Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

துன்பங்கள் போக்கி இன்பமளிக்கும் சங்கடஹரசதுர்த்தி விரதம்!

$
0
0
துன்பங்கள் போக்கி இன்பமளிக்கும் சங்கடஹரசதுர்த்தி விரதம்!

  முழு முதல் கடவுளாம் விநாயகப் பெருமான் பிறந்த தினம் சதுர்த்தி. ஒரு மாதத்தில் இரண்டு சதுர்த்திகள் வருகின்றன. வளர்பிறையில் வருவது மாத சதுர்த்தி, தேய்பிறையில்வருவது சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது
    சங்கடம் என்றால் துன்பம், ஹர என்றால் நீக்குதல் என்று பொருள். துன்பங்களை நீக்கும் சதுர்த்தி என்று பொருள். விநாயகருக்குரிய இந்த விரதத்தை அனுஷ்டித்தால் நமது துன்பங்கள் பனிபோல விலகி இன்பங்கள் நம்மை சூழும். மிகவும் பழமைவாய்ந்த விரதங்களுள் ஒன்று சங்கட ஹர சதுர்த்தி விரதம்.
     ஒரு முறை விநாயகரின் சாபத்துக்கு ஆளான சந்திரன் இந்த விரதத்தை அனுஷ்டித்து சாபநிவர்த்தி பெற்றதுடன் விநாயகரின் சிரசிலும் குடிகொண்டான்.விநாயகர்ஒருமுறைகைலையில்ஆனந்தமாய்த்திருநடனம்செய்துகொண்டிருந்தவேளையில்அங்கேவந்தசந்திரன், விநாயகரின்பெருத்ததொந்தியையும், துதிக்கையையும், அவற்றைத்தூக்கிக்கொண்டுஅவர்ஆடுவதையும்பார்த்துவிட்டுப்பெரிதாய்ச்சிரித்தான். அவன்தன்னைப்பார்த்துஎள்ளிநகையாடியதைக்கண்டவிநாயகர்அவனின்கலைகள்தேய்ந்துபோனவை, தேய்ந்தவையாகவேஇருக்கும்எனக்கூறவே, மனம்வருந்தியசந்திரன்அதற்குப்பரிகாரமாகவும், தன்னுடையதவற்றைநீக்கவும்சதுர்த்திதினத்தன்றுவிரதம்இருந்துவிநாயகரின்அருளைப்பெற்றான்.
அப்போதுவிநாயகர்சந்திரனிடம், “இன்றுமுதல்சுக்கிலபட்சச்சதுர்த்திகளில்உன்னைப்பார்ப்பவர்களுக்குப்பாவம்சம்பவிக்கும், எனவும், அதைப்போக்கிக்கொள்ளச்சதுர்த்திவிரதம்இருந்துபூஜித்தால்அவர்களுக்குநன்மையேவிளையும்!எனவும்சொன்னார். இந்தவிரதமேசங்கடஹரசதுர்த்திவிரதம்எனஅழைக்கப்படுகிறது. 
 மங்களகாரகனான அங்காரகன் இந்த விரதம் தோன்ற காரணம் ஆனவன்.
  வசிஷ்டர் வம்சத்தில் தோன்றிய பரத்வாஜ மஹரிஷிக்கு பிறந்தவன் அங்காரகன். பரத்வாஜர் ஓர் தேவலோகமங்கையுடன் கூடி அங்காரகனை பெற்றார். தேவலோகமங்கை தேவலோகம் சென்றுவிட பரத்வாஜர் குழந்தையை நர்மதை நதிக்கரையில் விட்டு தவம் புரிய சென்றுவிட்டார். குழந்தையை பூமாதேவி வளர்த்து வந்தாள். செந்நிறமாக ஜொலித்தமையால் அங்காரகன் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தாள்.
     அங்காரகன் வளர்ந்தது தனது தந்தை யார் என்று வினவினான். உன்னுடைய தந்தை பரத்வாஜ முனிவர் என்று கூறிய பூமாதேவி பரத்வாஜரிடம் அங்காரகனை அழைத்துச்சென்றாள். அங்காரகனுக்கு உபநயனம் முதலியன செய்து வைத்தார் முனிவர்.
   ஒருநாள் அங்காரகன் தான் சர்வ கலைகளிலும் வல்லமை பெற என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். விநாயகரை குறித்து தவம் செய்யுமாறு முனிவர் கூறினார். அங்காரகனும் விநாயகர் மூலமந்திரம் ஜெபித்து அவரைக் குறித்து தவம் இருந்தான். மாசிமாதம் கிருஷ்ணபட்சத்து சதுர்த்தியில் அங்காரகனுக்கு விநாயகர் காட்சி அளித்து என்ன வரம் வேண்டும் என்று வினவினார்.
      லம்போதரனேநான்அமிர்தம்அருந்திஅமரனாகஆசைப்படுகிறேன். சர்வமங்களமானஉருவத்தோடுதங்களைதரிசித்தஎன்னைஅனைவரும்மங்களன்என்றுஅழைக்கவேண்டும். அதுமட்டுமல்ல, இந்தசதுர்த்திநன்னாளைஅனைவரும்கொண்டாடவேண்டும். இந்நாளில்தங்களைவணங்கிவழிபடும்பக்தர்களின்துயரங்களைநீக்கிஅருளவேண்டும். மேலும்என்னைவணங்கும்அடியவர்களுக்குசெல்வம்அளிக்கும்கிரகமாகநான்மிளரவேண்டும்என்றபலவரங்களைவேண்டினான். கனிவானபார்வையுடன்நோக்கியகணபதிஅன்பனே! நீகேட்டஎல்லாவரங்களையும்தருகிறேன். அத்துடன்என்னிடம்நீஅனுகிரகம்பெற்றஇந்தசதுர்த்திநாள்சங்கடஹரசதுர்த்தியாகவும்போற்றப்படும். இந்தநாளில்திரிகரணசுத்தியுடன்என்னைவழிபடுபவர்களுக்குசங்கடங்களைஅடியோடுவிலக்கிவிடுவேன்என்றுஅருளிமறைந்தார். 


   இப்படித்தான் சங்கட ஹர சதுர்த்தி விரதம் தோன்றியது. இந்த சதுர்த்தி செவ்வாய் கிழமைகளில் வந்தால் மிகவும் சிறப்பானது.
  இந்த விரதம் அனுஷ்டிப்பது எப்படி?
    இந்த நாளில் அதிகாலையில் நீராடி உபவாசம் இருக்க வேண்டும். பால் பழம் மட்டும் அருந்தி உணவருந்தாமல் இருக்க வேண்டும். விநாயகர் நாமாவளிகளையும் பாமாலைகளையும் ஸ்லோகங்களையும் பாராயணம் செய்ய வேண்டும். மாலையில் அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று விநாயகரை தரிசிக்க வேண்டும். விநாயகரை 8 அல்லது நான்கு முறை வலம் வர வேண்டும். அன்று இரவு சந்திரன் உதித்ததும் சந்திரனையும் விநாயகரையும் வணங்கி விரதத்தை முடிக்க வேண்டும்.
    பின்னர் உணவருந்தி இந்த விரதத்தை முடிக்கவேண்டும். இந்த விரதம் மாசி மாதம் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தி தினத்தில் தொடங்கி அனுஷ்டிப்பது சிறப்பாகும்.


இவ்விரதத்தைகடைப்பிடிப்பதால்நீண்டநாட்களாகதீராமல்உள்ளநோய்தீரும். வாழ்க்கையில்தொடர்ந்துபலவகைதுன்பங்களுக்குஉள்ளாகிறவர்கள்  நிலையானசந்தோஷத்தைஅடையமுடியும். மிகச்சிறப்பானகல்விஅறிவு, புத்திகூர்மை, நீண்டஆயுள், நிலையானசெல்வம், நன்மக்கட்பேறுஎனபலவிதமான  நன்மைகளைஅடையமுடியும். சனிதோஷத்திற்குஉள்ளாகிறவர்கள்இவ்விரதத்தைஅனுஷ்டித்தால், சனியின்தாக்கம்பெரும்பகுதிகுறையும்.

    இந்த விரதத்தை அனுஷ்டித்து விநாயகப்பெருமானின் அருளினைப் பெறுவோமாக!

Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!