Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 78

$
0
0
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி  78


1.   தலைவர் மீட்டீங்னா கூட்டம் அள்ளுமாமே?
ஆமாம்! ஆமாம்! பிரியாணியை!

2.   தலைவர் அவரை வரவேற்று வைச்சிருந்த ப்ளக்ஸை பார்த்து நெகிழ்ந்து போயிட்டார்!
அப்படி என்ன வைச்சிருந்தாங்க?
மீம்ஸ்களின் ரட்சகரேன்னுதான்!

3.   முதலிரவு அறைக்குள்ள போன மாப்பிள்ளை உடனே வெளியே வந்துட்டாரே என்ன கோபம்?
  அவர் போக்கிமான் கோ! ஆடிக்கிட்டே வெளியே வந்துட்டாராம்!

4.   ஜியோ சிம்மும் புதுப் பொண்டாட்டியும் ஓண்ணுன்னு எப்படிச் சொல்றே?
மூணு மாசத்துக்கு ஃப்ரியா விடறாங்களே!

5.   நம்ம ராப்பிச்சைக் காரன் ஏதோ கொடுத்துட்டு போறானே என்னது?
  யார் வீட்டு சமையல் நல்லா இருக்குன்னு போட்டி வைச்சிருக்கானாம்! ஒருவாரம் கழிச்சு நல்ல சமையலுக்கு பரிசு தரபோறாங்களாம் பிட் நோட்டீஸ் கொடுத்துட்டு போறான்!


6.   என் மனைவிக்கு எதையும் வெளிப்படையா காட்டிக்கிட்டா பிடிக்காது!
அப்ப வீட்டுல நிறைய ”ஊமைக்குத்து” இருக்குன்னு சொல்லு!

7.   புலவர் ஏன் வருத்தமாய் இருக்கிறார்?
பாட்டுக்கு பணத்தை அக்கவுண்டில் எழுதிக் கொள்ளுமாறு மன்னர் சொல்லிவிட்டாராம்!

8.   அந்த சர்வர் ஏன் முறைச்சிக்கிட்டே போறான்!
டிப்ஸ் ஏதாவது தாங்கன்னு கேட்டதுக்கு சப்பாத்தி மாவை நல்லா ஊற வைச்சு பிசையுங்கன்னு   சொன்னேன் !


9.   அந்த வேலைக்காரி போடுற கண்டிஷன் ரொம்ப ஓவரா இருக்கு!
  என்ன கண்டீஷன் போடுறா?
 வீட்டுல வை ஃபை கனெக்‌ஷன் இருந்தாத்தான் வேலைக்கு வருவாளாம்!

10. டச் விட்டுப்போனதாலே ஆயிரம் ரூபா செலவாயிருச்சா எப்படி?
என் ஸ்மார்ட் போனோட டச் கீழே விழுந்து விட்டுப் போயிருச்சு!

11. பேஷண்ட்கிட்டே ஏன்  தொட்டு தொட்டு பேசிக்கிட்டு இருக்கீங்க சிஸ்டர்?
  நீங்கதானே டாக்டர் பேஷண்ட் கிட்டே “டச்” வைச்சிக்குங்கன்னு சொன்னீங்க?


12. என்னது எதிரி மன்னன் “ஆப்பு” வைத்திருக்கிறானா?
பதறாதீர்கள் மன்னா? எதிரி அவன் நாட்டை பற்றி புதிதாக “ஆப்” வெளியிட்டிருக்கிறான் அவ்வளவுதான்!

13.மன்னர் எவ்வளவோ கேட்டும் ராணியார் சொல்ல மறுத்துவிட்டாராமே அப்படி என்ன ரகசியம்?
  வை- ஃபை பாஸ் வேர்ட் தான்!

14.தூக்கத்தில் கூட மன்னருக்கு போர் ஞாபகம்தானாமே!
  ஆமாம்! பாதித் தூக்கத்தில் அலறி அடித்துக்கொண்டு எழுந்து ஓட ஆரம்பித்து விடுகின்றாராம்!

15.அந்த சர்வருக்கு ஆனாலும் நக்கல் அதிகம்?
எப்படி சொல்றே?
 சோலாப் பூரி ஏன் உப்பலா இல்லைன்னு கேட்டா அவசரத்துல காத்தடிக்க மறந்திருச்சுன்னு சொல்லிட்டு போறான்!


16.என் மாப்பிள்ளை ரொம்ப கெட்டிக்காரர் இரும்பை கூட தங்கம்னு நம்ப வைச்சிருவார்னா பாத்துக்கயேன்!
  அப்ப ரியல் எஸ்டேட்  புரோக்கரா இருக்கார்னு சொல்லு!

17.டி.டி. ஆர் கிட்டே டிக்கெட்டை காட்டியும்  ஃபைன் போட்டுட்டாரா ஏன்?
  அது பஸ் டிக்கெட் ஆச்சே!

18.மாப்பிள்ளை பெரிய ஐ.பி.எல் ப்ளேயராம்!
அதுக்காக ரிசப்ஷணுக்கு சியர்ஸ் கேர்ள்ஸை கூப்பிட்டு ஆட விடனும்னு சொல்றது கொஞ்சமும் நல்லா இல்லை!


19.தலைவர் எதுக்கு இப்ப பொக்லைன் மிசினை  கட்சி ஆபிஸிற்கு வர வைச்சி இருக்கார்!
  கட்சியை குழி தோண்டி புதைச்சிட்டார்னு யாரோ சொன்னாங்களாம் தோண்டி எடுக்க வரச் சொல்லியிருக்காராம்!

20. ஆபீஸ்ல புதுப்படத்தை டவுண்லோட் பண்ணிக்கிட்டு இருக்கும் போது எம்.டி வந்திட்டார்!
அப்புறம்?
தன்னோட போன்ல அப்லோட் பண்ணிக்கிட்டதுக்கு அப்புறம்தான் கிளம்பி போனார்!

21.இரவு நேரத்தில் ராணியார் செல்போனில் யாரிடமோ அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறாராமே!
பின் என்ன செய்வார் அந்தப்புரத்தில் மன்னரின் குறட்டை ஒலி அதிகமாகிவிட்டதாம்!

22.மன்னா! நம் ரதம் பழுதாகிவிட்டது!
உடனே “ஒலா”விற்கு புக் பண்ணுங்கள் மந்திரியாரே!

23. கவர்ச்சி நடிகையை கட்சிக்குள்ளே சேர்த்தது தப்பா போயிருச்சாம்!
    ஏன்?
 எந்த விஷயத்தையும் மூடி மறைக்க மாட்டேங்கிறாங்களாம்!

24.உள்ளாட்சித் தேர்தல்ல போட்டியிட தலைவருக்கு சீட் கொடுக்க மறுத்திட்டாங்களாமே!
ஆமாம்! நேர் காணல்ல ஒழுங்கா பாடிக் காட்டலையாம்!


25. துவைச்சு வைச்ச புடவையிலே கொஞ்சம் அழுக்கு இருக்கிறதை என் பொண்டாட்டி பார்த்துட்டா...!
     அப்புறம்?
   வெளுத்து வாங்கிட்டா!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!