பூமி!
அதோதெரியுதுபார்பூமி! அங்கேதான்நம்மமுன்னோர்கள்வசித்துவந்தார்கள்என்றுகுழந்தைக்குகதைசொல்லிநிலாவில்சோறுட்டிக்கொண்டிருந்தாள்கி.பி.2200ல்தாய்.
லீவ்எப்ப?
”கொரானாமுதல்அலை, ரெண்டாவதுஅலைக்குலீவ்விட்டாங்களே! இப்போஓமிக்ரான்வந்திருக்கேஎப்பப்பாலீவ்விடுவாங்க?” என்றுஅப்பாவிடம்ஏக்கமாய்கேட்டான்மூன்றாவதுபடிக்கும்முகில்.
தண்டணை!
”இன்னொருமுறைஇந்ததப்புபண்ணிணேன்னாமழைக்காலத்திலேசென்னைக்குடிரான்ஸ்பர்பண்ணிடுவேன்ஜாக்கிரதை!” என்றார்ஆபீஸ்மேனேஜர்.
இழப்பு!
வெள்ளம்பெருக்கெடுத்துஓடியதால் வீடிழந்தனகுளத்துமீன்கள்.
மறந்திடாதீங்க!
”மாஸ்க்கைஎங்காவதுமறந்துவிட்டுடப்போறீங்க! மறக்காமபோட்டுட்டுவாங்க!” என்றுவெளியேசெல்கையில்அறிவுறுத்திஅனுப்பினாள்மனைவி.
2121
சாப்பிட்டுமுடித்ததும்ஒருமாத்திரையைவிழுங்கியவன் .தொண்டைக்குள்இறங்கியதுவிலைமதிப்பில்லாகுடிநீர்.
எப்ப வருவீங்க?
அப்பா எப்போப்பா வருவீங்க? என்று ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த நண்பனின் குழந்தை கேட்கும் போது நண்பனின் மொபைலை வைத்திருந்த சகவீரனால் அழுகையை தவிர்க்க முடியவில்லை.
மாசு!
தெருவெல்லாம் ஒரே குப்பையை கொளுத்தி பொல்யூசன் பண்றானுங்க! திருந்தவே மாட்டானுங்க என்றவர் பெட்டிக்கடையில் ஒரு சிகரெட் வாங்கி அங்கேயே பற்ற வைத்தார்.
சுத்தம்!
வெள்ளை வேட்டி அணிந்து பளிச்சென்று கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டவர் ஐயர் கொடுத்த திருநீற்றை நெற்றியில் பூசிவிட்டு மிச்சத்தை தூணில் கொட்டினார்.
விட்ட பயம்!
ஊசி என்றாலே ஒரு காத தூரம் ஓடும் மாதவன் கொரானா தடுப்பூசி போட்டுக்கொண்டால்தான் “சரக்கு” வாங்க முடியும் என்றதும் முதல் ஆளாய் ஊசிப் போட்டுக்கொள்ள கிளம்பினான்.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துகளை கமெண்டில் தெரிவித்து ஊக்கப் படுத்துங்கள்! நன்றி!