Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

பிரபல பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் ஆற்றில் குதித்து தற்கொலை! இசை உலகம் அதிர்ச்சி!

$
0
0
பிரபல கர்நாடக இசைப்பாடகியும் திரைப்பட பின்னனி பாடகியுமான நித்யஸ்ரீ  யின் கணவரான திரு மகாதேவன். கோட்டூர்புரம் அருகே அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து நித்யஸ்ரீயும்  தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். உறவினர்கள் காப்பாற்றி சிகிச்சை அளித்தனர்.                                                                                                       பின்னர் அவர் கோட்டூர் புரம் வந்து கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். இந்த திடீர் தற்கொலையால் கர்நாடக இசை உலகம் மட்டும் அல்ல திரை உலகம் அவரது ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நித்யஸ்ரீ திரையில் பாடுவது அவரது கணவருக்கு பிடிக்க வில்லை! அதுமட்டும் அல்லாமல் சபாக்களில் பாடுவதும் பிடிக்க வில்லை இது குறித்து நடந்த உரசலே தற்கொலைக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தகவல் வந்துள்ளது. நித்யஸ்ரீ பிரபல கர்நாடக இசைப்பாடகி டி.கே பட்டம்மாளின் பேத்தி ஆவார். பிரபலமான இவரது வாழ்க்கையும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை போல சோக மயமாகி போனது  வருத்தத்துக்கு உரியது. இந்த துயரில் இருந்து மீண்டு அவர் மீண்டும் இசைக்குயிலாக  அவதரிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோமாக!

Viewing all articles
Browse latest Browse all 1537

Latest Images

Trending Articles



Latest Images