலை ஆக முடியாம தவிக்கிறேன்!
18. டாக்டர் ரெண்டு நாள் கம்ப்ளீட் ரெஸ்ட்ல இருக்கணும்னு சொல்லிட்டார்!
அப்புறம்?
லீவை கேன்சல் பண்ணிட்டு ஆபீஸ் கிளம்பி வந்துட்டேன்!
19.குருகுலத்துக்கு சென்ற இளவரசர் மேல் ஒரு கேஸ் புக் ஆகியிருக்கிறது மன்னா?
என்ன?
விடாது பேஸ்புக் பார்த்துக் கொண்டிருக்கிறாராம்!
20.மன்னர் சூப்பர் சிங்கர் அதிகம் பார்க்கிறார் என்று எப்படி சொல்கிறீர் புலவரே!
பாடல் பாடி முடிச்சதும் உங்க பாட்டுல பேஸ் குறையுது! அங்கங்கே சுருதி தட்டுது! பெட்டர்லக் நெக்ஸ்ட் டைம்னு பரிசு கொடுக்காம அனுப்பிடறாரே!
221.ரொம்ப நாள் கழிச்சு என்னோட ஜோக் பத்திரிக்கையில…
வந்துதா… வாழ்த்துக்கள்!
ஊகும் திரும்பி வந்துதுன்னு சொல்ல வந்தேன்!
222.தலைவரைவிநாயகர்சதுர்த்திவிழாவுக்குகூப்பிட்டதுதப்பாபோச்சு! ஏன்? என்னஆச்சு?
வச்சிருந்தஉண்டியலைஆட்டையைபோட்டுட்டாராம்!
223.மன்னா! நாடெல்லாம் ஒரே ஜிகா வைரஸ் தாக்குதலா இருக்கிறது….!
பதுங்கு குழிக்குள் கூட அது புகுந்து தாக்குமா தளபதியாரே!
1. மந்திரியாரே! போர்க்களத்திற்கு சென்று வந்த என்னை பற்றி நாடே பரணி பாடுகிறதாமே!
பகல்கனவு காணாதீர்கள் மன்னா? புரணி அல்லவா பேசிக்கொண்டிருக்கிறார்கள்!
2. இது காசு கொடுத்து கூட்டி வந்த கூட்டம் இல்லை!...
அதுக்கு வக்கில்லாம பிரியாணி கொடுத்து கூட்டி வந்த கூட்டம்தான் ஒத்துக்கறேன் தலைவரே!