Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

மதுவிற்கு எதிராக ஓர் அறப்போர்! காந்தியவாதி சசிபெருமாள்!

$
0
0

காந்தியவாதி சசிபெருமாளை உங்களுக்குத்தெரியுமா? அவர் நடத்தி வரும் மதுவிற்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் பற்றி அறிவீர்களா?
   நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை! எனக்கே இன்று முகநூலில் கார்டூனிஸ்ட் பாலாவின் பக்கத்தை பார்த்தபோது சசிபெருமாளையும் அவர் நடத்தி வரும் போராட்டத்தை பற்றியும் தெரியும். தமிழகத்தில் ஒரு காலத்தில் மதுவிலக்கு அமலில் இருந்து அரசு மாய்ந்து மாய்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களை பிடித்து சிறையில் தள்ளியது.
  மது குடிக்க பெர்மிட் என்று ஒன்று கொடுத்து அதை வைத்திருப்பவர்கள்தான் குடிக்கலாம் என்று ஒரு சட்டம் இருந்தது. அந்த பெர்மிட்டை பெற பிரபலங்கள் கூட மிகவும் மெனக்கெட வேண்டியிருந்தது என்று பெரியவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.  அப்படிப்பட்ட தமிழகத்தில் இன்று மது ஆறாக  பெருக்கெடுத்து ஓடுகிறது. தண்ணீர் ஓட வேண்டிய ஆறுகளும் குளங்களும் வற்றி வரண்டு கிடக்க மது ஆறு மட்டும் வெள்ளப்பெருக்கில் இருக்கிறது.
   சின்னஞ்சிறு குழந்தைகள் கூட டாஸ்மாக்கில் சரக்கடித்துவிட்டு அலம்பல் பண்ணும் அதிசயக் காட்சிகளை காண்கிறோம். பல இடங்களில் பள்ளி மாணவர்கள் சரக்கடித்துவிட்டு பள்ளிக்கு வருகிறார்கள். நாளிதழ்களில் இதை புகைப்படமாக காணும் போது வேதனைதான் மிஞ்சுகிறது. குறிப்பிட்ட பண்டிகை நாட்களில் இவ்வளவு வியாபாரம் செய்து விட வேண்டும் என்று டார்கெட் நிர்ணயித்து டாஸ்மாக் ஊழியர்களை கெடுபிடி செய்கிறது அரசு.
   அவர்களும் நிர்ணயித்த அளவை விட அதிகம் விற்பனை செய்து சாதனை செய்கிறார்கள். ஆனால் இந்த சாதனையின் பின்னால் ஒளிந்திருக்கும் வேதனையை அரசோ அதிகாரிகளோ அறிந்ததாக தெரியவில்லை! குடியை அரசே ஊக்குவிப்பது மிகவும் கேவலமான விஷயம் அன்றோ! எத்தனை கூலித்தொழிலாளர்கள் தான் சம்பாதித்த காசை டாஸ்மாக்கில் கப்பம் செலுத்தி விட்டு வீட்டுக்கு வெறுங்கையோடு செல்கிறார்கள் தெரியுமா? எத்தனை தாய்மார்கள், பெண்கள் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்? இதையெல்லாம் கொஞ்சம் கூட உணராமல் மேலும் மேலும் குடியை ஊக்குவித்து வரும் தேசத்தில் காந்தியவாதியான சசிபெருமாளையும் அவர் நடத்தும் போராட்டத்தையும் அரசு ஒரு பொருட்டாக கருதாதுதான்.
  இதோ கார்டூனிஸ்ட் பாலா பகிர்ந்ததை பகிர்ந்து கொள்கிறேன்! இதைப்படித்து ஒரு சில குடிமகன்களாவது திருந்தினால் சரி!
    காந்தியவாதிபெரியவர்சசிபெருமாள்கடந்தஜனவரி 30 தேதிபூரணமதுவிலக்கைவலியுறுத்திமெரீனாகாந்திசிலையின்கீழ்உண்ணாவிரதம்இருந்தார். உடனேபொதுமக்களுக்குஇடையூறுவிளைவித்ததாகக்கூறிகைதுசெய்யப்பட்டார். ( கவர்மெண்டேசாராயவியாபாரம்செய்வதுபொதுமக்களுக்குஇடையூறுஇல்லையாம்.. ) சிறையிலும்உண்ணாவிரதத்தைதொடரவேமருத்துவமனையில்சேர்க்கப்பட்டார்.

இப்போதுவிடுவிக்கப்பட்டிருக்கும்நிலையில் 29 வதுநாளாகதொடர்ந்துமதுவிலக்கைவலியுறுத்திசசிபெருமாள்உண்ணாவிரதம்இருந்துவருகிறார். அவரதுஉடல்நிலைமோசமடைந்துவருகிறது.

அவரதுகோரிக்கைக்குவலுசேர்க்கநம்ஆதரவுஅவசியம். அதேசமயம்இப்போதுஇந்தியாவில்ஆட்சிசெய்பவர்கள்வெள்ளையர்கள்அல்ல.. ஜனநாயகமன்னர்கள். வெள்ளையர்களிடம்உண்ணாவிரத்திற்குஇருந்தமரியாதைஇந்தகளவாணிகளிடம்துளியும்கிடையாது..

செத்தாசெத்துட்டுப்போ.. அப்பாடா.. தொல்லைவிட்டதுஎன்றுதான்இந்தயோக்கியர்கள்நினைப்பார்கள்என்பதைகாந்தியவாதிகள்புரிந்துகொள்ளவேண்டும். அதனால்அரசின்சாராயவியாபாரத்திற்குஎதிரானமக்கள்போராட்டத்தைவேறுவடிவில்தொடருவோம்

   காந்தியவாதி சசி பெருமாளின் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம்! மது அரக்கனின் பிடியில் இருந்து தமிழகத்தை விடுவிப்போம்!

தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!




Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!