புகைப்பட ஹைக்கூ 19
அழகைக் கண்டதும்
ஆடுகிறது
ஆடு!
இரை கண்டதும்
இறப்பை மறந்து ஆட்டம் போட்டது
ஆடு!
துள்ளி குதித்தாலும்
தள்ளிப்போகாது பலி
ஆடு!
வெட்ட வெளியில்
நடனம்!
வெளுத்துக்கட்டியது ஆடு!
விலைபோகா பயிர்களை
உண்டு விலைபோனது
ஆடு!
விளைநிலத்தில் ஆடு!
வீதியில்
உழவன்!
வளர்ந்ததும்
வெட்டப்படுகிறது
ஆடு!
எட்டிப்பார்த்தும்
எட்டவில்லை உணவு
ஆட்டிற்கு!
உணவாக
உண்கிறது
ஆடு!
மரணத் துள்ளலுக்கு முன்
மகிழ்ச்சித் துள்ளல்
ஆடு- பயிர்
காய்ந்த பயிர்கள்
கழுவின
ஆட்டின் பசி!