Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 18

$
0
0
நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 18

நொடிக் கதைகள்! பகுதி 18


   டோராவும் புஜ்ஜியும்  

நீதான் டோரா, வருண் தான் புஜ்ஜி! நான் போய் ஒளிஞ்சிக்கிறேன்  மேப் உதவியோடு என்னை கண்டுபிடிப்பீங்களாம்! பக்கத்து வீட்டு சிறுவர்களோடு விளையாடிக்கொண்டிருந்தது குழந்தை



டீல்!
  அப்பா! நான் ஹோம் வொர்க் பண்றேன்! நீ பேஸ் புக் பார்த்ததும் கேம்ஸ் விளையாட போன் தரனும் ஓக்கேயா? டீல் பேசினாள் மகள்.

ஊருக்கு உபதேசம்!

    ”இலவசமாய் கொடுத்துதான் நாடே குட்டி சுவராப் போச்சு! அரசாங்கம் போறாதுன்னு இப்போ ரிலையன்ஸ் காரன் கொடுத்து கெடுக்கிறான்! ச்சே! ”என்று அலுத்துக்கொண்டவர் படித்துக்கொண்டிருந்த ஓசிபேப்பரை டீக்கடை பெஞ்சில் வைத்துவிட்டு எழுந்தார்.

கிரகப்பிரவேசம்!
    புதுவீடு கட்டி நாளை விடியலில் கிரகப் பிரவேசம்! எல்லா வொர்க்கும்   முடிஞ்சுதா? எல்லாம் ரெடியா இருக்கா? என்று மாமனார் கேட்ட போது ஒண்ணே ஒண்ணு பாக்கி இருக்குமாமா? என்றவன் போட்டோ எடுத்து பேஸ்புக்கில் அப்லோட் செய்தான்.

இலவசம்!

   எல்லாம் ஓக்கே! அப்படியே பையனுக்கு ஒரு ஸ்மார்ட் போனோட ஜியோ சிம் வாங்கி கொடுத்திருங்க என்றாள் பையனின் அம்மா.

தூக்கம்!
   இரவெல்லாம் தூக்கம் வராமல் தவித்து போனவர் தண்ணீர் குடித்தார். ஒன்று இரண்டு எண்ணினார். பேஸ்புக் பார்த்தார் ஒன்றும் மசியவில்லை! விடியும் போது தூங்கிக் கொண்டிருந்தார்.

கோபம்!

    பத்து நாளாச்சு! எங்கேடி போனே! ஒரு வாட்சப் பண்ணியிருக்கலாம் இல்லை! தோழியிடம் கோபித்துக் கொண்டாள் மேகலா.

 புது மோகம்!
    தெருவுக்குத் தெரு புதுசு புதுசாய் முளைத்த பிள்ளையார்கள் ஜொலித்துக் கொண்டிருக்க தெரு முக்கில் இருந்த பிள்ளையார் அழுது வடிந்து கொண்டிருந்தார்.

உபதேசம்!
  இந்திய பொருட்களையே வாங்கு! அப்போதுதான் பொருளாதாரம் உயரும் என்று சீன மொபைலில் வாட்சப் மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தான் குமார்.

வி.ஐ.பி தரிசனம்!

    வி.ஐ.பி வருகிறார்!  நடையை சார்த்தாமல் காத்துக் கொண்டிருந்தார் தரிசனத்திற்கு கடவுள்.

லைக்ஸ்!
       த்தூ! சமையலா இது! என்று கணவன் துப்பிய குப்பை சமையலை பேஸ்புக்கில் பகிர்ந்து ஐநூறு லைக்ஸும் ஐம்பதும் கமெண்ட்டும் வாங்கி  பழி தீர்ந்து கொண்டாள் மனைவி.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles