அன்பிற்கினிய தளிர் வாசக நண்பர்களே! எனக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி! உங்களுக்கும் மகிழ்ச்சி தரும் என்று எண்ணுகிறேன்! நான் பூஜிக்கும் எங்கள் ஊர் ஆலயம் ஶ்ரீ ஆனந்த வல்லி அம்பிகை சமேத ஶ்ரீ வாலீஸ்வரர் கோயில் பற்றி இன்றைய மாலை மலர் ஆன்மீக மலரில் வெளிவந்துள்ளது.
ஒரு வாரம் முன்பு மாலை மலரில் இருந்து என்னை தொடர்பு கொண்டு ஆலயம் பற்றியும் வரலாறும் கேட்டார்கள். உடனே வரலாற்றையும் சில புகைப்படங்களையும் இ- மெயிலில் அனுப்பி வைத்தேன்.
அதன் பின்பு எந்த தகவலும் இல்லை! நானே தொடர்பு கொண்ட போதும் பதில் கிடைக்க வில்லை! இன்று சற்று முன் மாலைமலரில் வெளிவந்துள்ளதாக பக்தர் ஒருவர் போன் செய்து சொன்னார் மகிழ்ச்சி அடைந்தேன். இணையத்தில் தேடி படித்து விட்டேன்!
நான் எழுதி அனுப்பியது முழுமையாக வந்துள்ளது. இதே போன்று ஒரு மகிழ்ச்சியை 2005ம் வருடம் குமுதம் பக்தியில் வெளிவந்தபோது அடைந்தேன்! மீண்டும் அதே மகிழ்ச்சி!
நீங்களும் படித்து மகிழ கீழே லின்க் தந்துள்ளேன்! உங்கள் கருத்துக்களை பகிருங்கள்! நன்றி!