Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

விஜய வருஷத்திய பஞ்சாங்க பலன்!

$
0
0

விஜய வருஷத்திய பஞ்சாங்க பலன்!


தமிழ் புத்தாண்டு சர்ச்சைகளில் மீண்டு மீண்டும் சித்திரை ஒன்றாம் நாள் தமிழ் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சர்ச்சைகள் இருக்கட்டும் இந்த தமிழ் ஆண்டு மக்களுக்கு எப்படி இருக்கும்? மழை பெய்யுமா? சுபிட்சம் நிலவுமா? என்ற கேள்விகளுக்கு விஜய வருட பஞ்சாங்கங்கள் பலன்கள் சொல்கின்றன.
   ஆற்காடு ஸ்ரீ சீதாராம ஹனுமான் சர்வ முகூர்த்த பஞ்சாங்கம் கூறும் பலன்கள் சிலவற்றை கீழே தொடர்ந்து காண்போம்.
  விஜய வருடத்திற்கு கலியப்தம் 5114. நவகிரக ஆதிபத்யங்களில் ராஜா-குரு மந்திரி சனி, சேனாதிபதி சனி, அர்க்காதிபதி சனி, மேகாதிபதி சனி, தான்யாதிபதி சந்திரன், இரஸாதிபதி குரு பசுக்களின் நாயகர் கோபாலன் இந்த விஜய வருடத்திற்கு நவ நாயகர்களாக வருவதால் இந்த ஆண்டு நல்ல மழை பெய்யும். மத்திய-மாநில அரசுகளில் புதிய புதிய திட்டங்கள் அமுலுக்கு வரும். முக்கிய பதவியில் இருக்கும் தலைவர்களுக்கு பதவியிலே பயம் ஏற்படும். இந்த ஆண்டு 11 புயல்கள் உருவாகி அதில் ஆறு புயல்கள் பலவீனமடையும். இந்த ஆண்டு மக்களுக்கு தெய்வ வழிபாட்டில் அதிக நம்பிக்கை உண்டாகும். தங்கம், கல்நகைகள், வெள்ளி, மாணிக்கம், புஷ்ப ராகம் விலைகள் சிறிது குறையும் வாய்ப்பு உண்டு. பணவீக்கம் குறையும்.கட்டிட சாமான்கள் விலை ஏறும்.இந்திய ராணுவம் வலுப்பெறும்.பொதுவாக நல்ல மழை பொழியும்.
 விஜய வருஷத்திய வெண்பா.
  மண்ணில் விசய வருட மழைமிகுதி
  எண்ணுசிறு தானியங்க ளெங்குமே-நண்ணும்
  பயம் பெருகி நொந்து பரிவாரமெல்லாம்
  நயங்களின்றி வாடுமென நாட்டு.

பலன்: இந்த விஜய வருசத்தில் நல்ல மழை பெய்து தானியங்கள் நன்கு விளையும். பயிர்களில் விஷப்பூச்சிகள் குறையும். அரசு அதிகாரிகள் மக்களுக்கு நன்மை செய்வார்கள். வடதேசத்தில் சிலரினால் பிரிவினை ஏற்படும். எங்கும் ஊற்று பெறுக்கினால் புஞ்சை தானியம் விளைச்சல் அதிகரிக்கும். உணவுக்கட்டுப்பாடு நீங்கும் பஞ்சம் குறையும்.தினமலர் நாளிதழில் வந்துள்ள பலன்கள் கீழே
தமிழ்புத்தாண்டுபிறக்கும்வேளை: ஏப்.14ல்விஜயதமிழ்புத்தாண்டுகொண்டாடப்படுகிறது. ஆனாலும், ஏப்.13 சனிக்கிழமைவளர்பிறைசதுர்த்தி, கார்த்திகைநட்சத்திரம்அமிர்தயோகவேளையில்இரவு 11.52 தனுசுலக்னத்திலேயேபிறந்துவிடுகிறது. புத்தாண்டுபிறக்கும்நேரத்தின்அடிப்படையில், ஆண்டுமுழுதும்நல்லமழைபொழியும்என்றும், விவசாயிகள்நல்லமகசூல்காண்பர்என்றும்பஞ்சாங்கங்களில்கூறப்பட்டுள்ளது. தமிழ்ஆண்டுஅறுபதில்விஜய 27வதுஆண்டாகும். சுபகிரகமானகுரு, இந்தஆண்டின்ராஜாவாகஇருக்கிறார். குருவும், சந்திரனும்பலமாகஇருப்பதால்இவ்வாண்டில்ராஜயோகம்பெறுபவர்கள்எண்ணிக்கைஉயரும்.
புத்தாண்டில்என்னநடக்கும்?
*பெண்குழந்தைகள்கல்வியில்சிறந்துவிளங்குவர்.
*
குருவும்சந்திரனும்சம்மந்தப்படுவதால்தட்பவெப்பநிலைசீராகஇருக்கும்.
*
ஆடிமுதல்மார்கழிவரையில்நல்லமழையும், தைமுதல்ஆனிவரையில்சுமாரானமழையும்பெய்யும்.
*
மக்களிடம்தெய்வபக்திமேலோங்கும்.
*
பழையகோயில்கள்புதுப்பிக்கப்பட்டுகும்பாபிஷேகம்நடந்தேறும்.
*
ஏற்றுமதிஇறக்குமதிவியாபாரம்சிறப்பாகநடக்கும். ரியல்எஸ்டேட்வியாபாரம்வளர்ச்சிபெறும். நிலமதிப்புஅதிகரிக்கும்.
*
தங்கம், வெள்ளிவிலைஏறுவதும்இறங்குவதுமாகநிலையில்லாமல்இருக்கும்.
*
மளிகை, தானியம், அரிசி, இயந்திரம், வாகனங்கள், எலக்ட்ரானிக்ஸ்பொருட்கள்விலைஉயரும். வாசனைதிரவியங்களின்விலைகுறையும்.
*
மணல்பற்றாக்குறைநீங்கும்.
*
வங்கிகடனுதவியால்மக்கள்நல்வாழ்வுகாண்பர்.
*
தொழிலாளர்களுக்குநல்லவேலைவாய்ப்புகிடைக்கும். மின்சாரதடைஅதிகரிக்கும்.
*
அதிகாரிகள்கருப்புபணத்தைஅதிகளவில்கண்டுபிடிப்பர்.
*
மத்திய,மாநிலஅரசுகளுக்கிடை@கருத்துவேறுபாடுஅதிகரிக்கும்.
*
ஏழைமக்களுக்குஅரசுசலுகைகளைவாரிவழங்கும்.
*
வனவளம்அதிகரிப்பதால்விலங்குகள்நிம்மதியாகவாழும்.
*
அயல்நாட்டுமோகம்குறையும். மீனவர்களின்பிரச்னைதீரஅரசுநடவடிக்கைஎடுக்கும்.
 நன்றி: தினமலர்
விஜய வருடம் நல்ல பலன்களை நல்கிட ஆண்டவனை வணங்கிடுவோம்! நன்றி!

Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!