Quantcast
Channel: தளிர்
Viewing all 1537 articles
Browse latest View live

நாலு காலு பட்ட மன்னா! பாப்பா மலர்!

$
0
0
 நாலு காலு பட்ட மன்னா! பாப்பா மலர்!


      வேளகாபுரம் என்ற அழகிய கிராமத்துல ஒருத்தர் தனது வளர்ப்புக் கிடாயை குளிப்பாட்ட கம்மாயிக்கு ஓட்டிக்கிட்டு போனாரு. அந்த கிடா நல்லா தீனி திண்ணு கொழுத்து கிடந்தது. தண்ணீய கண்டதும் அதுக்கு சந்தோசம் பிடிபடலை! கம்மாயில குதிச்சு கும்மாளம் போட ஆரம்பிச்சிடுச்சு!
      ஆடு இந்த குதியாட்டம் போடறதை கரையோரமா வளைக்குள்ளயிருந்த நண்டு மெல்ல வெளியே வந்து எட்டிப்பார்த்துச்சு!  ஆடு சந்தோசமா  நாலுகாலும் எம்பி எம்பி குதிச்சு விளையாடிச்சு! அப்படி விளையாடறப்ப நண்டு வளையை மிதிச்சு நாசம் பண்ணிடுச்சு! நல்ல வேளை நண்டு அதன் காலிலே மிதிபடாம தப்பிருச்சு!
     தன் வளையை நாசம் பண்ண ஆட்டின் மீது நண்டுக்கு கோபம்னா கோபம் அப்படி ஒரு கோபம் வந்துருச்சு! “ நாலு காலு பட்ட மன்னா! உனக்கு நாளைக்கு இந்நேரம் சாவு!” ன்னு கிடாயை பார்த்து எரிச்சலா கோபத்தோட சாபம் கொடுத்தது.
  அடடா! இதென்ன வம்பா போயிருச்சே! சந்தோசமா கொஞ்ச நேரம் ஆட்டம் போட்டதுக்கு நண்டு இப்படி சாபம் கொடுக்குதேன்னு கிடாய்க்கு ரொம்ப பயமா போயிருச்சு! இருந்தாலும் அதை வெளியே காட்டிக்காம கெத்தா நண்டை பார்த்து கேட்டுச்சு! “ மண்ணுக்குள்ளிருக்கும் மகராசா! உனக்கு யார் சொன்னாங்க?” அப்படின்னு கேட்டுச்சு.
     நண்டுக்கு பெருமை பிடிபடலை! நம்ம சாபம் பலிக்க போவுதுன்னு ஆடு பயந்துருச்சுன்னு சந்தோசமா சிரிச்சுகிட்டே பதில் சொல்லுச்சு.
    “குடல் இல்லாத அண்ணன் கூப்புட்டு சொன்னான்” அப்படின்னு பதில் சொல்லுச்சு!
   அந்த நேரம் “டும் டும் டும்” னு கொட்டு முழக்கம் கேட்டுச்சு! அன்னிக்கு அந்த ஊர் சாமிக்கு பொங்கல் திருவிழா.
    கிடாய்க்கு உதறல் எடுத்திருச்சு! நண்டு சொன்னதை ஞாபகப்படுத்தி பார்த்துச்சு! குடல் இல்லாத அண்ணண் னா யாரு?
   அதுக்கு புரிஞ்சு போச்சு பளீர்னு!
   கொட்டு சத்தம் அடிக்கும் டும் டும் தான் குடல் இல்லாத அண்ணன். மறுநாளு ஊர் கோயில்ல பொங்கல் இடற நாளு, அன்னிக்கு கொழுத்த கிடாவை வெட்டி பொங்க வைப்பாங்க! தன்னோட சாவைத்தான் இப்படி கொட்டடிச்சு சொல்றாங்க! ன்னு அதுக்கு புரிஞ்சதும் ஒவ்வொரு கொட்டு சத்தமும் அதன் காதில் பயங்கரமாய் எமன் வரான் எமன் வரான்!ன்னு ஒலிச்சுது!
   அதனோட சந்தோஷம் பூரா அடங்கி போயிருச்சு!
   என்னை மன்னிச்சுருங்க நண்டாரே! ன்னு சொல்லிட்டு மவுனமாக நடையை கட்டிருச்சு அந்த ஆடு!
  அதுக்கப்புறம் அந்த ஆடு திரும்பவே இல்லை!
நீதி:
நம்முடைய மகிழ்ச்சி அடுத்தவர்களை சங்கடப்படுத்தாமல் இருக்க வேண்டும்!
(செவிவழிக் கதை)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 24

$
0
0
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 24
 சென்ற வாரம் ஆகுபெயர்கள் குறித்து கொஞ்சம் அறிந்துகொண்டோம்! இந்த வாரம் இலக்கியவகைச்சொற்களை பார்க்க போகிறோம். அதற்கு முன் சொல் எத்தனைவகைப்படும் என்று அறிந்துகொள்வோமா?
  சொல் நான்கு வகைப்படும் என்று  சின்ன வயதில் படித்திருப்போம்! நினைவுக்கு வருகிறதா?
  1.பெயர்ச்சொல் 2. வினைச்சொல் 3.இடைச்சொல், 4. உரிச்சொல். 
 இவை இலக்கண வகையால் பிரிவுபட்டன.
  இலக்கியவகையால் சொற்கள் நால்வகைப்படும் அவை 1. இயற்சொல், 2. திரிசொல் 3. திசைச்சொல் 4. வட சொல் என  நால்வகைப்படும்.
 1.இயற்சொல் :  எல்லோருக்கும் பொருள் விளங்கும் வகையில் இயல்பாய் அமைந்த தமிழ்ச்சொல் இயற்சொல் எனப்படும். உதாரணம் தீ, காடு, மரம், புத்தகம், அருவி
 காற்று, நிலவு, ஞாயிறு, பலகைஇந்த சொற்களும் எளிதில் பொருள் விளங்கக்கூடிய பெயர்சொற்கள். இவை பெயர் இயற்சொற்கள் எனப்படும்.
படித்தான், உறங்கினான், உண்டான், வந்தான்இவையும் எளிதில் விளங்க கூடிய வினைச்சொற்கள் இவை வினை இயற்சொற்கள் எனப்படும்.

2.திரிசொல்: கற்றவர்களுக்கு மட்டுமே விளங்கக்கூடிய சொற்கள் திரிசொல் எனப்படும்.
   பீலி, உகிர்,ஆழி இந்த சொற்களின் பொருள் கற்றாருக்கு மட்டுமே தெரியும் பாமரருக்குத்தெரியாது.
இவை திரிசொல்லாகும்.பீலி என்றால் மயில் தோகை, உகிர் என்றால் நகம், ஆழி என்றால் கடல் மற்றும் சக்கரம்.இதை கற்றவர் அறிவர்.
 திரிசொல்லும் பெயர் திரிசொல், வினை திரிசொல் என இருவகைப்படும்.
 எயிறு- பல், வேய்- மூங்கில்:  மடி- சோம்பல்; நல்குரவு- வறுமைஎன்பன பெயர் திரிசொல்கள்.
வினவினான்-கேட்டான், விளித்தான்-அழைத்தான், நோக்கினார்-பார்த்தார் போன்றவை வினைத்திரிச்சொற்கள் 

3. திசைச்சொல்;  தமிழ்நாட்டை சுற்றியுள்ள பிறபகுதிகளில் இருந்து தமிழில் வழங்கும் சொற்கள் திசைச்சொற்கள்.
  ( எ.கா) கேணி -கிணறு , பெற்றம்- பசு

4. வடமொழி சொற்கள் திரிந்தும் திரியாமலும் தமிழ்மொழியில் வந்து வழங்குமானால் அவை வடசொல் எனப்படும்.
    கமலம்- தாமரை, விஷம்- நஞ்சு, புஷ்பம்-மலர் இவை வடமொழி கலந்த வடசொற்கள்

  இலக்கியவகைச் சொற்களை அறிந்து கொண்டோம்! இனி இனிக்கும் இலக்கிய சுவையை பருகுவோமா?

      ஐங்குறுநூறு பாடல் ஒன்றை பார்ப்போம்!
     ஊரன் ஆயினும் ஊரன் அல்லனே!
   மணலாடு மலிர்நிறை விரும்பிய ஒண்தழைப்
   புனலாடு மகளிர்க்கு புணர்துணை உதவும்
   வேழம் மூதூர் ஊரன்
   ஊரானாயினும் ஊரன் அல்லன்னே!
  
   இப்பாடல்  ஐந்து திணைகளுள் ஒன்றான மருதத் திணைக்குரிய பாடல் எழுதியவர் ஓரம் போகியார். இது வேழப்பத்து என்னும் துறையின் கீழ் வரும். மருத நில கருப்பொருள்களில் வேழம் ஒன்று. வேழம் பற்றிய கருப்பொருள் கொண்ட பத்து பாடல்களை கொண்டது வேழப்பத்து.

     தலைவனோடு தலைவி முரண்பட தோழி, ஏன் இந்த வேறுபாடு என்று தலைவியிடம் கேட்டபோது தலைவி சொல்வதாக அமைந்த பாடல். இங்கு வேழம் என்பது தலைவனையும் யானையையும் குறிக்கும்.
   மணலை அளைத்தபடி வருகின்ற பெருவெள்ளத்தில் விரும்பிய ஒள்ளிய தழையை உடுத்து புனலாடும் மகளிர்க்கு புணை துணையினை செய்யும் வேழம் நிறைந்த மூதூரை உடைய ஊரன் உறைதலால் தலைவன் நம் ஊரில் உள்ளவனே ஆயினும் புறதொழுகுதலால் ஊரன் அல்லாதவன் ஆனான்.
       புது வெள்ளத்தில் பரத்தையர் மலர்களாலும் தழையாலும் செய்யப்பட்ட ஒருவகை ஆடையை அணிந்து புணலாடுவர். அதற்கு உதவியாக வேழமான யானை இலை தழைகளை பறித்துப் போடும். அத்தகைய ஊரை சேர்ந்தவன் தலைவன். அதாவது பரத்தியரோடு சேர்ந்துள்ளான். அதனால் அவன் ஊரில் இருந்தும் இல்லை என்று தலைவி வருத்தம் மேலிட கூறினாள். தலைவன் ஒழுங்கீனன், புறத்தொழுக்கம் உடையவன் அதனால் அவனோடு வேறுபாடு கொண்டாள் என்று குறிப்பாக உணர்த்துகின்றாள்.

 மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் இன்னும் பல செய்திகளோடு சந்திப்போம்! இப்பதிவு குறித்த உங்கள் கருத்துரைகள் பதிவை மேம்படுத்த ஏதுவாக இருக்கும். உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்! ஊக்கப்படுத்துங்கள்! மிக்க நன்றி!

அனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா! அதிர்ச்சி தரும் தகவல்!

$
0
0
கரகாட்டக்காரன் படத்தில் அறிமுகமாகி அன்றைய கிராமத்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் கனகா. மாஜி ஹீரோயின் தேவிகாவின் மகள். தமிழ், மலையாளத்தில் உள்ள அத்தனை டாப் ஹீரோக்களுக்களுடன் ஜோடியாக நடித்தார். தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் 75 படங்கள் வரை ஹீரோயினாக நடித்தார். 2004ம் ஆண்டு குஸ்ருதி என்ற மலையாளப்படத்தில் கடைசியாக நடித்தார். தமிழில் கடைசியாக நடித்தது சிம்மராசி.

அம்மா தேவிகாவின் மரணத்திற்கு பிறகு கனகாவின் வாழ்க்கையே திசை மாறியது. மகளை வெளி உலகம் தெரியாமல் பொத்தி பொத்தி வளர்த்தார். அதனால் அவரது மறைவுக்கு பிறகு கனகாவால் வாழ்க்கையை தனியாக எதிர்கொள்ள முடியவில்லை. அம்மா தேவிகாவால் புறக்கணிக்கப்பட்ட அவரது தந்தையும் அவருக்கு ஆறுதலாக இல்லை. 

முத்துக்குமார்  என்ற வெளிநாட்டு இன்ஜினீயரை திருமணம் செய்து கொண்டார். அந்த வாழ்க்கையும் கனகாவுக்கு இனிக்கவில்லை. யாரைப் பார்த்தாலும் வெறுப்பு, பயம் அவருக்கு. அதனால் ஒரு மனநோயாளி போன்றே நடந்து கொள்ள ஆரம்பித்தார். தந்தை தன்னை கொல்ல முயற்சிப்பதாகவும், சொத்துக்களை பறிக்க முயற்சிப்பதாகவும் வழக்கு போட்டார். தன் கணவரை காணவில்லை கண்டுபிடித்து தாருங்கள் என்று போலீசில் புகார் செய்தார். ஆவி அமுதா என் கணவரை பிடித்து வைத்துக் கொண்டு தர மறுக்கிறார் என்று புகார் செய்தார். ஆவி அமுதா, கனகா மீது தொடுத்த மானநஷ்ட வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனது வீட்டை காலிசெய்து விட்டு சென்று விட்டார் கனகா. அவர் எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்றே தெரியாமலே இருந்தது. இப்போது அவரைப் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது. 
கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் கனகா கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஓராண்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். புற்றுநோய் குணப்படுத்த முடியாத அளவுக்கு முற்றிவிட்டதால் கைவிடப்பட்ட புற்றுநோயாளிகளை அவர்களின் மரணகாலம் வரை வைத்து பராமரிக்கும் மருத்துவனைக்கு மாற்றப்பட்டு விட்டார். இப்போது அந்த  மருத்துவமனையில் கனகா மரணத்தை எதிர்பார்த்து புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருக்கிறார்.

கனகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவரை பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்ளகூட யாரும் இல்லை. அவர் யாரையும் அனுமதிக்கவில்லை என்று அந்த மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இப்போது அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை நிர்வாகத்திடம் தன்னை சந்திக்க யாருக்கும் அனுமதி தரக்கூடாது என்று கனகா கூறியிருக்கிறார். இதனால் மருத்துவமனை நிர்வாகம் கனகாவை யாரும் சந்திக்க அனுமதிப்பதில்லை என்று கூறுகிறார்கள். 

கருப்பு, வெள்ளை காலத்து கனவு கன்னியின் மகள், வண்ண சினிமா காலத்தில் மின்னிய நாயகி இப்போது யாருமற்றவராக மரணப் படுக்கையில்...!! 

செய்தி: தினமலர்;                                                                                                                                                                                                      டிஸ்கி:
 நடிகை கனகாவின் இந்த நிலை மிகவும் வருந்தற்குரியது! ஒருகாலத்தில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக வாழ்ந்தவர்! சரியான பராமரிப்பு இன்றி இப்படி அனாதையாக இருக்கிறார் என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. கரகாட்டக்காரனையும், கனகாவையும் மறக்க முடியுமா? சிறந்த நடிகையாக இருந்தும் சிறந்த வாழ்க்கை அமையாதது வருத்தமே! தளிரில் சினிமாச்செய்திகளை காப்பி பேஸ்ட் பண்ணுவதை நிறுத்தி வருகிறேன்! இருந்தாலும் இந்த செய்தி எனக்கு அதிர்ச்சியாக இருந்தமையால்  பகிர்கிறேன்!

இலவசமாய் குடிநீர் வழங்கும் ஆட்டோ டிரைவர்!

$
0
0
தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள 32 அறங்களில், தண்ணீர் பந்தல் வைத்தலும் ஒன்று. சென்னையில் கடந்த கோடையில் தண்ணீர் பந்தல்கள் வைக்கப்பட்ட விதம், பத்திரிகைகளில் பல விதமாக வெளிவந்தது.ஆனால், தண்ணீர் பந்தலை வித்தியாசமாக வைக்க முடியும் என, நிரூபித்துள்ளார் ஆட்டோ ஓட்டுனர் ரகுபதி,29. மதுராந்தகம், ஓணம்பாக்கம் தாலுகா அருகில் உள்ள பவுந்தன் கருணை கிராமம். இவரது தந்தை பக்தவத்சலம், மில் ஊழியர். அம்மா கோவிந்தம்மாள். எட்டாவது வரை படித்துள்ள ரகுபதி,தற்போது சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் தங்கி,திருவான்மியூரில், ஆட்டோ ஓட்டி வருகிறார். ஆட்டோவில் குடிநீர் வைத்துள்ளதோடு, 'மக்களுக்காக நடமாடும் இலவச குடிநீர்' என, தமிழ், ஆங்கிலம், இந்தியில் எழுதி வைத்து உள்ளார்.

தண்ணி கிடைக்கல...:


ஆட்டோவில் இலவச குடிநீர் வைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது குறித்து இவ்வாறு கூறுகிறார்:நான் ரெண்டு வருஷமா ஆட்டோ ஓட்டு றேன். ஆட்டோ ஓட்டும் போது எங்கேயாவது இறங்கி ஓட்டலில் தண்ணி கேட்டா, இது கேன் தண்ணி, காசு குடுத்து வாங்கினது... தர முடியாதுன்னு சொல்வாங்க.பெரிய ஓட்டலில் சாப்பிட்டாலும், தனியா கேனில் தண்ணி எடுக்க கூடாதும்பாங்க... எனக்கு மட்டும் இல்ல, யாருக்குமே எந்த பெரிய ஓட்டல்லேயும், இலவசமா தண்ணி கிடைக்கிறதில்ல. ஒரு நாளைக்கு 30, 40 ஆயிரம் ரூபாய் வரை, லாபம் சம்பாதிக்கிற ஓட்டல்களிலேயே இலவச தண்ணி கிடையாது.ஒரு நாளைக்கு ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் சம்பாதிக்கிற நாமளே இலவசமா, தண்ணி தந்தா என்னன்னு தோணிச்சு. நாம செய்ய ஆரம்பிச்சா, யாராவது அதை பார்த்து செய்வாங்க இல்லியா? ஆறு மாசத்துக்கு முன்னாடி நான் சொந்தமா ஆட்டோ வாங்கின பிறகு, என்னோட சொந்த ஆட்டோவில் தண்ணி வசதிய வெச்சுட்டேன். தாகத்திற்கு தண்ணி கூட தரமா, சம்பாதிக்கிற பணத்தை வைச்சு இவங்கஎல்லாம் என்ன பண்ண போறாங்கன்னு தெரியல. இவ்வாறு அவர் தன் மன ஓட்டத்தை வெளிப்படையாக சொன்னார்.


ரூ 4 ஆயிரம் :


இதற்கு எவ்வளவு செலவுசெய்கிறார்? அதையும் அவரே சொல்கிறார்:'டிரைவர் சீட்' பக்கத்தில் கம்பி போட்டு வைக்கிறதுக்கும், திருவள்ளூவர் படம் ஸ்டிக்கர் ஒட்டி, பேர் எழுதுவதற்கும் ஐந்தாயிரம் ரூபாய் வரை செலவானது.ஒரு நாளைக்கு 30 ரூபாய் கேன், மூணு கேன் ஆகும். வாரத்தில் ஒரு நாள் 70 ரூபாய் பிஸ்லெரி கேன் மூணு வைப்பேன். அது தான், பார்க்க சுத்தமாக இருக்கும்.தண்ணிக்கு ஒரு மாதத்திற்கு நாலாயிரம் ரூபாய் வரை செலவாகும். மே மாதத்தில் தண்ணி கேன் வைக்கிறேன். இதை குடிப்பதோடு, பாட்டில்லேயும் பிடிச்சுட்டு போலாம்.இவ்வாறு ரகுபதி தெரிவித்தார்.இந்த குடிநீர் கேன், ரகுபதிக்கு சமூகத்தில் தனிப்பட்ட அடையாளத்தை பெற்று தந்துள்ளது.

தனது சேவைக்கு மக்களின் வரவேற்பு குறித்து, சிலாகித்து பேசுகிறார்:எல்லாரும் பாரட்டுறாங்க. ஒருமுறை ஒரு கர்ப்பிணி பெண்ணை, சோழிங்கநல்லூரில் இருந்து பெசன்ட் நகர் வரை அழைச்சிட்டு போய் விட்டு வந்தேன். அவங்க, இப்போ ரெகுலர் சவாரி வராங்க. இதுவரை, 10 பயணிகள் என்னோட போன் நம்பரை வாங்கி வைச்சி கூப்பிடுறாங்க.நாலு பேர், அவங்க விசிட்டிங் கார்டு கொடுத்து எந்த உதவி வேணுமானாலும் கூப்பிடுன்னு சொல்லிருக்காங்க... ரோட்டுல போகும் போது பலரும் கை காட்டி, கட்டை விரலை உசத்தி காண்பிச்சுட்டு போவாங்க. ஒருமுறை, ஈஞ்சம்பாக்கத்துல இருக்கிற காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ., காரில் சாலையை கடந்து போகும் போது, பக்கத்துல வந்து கட்டை விரலை உயர்த்தி வாழ்த்திட்டு போனாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அவங்க பேர் தெரியல (விஜயதாரணி).கிழக்கு கடற்கரை சாலையில் தண்ணி குடிக்கும் போது, போக்குவரத்து எஸ்.ஐ., ஒருத்தர், 'உன் ஆட்டோவுக்கு இந்த லைன்ல கேசே கிடையாது' ன்னு சொன்னார்.


வரவேற்பு:


நெகிழ்ச்சியுடன் சொன்ன ரகுபதி, மும்மொழியில் எழுதி வைத்திருப்பது, வள்ளுவர் படத்தின் பின்னணி குறித்து உற்சாகம்குறையாமல் சொல்கிறார்: சென்னையில வட மாநில தொழிலாளர்கள் நிறைய பேர் இருக்குறாங்க சார். அவங்களுக்கு தமிழ், ஆங்கிலம், படிக்கவும் தெரியாது. யார்கிட்டயும் போய் பேசவும் மாட்டானுங்க. இந்தியில எழுதியிருந்தா அவங்களே வந்து குடிப்பாங்க. அதுக்காக, மூணு மொழிகள்ள எழுதியிருக்கேன். இலவச குடிநீர் கேன் பெயரை, ஒரு படம் போட்டு வைத்தால், நல்லா இருக்குமேன்னு தோணிச்சு. எல்லாருக்கும் பொதுவான படம் போடலாம்னு நினைச்சேன். அதனால், திருவள்ளுவர் படம் போட்டேன்.ஆட்டோ ஓட்டுனர்கள் மத்தியில் எப்படிவரவேற்பு இருந்தது? அதையும் அவரே சொல்கிறார்... செலவ எப்படி சமாளிக்கிறேன்னு எல்லாரும்கேட்பாங்க. செம்மஞ்சேரி, இ.சி.ஆரில் ரெண்டு ஆட்டோ டிரைவர்கள், நாங்களும் இந்த மாதிரி தண்ணீர் வைக்கிறோம்?னு சொன்னாங்க.அரக்கோணத்துல ஒரு ஆட்டோ டிரைவர், இதை எங்க ஊர்ல செய்றேன்னு சொன்னார். அவர் ஆரம்பிச்சிருப்பார்.எனக்கு இப்ப வர்ற பணம் போதும் சார்.ஆட்டோவை, பாதி பணம் கட்டி தான் எடுத்தேன், மீதி மாத வாடகையில் தான் கட்டி வருகிறேன். எனக்கு இந்த செலவு ஒரு விஷயம் இல்லை. நான் சமாளிக்க முடியும்ன்னு நினைக்கிறேன்.தண்ணி வைச்சதால, பயணிகளின் வருகை கூடியிருக்கிறதான்னு தெரியல, ஆனா கொஞ்சம் நட்போட இருக்காங்க... அந்த வித்தியாசம் தெரியுது.

ஜனங்ககிட்ட, நல்ல விஷயத்தை நேரடியாக கொண்டு போகனும்னு தான் என் விருப்பம். என்ன மாதிரி சாதாரண ஆளே, இந்த மாதிரி தண்ணீர் வைக்க முடியுதுன்னா, நாட்ல வசதியா இருக்குறவங்க ஏதாவது நல்லது செய்ய முடியாதா என்ன?

Click Here
நன்றி: தினமலர்;                                                                                                                                         டிஸ்கி: நல்ல செய்தி கண்ணுல பட்டது பகிர்கிறேன்! ஆட்டோக்காரர்கள் என்றாலே அடாவடி பேர்வழிகள் என்று நினைக்கிறோம்! இப்படிப்பட்ட சில நல்ல உள்ளங்களும் நம்மிடையேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! இவர்களை ஊக்கப்படுத்தி பாராட்டவாவது செய்யலாம் அல்லவா?  பாராட்டுக்கள் ரகுபதி! உங்கள் சேவை தொடரட்டும்! வாழ்த்துக்கள்!

புகைப்பட ஹைக்கூ 43

$
0
0
புகைப்பட ஹைக்கூ 43


  பேரணிக்கு அல்ல
  ஊறுணிக்கு அணிவகுப்பு
  கால்நடைகள்!

 ஊர்வலம் வந்தன
 உணவைத்தேடி!
 மாடுகள்!

 ஒரே கொள்கையில்
  பேரணி!
உணவைத்தேடி மாடுகள்!

தீவனம் தேடி
தீயில் ஊர்வலம்
மாடுகள்!

அடிதடி கலவரம் இல்லா
அமைதி ஊர்வலம்!
மாடுகள்!

காடுகள் வீடுகளாகையில்
மாடுகள் பெயர்ந்தன
இரையைத்தேடி!

தள்ளுமுள்ளு இல்லா
ஊர்வலம்
மாடுகள்!

இரைதேடி
நடைபயின்றன
கால்நடைகள்!

மேய்ச்சலைத்தேடி
மேய்ந்தன
கால்நடைகள்!

‘கா’வைத்தேடி
கால்நடைப்பயணம்
கால்நடைகள்!

உடையாத கூட்டணி
அமைத்தன
கால்நடைகள்!

தொலைந்தது இயற்கை
தேடின
கால்நடைகள்!

நடை பயிற்சியில்
கால்நடைகள்!
நலியும் இயற்கை!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


புகைப்பட ஹைக்கூ 44

$
0
0
புகைப்பட ஹைக்கூ 44

   1.வெளிப்பட்ட
   மிருகத்திடம் அடிபட்டது
   மனிதம்!

  2. வலி தெரிந்தும்
  வழி தெரியவில்லை!
  பாவம் குதிரை!

 3 மனிதம்
  மரணிக்கையில் பிறக்கிறது
  மிருகம்!

 4.ஓடாய் தேய்ந்து
  முடங்கிப் போனது
  குதிரை!

 5. பிழைக்க உழைத்ததில்
  பிழை!
  அடிபட்டது குதிரை!

 6 காசு பிரதானமானதில்
   மறைந்து போனது
   காருண்யம்!

 7 ஓடுங்கும் ஜீவனை
   பிடுங்கும்
   மிருகம்!

 8 தடம் மாறியதால்
   தடுமாறிப் போனது
   குதிரையின் வாழ்வு!

 9 வேடிக்கை பீடித்ததில்
    வேதனை மறந்த மனிதர்கள்
    பாவம் குதிரை!

 10  இரக்கமில்லா அரக்கன்
    இனி மீளுமா
    குதிரை!

 11   வீரம் மிகுகையில்
      விரைந்து குறைகிறது
      ஈரம்!

 12  வாலிபனுக்கு
      உறைக்கவில்லை!
      வாயில்லா குதிரையின் வலி

  13 லாபம் சுமந்தவன்
     பாவம் சுமக்கிறான்
     பாவம் பாறம் சுமந்த குதிரை!

   14 காய்ந்தமையால் சாய்ந்தது
      மேய்ச்சலில்லா
      குதிரை!
        
   15 நடுவீதியில் பாடம் கற்றது
      நன்றி மறந்தவனை
      சுமந்தகுதிரை!

   16 அடி வைக்க முடியாதால்
      அடி படுகிறது
      அடிபட்ட குதிரை! 

17. வற்றிப்போனது
வயிறு மட்டுமல்ல!
 ஈரமும்!

    18. பசி விரட்டல் முன்
       பணிந்து போனது
       எசமான் கட்டளை!

    19 கல்நெஞ்சம்
       கருணை பஞ்சம்
       அடிபட்டது குதிரை!

    20 ஊமைகள் ஆன மனிதர்கள்
       ஊனப்பட்டது
       குதிரை!
            
   தங்கள் வருகைக்கு நன்றி!  பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


அனுமார் ஆன ஹர்ஷத் அலி! கதம்ப சோறு

$
0
0
கதம்ப சோறு! 

தெலுங்கானா உதயம்!
         




கிட்டத்தட்ட 50 வருடங்களாக தனி மாநில கோரிக்கை வைத்து பல்வேறு போராட்டங்களையும் உயிர் தியாகங்களையும் செய்த தெலுங்கானா மக்களின் தனி மாநில கோரிக்கை நேற்று 30-5-2013 நிறைவேறியது. ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க நேற்று ஆளும் ஐக்கிய முன்னனி கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவும் காங்கிரஸ் செயற்குழுவும் ஒப்புதல் அளித்துவிட்டது. ஆந்திராவின் அடிலாபாத், மேடக், மெகபூப்நகர் ஐதராபாத் உள்ளிட்ட பத்து மாவட்டங்களை பிரித்து தனித் தெலுங்கான அமையப்போகிறது. இதற்கு ஒப்புதல் இப்போது கிடைத்தாலும் அதிகாரப்பூர்வமாக பிரித்து மாநிலம் அமைய இன்னும் ஆறு மாதங்கள் ஆகும். இதில் இன்னொரு பிரச்சனை ஐதராபாத் யாருக்கு? என்று ஒருபோட்டி காத்திருக்கிறது. காங்கிரஸ் அரசுக்கு பிரச்சனையாக இருந்த தெலுங்கான உதயமானாலும் இன்னும் சில மாநிலங்களில்  விதர்பா, கூர்க்காலாந்து, போடோ லேண்ட், பந்தல்கண்ட், பூர்வாஞ்சல் பகுதி மக்கள் தங்களை தனி மாநிலமாக அறிவிக்க கோரி வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திராவில் தெலுங்கான அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை கனகாவுக்கு என்ன ஆச்சு?
     
  சில தினங்கள் முன்பு நடிகை கனகா புற்று நோயால் அவதிப்படுவதாகவும் பாலக்காட்டில் ஒரு மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது. நம் தளத்திலும் இதை பகிர்ந்தேன். திறமையான ஒரு நடிகைக்கு இவ்வாறு நேர்ந்துவிட்டதே என்று வருந்தினேன். நேற்று ஆனந்தவிகடன் உள்ளிட்ட சில தளங்களும் சில சேனல்களும் நடிகை கனகா இறந்துவிட்டதாக செய்தி பரப்பின. இந்த நிலையில் ஆர்.ஏ புரத்தில் உள்ள வீட்டில் நடிகை கனகா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் தான் நலமாக இருப்பதாகவும். புற்றுநோய் எதுவும் தம்மை பீடிக்கவில்லை என்றும் கூறிய அவர் ஆண்களை பிடிக்காமையால் தனித்து வாழ்வதாகவும் மனிதர்களைவிட விலங்குகள் பாசமாக இருப்பதால் பூனை, கோழிகளை வளர்ப்பு பிராணிகளாக வளர்த்து வருவதாகவும் கூறிய அவர், தந்தை என்று கூறிக்கொள்ளும் தேவதாஸ் என்பவர்தான் தன்னைக் குறித்து இப்படி வீண் வதந்திகளை பரப்பி வருவதாக குற்றம் சாட்டினார். நான் நல்லபடியாக இருப்பதாக தெரிவித்த அவர் இது இப்போது மக்களுக்கு தெரிந்துவிட்டதில் மகிழ்ச்சியடைவதாகவும் தன்னை விசாரித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.
      இதை படித்தவுடன் சொத்துக்காக நடிகைகளின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் மனதை வருத்தியது. திரையில் மின்னும் பல நட்சத்திரங்கள் சொந்தவாழ்வில் மின்ன முடியாமல் மங்கி போவது விதியின் விளையாட்டா? தெரியவில்லை!

 அனுமார் ஆன ஹர்ஷத்!


        பஞ்சாப் மாநிலம் பதேஹ்கர் மாவட்டத்தில் நபிபூர் என்ற கிராமத்தில் 2001ம் ஆண்டு முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார் ஹர்ஷத் அலி! பிறக்கும் போதே இடுப்பின் பின் பகுதியில் வால் போன்ற அமைப்பு இருந்தது. ஹர்ஷத்தின் தந்தை இறந்த நிலையில் தாய் சல்மாவும் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டார். ஹர்ஷத்தின் தாத்தா ஹர்ஷத்தின் வாலை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடியுமா என மருத்துவர்களிடம் ஆலோசித்தார். மருத்துவர்கள் அது உயிருக்கு ஆபத்தாக முடியும் என்று சொல்லிவிட்டனர்.
     இந்த நிலையில் ஹர்ஷத் வளர வாலும் வளர்ந்து கொண்டே வந்தது. இப்போது 12 வயதாகும் ஹர்ஷத் மற்ற பிள்ளைகளுடன் பழகவும் விளையாடவும் முடியாமல்  வருத்தத்தில் உள்ளான். இந்த நிலையில் ஹர்ஷத் முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தாலும் அவரது வால் அவரை கடவுளாக்கி விட்டது. ஹனுமன் என்று சுற்றுபக்கத்தில் உள்ளவர்கள் அவனை வணங்கி வருகின்றனர். வால் மட்டும் இல்லாமல் உள்ளங்காலில் தாமரைச் சின்னம் உள்ளிட்ட  ஒன்பது தெய்வீகக் குறிகள் உள்ளதாக  பொதுமக்கள் கூறுகின்றனர். இது செய்தித்தாள்களிலும் உள்ளூர் சேனல்களிலும் பரவ இப்போது நிறைய பேர் ஹர்ஷத்தை ஹனுமானின் அவதாரம் என்று சொல்லி வழிபட்டு ஆசிபெற்று செல்கின்றனராம்.
      விந்தையாக இருந்தாலும் ஒரு சமூக நல்லினக்கத்தை இது ஏற்படுத்தினால் நல்லதுதானே!

முடி திருத்தும் பி.காம் பட்டதாரிப்பெண்.

            திருப்பூரில் பல்லடத்தில் முனியப்பன் கோவில் எதிரே சலூன் கடை வைத்து முடிதிருத்துகிறார் பிகாம் படித்த பட்டதாரி பெண் தேவி.அரசு வேலைக்கு முயற்சித்து கிடைக்காமல் போனதால் குடும்பத்தொழிலான இந்த தொழிலை செய்வதாக கூறும் தேவி ஏழ்மையான குடும்பம் தந்தைக்கு நோய் பாதிப்பினால் கடை நடத்த முடியாத சூழலில் துணிந்து இந்த முடிவை எடுத்ததாக கூறுகிறார். தனியார் நிதி நிறுவனத்தில் கடை அமைக்க 50 ஆயிரம் கடன் வாங்கி உள்ளதாகவும் அதனை திருப்பிச் செலுத்த அந்த நிறுவனத்தில் பகல் நேரத்தில் காலை 9மணி முதல் 5 மணி வரை வேலை செய்வதாகவும் காலை 6.00 முதல் 9.00 வரையும் மாலை 6.00 முதல் இரவு 10.00 வரை கடையில் முடி திருத்துவதாகவும் கூறுகிறார் தேவி.
      முதலில் ஆண்கள் கடைக்கு வர கூச்சப்பட்டதாகவும் இப்போது தனது தொழில் திறமையால்  நிறைய பேர் வருவதாகவும். கடனை அடைத்து முடித்ததும் முழு நேரம் தொழில் செய்யப் போவதாகவும் தெரிவித்தார் தேவி.
    தன்னம்பிக்கை மனுஷியான தேவியை வாழ்த்துவோம்!

  வீட்டுக்குறிப்புக்கள்!

    சீரகத்தை வறுத்து பொடித்து நீரில் கொதிக்க வைத்து தினமும் 200 மில்லி முதல் 300 மில்லிவரை பாலூட்டும் தாய்மார்கள் பருகிவர பால் சுரப்பு அதிகரிக்கும்.
காலையில் எழுந்ததும் நல்லெண்ணை இரண்டு சொட்டுடன் சிறிது தண்ணீர் கலந்து முகத்துக்கும் கைகால்களுக்கும் தடவி வரவும். பனிவெடிப்பு ஏற்படாது. முகம் பொலிவுடன் இருக்கும்.
நீலகிரித்தைலம் சுத்தமானதா கலப்படமா என கண்டுபிடிக்க அந்த பாட்டிலை தலைகீழாக கவிழ்த்தால் குமிழ்கள் வந்தால் அது கலப்படம். வராமல் இருந்தால் அது சுத்தமானது என்று அறியலாம்.
 எலுமிச்சம் பழத்தை ஒரு நிமிடம் மைக்ரோ அவனில் வைத்து பிழிந்தால் நிறைய சாறு வரும்.
நெல்லி வற்றல் சந்தனத்தூள் தனியா மூன்றையும் தண்ணீரில் ஊறவைத்தபின் வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்பு குறையும்.
ஜவ்வரிசியை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
புண் பொடுகுக்கு வேப்பிலையை அரைத்து தலையில் தேய்த்து ஊறவிட்டு குளித்தால் பொடுகுப் புண் குணமாகும்.

வேடிக்கை எப்படி செய்ய வேண்டும்?

     இரு பையன்கள் ஒரு ஏரி ஓரமாக போய்க் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் பணக்கார வீட்டுப்பிள்ளை, மற்றவன் ஏழைச்சிறுவன். ஏரியோரத்தில் ஒரு ஜோடி செருப்புக்கள் இருப்பதை இருவரும் பார்த்தனர். தூரத்தில் ஒரு விவசாயி கை கால் அலம்பிக் கொண்டு இருப்பதையும் பார்த்தனர். உடனே இருவரும் ஒரு வேடிக்கை செய்யத்தீர்மானித்தனர். பணக்கார பையன் சொன்னான் “இந்த செருப்பை வீசியெறிந்துவிடுவோம். விவசாயி வந்து பார்த்து அங்கு மிங்கும் தேடி ஓடுவான். மிரள மிரள விழிப்பான். நமக்கு நல்ல வேடிக்கையாக இருக்கும்..” இதை ஏழைப்பையன் மறுத்தான். அப்பா... உனக்கு இப்படி ஒரு செருப்பு தொலைந்தால் உடனேயே வேறு செருப்பு வாங்க சக்தியுண்டு அவனுக்கு தொலைந்துவிட்டால் அவன் ஆயுட்காலம் முழுவதும் வெறும் காலில்தான் நடக்க வேண்டும் இதல்ல வேடிக்கை! நான் சொல்கிறேன் பாரு! முதலாவது செருப்பை கீழே வை! உன் ஜேபியிலிருருந்து ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து அதன் மேல் வை! நாம் அந்த மரத்தின் மீது ஒளிந்து கொள்வோம் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்! என்றான் ஏழைச்சிறுவன்.
     இருவரும் ஒளிந்து கொள்ள அந்த ஏழை விவசாயி  வந்து செருப்பை மாட்டிக் கொள்ளப் போக அதனுள் ஒரு ரூபாய் இருப்பதை பார்த்தான். எப்படி ரூபாய் வந்ததென்று திகைத்து சுற்றும் முற்றும் பார்த்தான் ஒரு வரையும் காணாத படியால் ஆண்டவன் தான் பணத்தை கொடுத்ததாக எண்ணி அதை கண்ணில் ஒற்றிக் கொண்டான் கூப்பிய கரங்களுடன்  ‘ஆண்டவனே! ஏழைக்கு இரங்கும் கருணா மூர்த்தி..” என்றான்
   ஏழைப்பையன் பணக்கார பையனை பார்த்து ஒரு ஒரு இடி இடித்து, ‘பார்த்தாயா! உன்னை கருணா மூர்த்தி என்கிறான். நீ செருப்பை தூக்கி எறிந்திருந்தால் அவன் என்ன பாடு பட்டிருப்பான் இப்போ பாரு அவனுக்கும் சந்தோஷம்! நமக்கும் ஆனந்தம்! இப்படித்தான் வேடிக்கை செய்ய வேண்டும் என்று சொல்லி சிரித்துக் கொண்டே போயினர்.
                           1949ல் என்.எஸ் கிருஷ்ணன் பேசிய வானொலி உரையில் இருந்து வாரமலர் சுட்டதை நான் சுட்டேன்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

கடலை வித்து இருபத்தஞ்சாயிரம் கோடி சம்பாதிச்ச தலைவர்! ஜோக்ஸ்!

$
0
0
சிரிக்க வைத்த சிரிப்புக்கள் பகுதி 9




1.   மதுவிலக்குன்னா தலைவருக்கு என்னன்னெ தெரியலை!
எப்படி?
மின்வெட்டு நேரங்களில் வீட்டுக்கு ஒரு மது ‘விளக்கு’ அரசு தந்தா வெளிச்சமா இருக்குமேங்கிறாரு!
                           வினோதினி
2.     மன்னர் இப்போது போதையில் இருக்கிறார் என்று எப்படி சொல்கிறீர்?
பார் முரசு கொட்டட்டும் என்று அறிவிக்கிறாரே!
                           எம்.ஏ.நிவேதா
3.   நம்மக் கட்சிக்கு புத்துயிர் வரப்போகுதுன்னு எப்படி சொல்றே?
மகளிர் அணித்தலைவி முழுகாம இருக்காங்களாம்!
                          ஆறுமுகம்.
4.   கணவன் மனைவி சண்டை நாலு சுவருக்கு நடுவுலதான் இருக்கணும்!
அப்போ தப்பிச்சு ஓடக்கூட எனக்கு உரிமை இல்லையா?
                          ஏ. இக்பால்.
5. ஜெயில்ல இருக்கறதை கூட தலைவர் பெருமையா சொல்லிக்கிறாரே எப்படி?
 போலீஸ் பாதுகாப்புல இருக்கேங்கிறாரே!
                            பா. முத்துராஜ்.
5.   குடிமக்களின் நலன் கருதி ஒரு தொழிற்சாலை துவங்குங்கன்னு சொன்னதை தலைவர் தப்பா புரிஞ்சிகிட்டார்!
6.   எப்படி?
ஊறுகாய் கம்பெனி ஆரம்பிச்சிட்டார்!
                     என். சண்முகம்.
7.   கோமா ஸ்டேஜ்ல இருந்த எங்க தலைவரை எப்படி டாக்டர் பேச வச்சீங்க?
கடைசி முயற்சியா அவர் முன் மைக்கை நீட்டினோம் பேசிட்டார்!
                             அதிரை புகாரி
8.   நீங்க படிக்கும் போது கண்ணாடி போட்டுக்கங்க!
நான் படிச்சு முடிச்சுட்டு இப்ப வேலைக்கு போயிக்கிட்டு இருக்கேனே டாக்டர்!
                            லதா சாந்தி.
9.   அவர் ஏன் படிக்கும் போது நெளியறாரு!
புத்தகப்புழுவாம்!
                      எஸ். செந்தில்
10.பார்க்கிறதுக்கு ஒல்லியா இருக்காரு! இவரைப்போய் குத்துச்சண்டை சாம்பியன்னு சொல்றீங்களே!
உள்குத்து பண்றதுல இவர் ஒரு நிபுணருங்க!
                    என்.குமார்.
11.சேவல் கூவறதுக்கு முன்னாடியே எழுந்து என் பையன் வேலையை ஆரம்பிச்சிடுவான்!
அப்படி என்ன வேலை?
கோழி திருடறதுதான்!
                வி. வள்ளி மணாளன்
12.அவர் போலி டாக்டருன்னு எப்படி சொல்றே?
மார்ச்சுவரியிலே ‘பாடியை’ பாக்க வாங்கன்னு கூப்பிட்டா ஏன் அங்க பனியன் கிடையாதான்னு கேக்கறாரே!
                        பி. இக்பால்
13.தலைவர் அகிம்சாவாதியா இருக்கலாம் அதுக்காக இப்படியா?
ஏன் என்னாச்சு?
ஆயுத எழுத்துக்கு தடைகோரி வழக்கு போட்டிருக்காரே!
                           யாழ்நிலா
14.பொய் சொல்லும் போட்டி ஆரம்பித்த முதல் வினாடியே முதல் போட்டியாளனுக்கே அமைச்சர் பரிசு வழங்கி விட்டாராமே எப்படி?
மன்னரைப் பார்த்து ‘மாவீரனே’ என்று ஆரம்பித்தானாம்!
                              வெ.ராஜாராமன்.
15.எதிரி நாட்டு மன்னன் மீது நம்ம மன்னர் ஏன் கோபமாய் இருக்காரு?
இப்போதெல்லாம் சதைப்பற்று இல்லாத மெலிந்த புறாவையே தூது அனுப்புகிறாராம்!
                    எஸ்.டிசோசா.
16.மன்னா! தங்களை போல இளவரசரும் வாளை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்!
சபாஷ் போருக்கா?
ஹி.. ஹி.. பேரிச்சம் பழம் வாங்க மன்னா!
                      என்.உஷாதேவி
17.எதிரி மன்னனின் தலையை சீவிட்டு வாங்கன்னு நீங்க மன்னரிடம் சொல்லியிருக்க கூடாது மகாராணி!
ஏன் இப்ப என்ன ஆச்சு?
ஒரு சீப்பை கையில் எடுத்துகிட்டு வேகமா போய்கிட்டு இருக்கார்!
                     ராசி.
18.கடலை வித்து இருபத்தஞ்சாயிரம் கோடி சம்பாதிச்சேன்னு தலைவர் சொன்னப்ப நம்பலை!
எப்படி நம்பினே?
அரபிக் கடலையும் வங்கக் கடலையும் யாரோ ஒரு இளிச்ச வாயன் கிட்ட வித்திருக்காரு!
                      தீ. ஆதவன்.
19.டார்லிங்! நாளைக்கு நம்ம கல்யாண நாள்.. இதுவரைக்கும் நான் பார்க்காத இடத்துக்கு என்னைக் கூட்டிட்டு போங்க!
வா செல்லம்! கிச்சனுக்கு போகலாம்!
                         எம்.விக்னேஷ்.
20.குண்டு பல்பை யூஸ் பண்ணக் கூடாதுன்னு சொல்றாங்க தலைவரே!
சோடா பாட்டில் சைக்கிள் செயின்னு யூஸ் பண்ணுங்கய்யா!
                                         க.சுப்புராஜ்.

நன்றி! தினமலர்-வாரமலர்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!




படித்தது பத்தாம் வகுப்பு; பேசப்போவது ஐ.நா.,சபை இளைஞர் மாநாட்டில்!

$
0
0
""பத்து மார்க் குறைஞ்சதுக்கெல்லாம் இப்போ "சூசைடு' பண்ணிக்கிறாங்க பசங்க. பத்தாம் வகுப்புல நான் எடுத்த மொத்த மார்க்கே 150தான்; ஒரு பாடத்துலயும் "பாஸ்' ஆகலை; அதுவரைக்கும் எப்படி "பெயில்' ஆகாமப் படிச்சீங்கன்னு கேக்குறீங்களா? டீச்சர்களுக்கு மத்த பசங்க "டீ' வாங்கிட்டு வந்தா, சூடே இருக்காது; ஆனா, நான் வாங்குன நொடியில, "சிட்டா' பறந்து வந்து "ஹாட்டா' கொடுப்பேன். அதுக்காகவே, ஒன்பதாங்கிளாஸ் வரைக்கும் என்னைய "பாஸ்' போட்டு விட்டாங்க. எந்த வேலை செஞ்சாலும், அதை ஈடுபாட்டோட செய்றதுதான் என்னோட வழக்கம். அந்த ஈடுபாடுதான், ஐ.நா.,சபை இளைஞர்கள் மாநாட்டுல, எனக்குப் பேசுற வாய்ப்பை வாங்கிக் கொடுத்திருக்கு...'' என, யதார்த்தமாய் பேசுகிறார் நித்யானந்தன் 41. ஏதோ, பத்தாம் வகுப்பில் "பெயில்' ஆகி, அதன்பின் படித்து, பெரிய பொறுப்புக்கு வந்ததால், ஐ.நா., சபை இளைஞர்கள் மாநாட்டில், அவரைப் பேச அழைத்திருப்பார்கள் என்று, அவசரப்பட்டு யோசிக்க வேண்டாம். இப்போது வரையிலும், அவரது அதிகபட்ச கல்வித் தகுதியே அதுதான். அப்புறம் எப்படி சாத்தியமானது இந்த சாதனைப் பயணம்...?.

""படிப்புதான் வரலையே தவிர, சின்ன வயசுல இருந்தே ஊருக்கு ஏதாவது செய்யணும்கிற ஆசை நிறையவே இருந்துச்சு. எய்ட்ஸ் விழிப்புணர்வு பணியிலதான் என்னோட சமூகசேவை ஆரம்பிச்சது. கோவை மாவட்டத்துல 440 கிராமங்கள்ல எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம் பண்ணுனேன். அப்ப இருந்தே, நான் செய்யுற எல்லா வேலையையும் "டாக்குமென்ட்' பண்ண ஆரம்பிச்சேன். அதைப் பார்த்துட்டு, கலெக்டர் முருகானந்தம் பாராட்டுனாரு. அடுத்ததா மகளிர் சுய உதவிக்குழு, இளைஞர் சுய உதவிக்குழு அமைக்கிற பொறுப்பு கிடைச்சது. மகளிர், இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கிற நிகழ்ச்சிகள் நிறைய நடத்துவேன். ஊர் ஊர்ன்னு அலைஞ்சு, அடிக்கடி "லீவு' போட்டதுல, நான் வேலை பார்த்த கம்பெனியில என்னை 7 தடவை"சஸ்பெண்ட்' பண்ணிட்டாங்க. கடைசியா, "டிஸ்மிஸ்' ஆகுற நிலைமையிலதான், எங்க முதலாளி (எல்.எம்.டபிள்யு.,நிறுவனம்) ஜெயவர்த்தனவேலு சாரைப் போய்ப் பார்த்து, "இந்த வேலையெல்லாம் நான் செய்யுறேன்'னு சொன்னேன். அவர் அதெல்லாம் பார்த்துட்டு, "நீ நாட்டுக்கு வேலை பாரு. உனக்கு நான் சம்பளம் கொடுக்கிறேன்'னு சொல்லி அனுப்பிட்டாரு. அதுலயிருந்து முழு நேரமும் ஊர் வேலைதான்...'' என, தனது பணிக்கு சாட்சியம் சொல்லும் "கனமான' ஆவணங்களைப் புரட்டிக் காண்பித்தபடியே, பேசுகிறார் நித்யானந்தன். பெற்றோர், மனைவி, இரு குழந்தைகளுடன் கோவை சிங்காநல்லூரில் வசிக்கும் இவருக்கு இன்று வரையிலும் வறுமைதான் அடையாளம். இதுவரை, தனது மனைவி கவிதாவின் நகையை 17 முறை அடகு வைத்திருப்பதையும் ஆவணப்படுத்தியிருக்கிறார். இலக்குகளோ, எதிர்பார்ப்புகளோ வைக்காமல் இவர் செய்த சமூகசேவை, எப்படியோ மத்திய அரசின் உளவுத்துறையை எட்டியிருக்கிறது. அவர்கள் வந்து, இவரைப் பற்றியும், இவரது குடும்பத்தைப் பற்றியும் விசாரித்துச் சென்றனர்.

அவரும் அதை மறந்து விட்ட நிலையில், கடந்த ஆண்டில் அமெரிக்காவிலிருந்து வந்தது அழைப்பு. வாஷிங்டன்னில் கிளிண்டன், ஹிலாரி கிளிண்டன் உட்பட 196 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற சர்வதேச எய்ட்ஸ் கருத்தரங்கில், இந்தியாவின் சார்பில் பங்கேற்றார்; எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பான இவரது ஆய்வுக்கட்டுரையும் சமர்ப்பிக்கப்பட்டது. ஓராண்டு கூட நிறைவடையாத நிலையில், வரும் ஆக.,7, 8 மற்றும் 9 ஆகிய 3 நாட்கள், ஐ.நா.,சபை தலைமையகத்தில் நடக்கவுள்ள ஐ.நா.,சபையின் 12வது இளைஞர்கள் மாநாட்டில், உரையாற்றுவதற்கான அழைப்பு, நித்யானந்தனுக்கு வந்துள்ளது. 26 வயது வரையுள்ளவர்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த இளைஞர்கள் மாநாட்டில், 41 வயதில் பங்கேற்கும் இளைஞர் இவர் மட்டுமே. அங்கு தனது 20 ஆண்டு கால சேவையை விளக்கவுள்ளார் நித்யா. இவருக்கான உரையைத் தயாரிக்க உதவுகிறார், தலைமைச்செயலகத்தில் கல்வித்துறையில் பணியாற்றும் பாலுசாமி. நித்யானந்தனின் இப்போதைய கவனமெல்லாம், மரங்களின் மீதுதான். "சிறுதுளி', "ராக்' அமைப்புகளின் உதவியுடன் அரசூரில் 10 ஏக்கர் பரப்பில் மரப்பூங்காவை விதைத்துள்ள இவர், அடுத்ததாக மயிலம்பட்டி கிராமத்தில் 20 ஏக்கரில் சோலையை உருவாக்க, களம் தயாரித்துக் கொண்டிருக்கிறார். அமெரிக்கா சென்று வந்த பின், காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரைக்கும் அங்கேதான் இருப்பேன் என்று சொல்லும் நித்யானந்தனுக்கு காத்திருக்கின்றன இன்னும் பல கவுரவங்கள். நீங்களும் அழைத்து ஒரு வாழ்த்து சொல்லுங்களேன்...95667 57074.

- எக்ஸ்.செல்வக்குமார் -

நன்றி: தினமலர்

ஆடி மாச நாயகி! நாடி உனை துதிப்போம்! அம்பிகையே!

$
0
0
ஆடி மாச நாயகி! நாடி உனை துதிப்போம்! அம்பிகையே!


அன்ன பூர்ணே ஸதா பூர்ணே சங்கர ப்ராண வல்லபே!
ஞான வைராக்கிய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹிச பார்வதி!

   தனம் தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா
   மனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சமிலா
   இனம் தரும் நல்லனவெல்லாம் தரும் அன்பனரென்ப வர்க்கே
   கனம் தரும் பூங்குழலான் அபிராமி கடைக்கண்களே!

       சிவாலயங்களில் அம்பிகை இறைவனின் பீடத்தில் பிரியாமல் ஒன்றாக இருந்து யோகசக்தியாகவும் அர்த்த மண்டபத்தில் போக சக்தியாகவும் பிரகாரத்தில் வீரசக்தியாகவும் இருந்து அருள் பாலிக்கிறாள்!
  அம்பிகையை வழிபட மாதங்களில் ஆடியும் தையும், வாரங்களில் செவ்வாயும் வெள்ளியும் சிறப்பானது.
  அம்பிகை வழிபாட்டிற்கு திதிகளில் அஷ்டமியும் சதுர்த்தசியும்,பவுர்ணமியும் நட்சத்திரத்தில் உத்திரமும் பூரமும் விசேஷமானது.
   ஒவ்வொரு நாளும் வரும் இரவுக்காலம் அம்பிகை பூஜைக்குரியது. பிரதமை திதியன்று அஸ்தம் நட்சத்திரம் வருமாயின் அன்று வழிபடுவது மிகச்சிறப்பு.
  
காந்திமதி அம்மன் ;

      தமிழ்நாட்டில் எந்த கோயிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பு நெல்லை ஸ்ரீ காந்திமதி அம்மனுக்கு உண்டு இந்த அம்மனின் உருவ அமைப்பு ஒரு காலைத் தூக்கி ஓடிவரும் நிலையில் இருக்கும். இது தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அம்பாள் ஓடிவந்து உதவுவதை குறிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

நத்தம் ஸ்ரீ துர்க்கையம்மன்;

          செங்குன்றம் அடுத்த பஞ்செட்டி நத்தம் கிராமத்தில் வாலீஸ்வரர் ஆலய பிரகாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ துர்க்கையம்மன் விசேசமானது. பொதுவாக ஆலய பிரகாரத்தில் இருக்கும் துர்க்கை சிலைகள் பின்னால் ஜ்வாலை( தீக்கங்குகள்) உடன் இருக்காது. இங்கு அம்மன் ஏழு ஜ்வாலைகளுடன் நின்ற கோலத்தில் உள்ளார்.  இவ்வாறு ஜ்வாலை யுடன் இருந்தால் காளி ரூபமாக வாயில் கோரைப்பற்கள் இருக்கும். இங்கு அவ்வாறு இல்லாமல் சாந்த சொருபமாக காட்சி அளிக்கிறாள். இந்த துர்க்கையை வெள்ளி செவ்வாய் கிழமைகளில் விளக்கேற்றி வழிபாடு செய்ய துயரங்கள் விலகி நன்மை உண்டாகும். திருமணம் கை கூடும் என்பது நம்பிக்கை.

கிழக்கு முகவாயில்:
      கிழக்கு நோக்கி அம்பாள் இருக்கும் வாயில்கள் அம்பாள் தவம் செய்த சிறப்புடையதாக இருக்கும். திருப்பாலைவனம், மாங்காடு, சங்கரன் கோயில் முதலியன அம்பாள் கிழக்கு நோக்கி அமர்ந்த தலங்களாகும்.

நிமிசத்தில் துயர் தீர்க்கும் நிமிஷாம்பாள்:

        முக்த ராஜன் என்னும் அரசன் அம்பிகை பக்தன், சிறப்பாக ஆட்சி செய்த அவனுக்கு தொல்லைக்கொடுத்தான் ஜானுசுமண்டலன் என்னும் அரக்கன்.  அவனது தொல்லை பொறுக்க முடியாமல் அம்பிகையை குறித்து யாகம் செய்தான் முக்தராஜன். யாகத்தில் அம்பிகை தோன்றினாள். முக்தராஜன் தன்னுடைய குறையை கூற அம்பாள் ஜானுசு மண்டலனை பார்த்து ஒருநிமிடம் கண் மூடி திறந்தாள். அந்த கண்ணில் இருந்து வெளிப்பட்ட தீயில் ஜானுசு மண்டலன்  சாம்பலாகிப் போனான். நிமிடத்தில் துயர் தீர்த்த அம்பாள் நிமிஷாம்பாள் என பெயர் பெற்றாள். கர்நாடக மாநிலத்தில் ஸ்ரீரங்க பட்டினம் அருகே கஞ்சம் என்ற இடத்தில் நிமிஷாம்பாள் ஆலயம் உள்ளது. சென்னையில் பிராட்வே காசிசெட்டி தெருவில் உள்ளது நிமிஷாம்பாள் ஆலயம்.
இராஜ இராஜேஸ்வரி!

      உலகையே ஆளும் லோக மாதாவான ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மனை ஆடிமாதத்தில் வழிபடுதல் சிறப்பாகும். அன்னைக்கு தமிழகத்தில் ஆலயங்கள் குறைவு. ராஜராஜேஸ்வரி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள் என்பதால் மகா மேரு சக்கரம் ராஜராஜேஸ்வரி ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். வலது கால் தொங்கவிட்டு இடது காலினை மடக்கி வலது கையில் நீலோத்பல மலருடன் இடது கையில் கரும்பும் பின்னங்கைகளில் பாசம் அங்குசம் ஏந்தி தாமரை மலரில் வீற்றிருப்பவள் ராஜராஜேஸ்வரி!
    லலிதா சகஸ்ரநாமம், அஷ்டோத்திரம், போன்றவைகளால் துதித்து அன்னையை வணங்கிட வேண்டும்.
  ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸனேச்வரி!
 ஸ்ரீ லலிதாம்பிகையே புவனேஸ்வரி!
ஆகம வேத கலாமய ரூபிணி!
அகில சராசர ஜனனி நாராயணி!
நாக கங்கண நடராஜ மனோஹரி!
ஞான வித்யேச்வரி ராஜராஜேஸ்வரி!
   என்ற ஸ்லோகத்தை கூறீயும் அம்பிகையை வழிபடலாம்.
 ராஜ ராஜேஸ்வரி ஆலயம் மதுரை போக்குவரத்து நகரில் அமைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் கூட்டுச்சாலை அருகே கீழ்மேனி கிராமத்திலும் அமைந்துள்ளது.

சப்த கன்னியர்கள்!

      தமிழக இறைவழிபாட்டில் சப்த கன்னியர் வழிபாடு சிறப்பாகும்.  தன்னை ஆராதிக்கும் பெண்களின் மனதில் உள்ள குறைகளை களைவதில் அன்னை கன்னிகா பரமேஸ்வரிக்கு நிகரில்லை என்பது பக்தர்கள் நம்பிக்கை!
    சென்னை பிராட்வேயில் கன்னிகா பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது. சப்த கன்னியர் பூமியில் அவதரித்த கதை ஒவ்வொரு கோயிலிலும் ஒன்று இருக்கும். அன்னையின் அம்சங்களான கன்னிமார் வழிபாடு மிகவும் சிறப்புடையது பழமையானது.
     சிறுவாபுரி முருகன் கோயில் அருகே சப்தகன்னிமார்கள் ஆலயம் சிறப்புற  அமைந்துள்ளது. கிராம காவல் தெய்வமாகவும் உள்ளது.
  
சிறுவாச்சூர் மதுர காளி

  பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. திங்கள் வெள்ளி இரண்டு நாட்கள் மட்டுமே காலை ஒன்பது மணியில் இருந்து ஒரு மணிவரை திறந்திருக்கும் சித்திரை அமாவாசை துவங்கி 15 நாட்கள் சிறுவாச்சூர் மதுரகாளியம்மனுக்கு பிரம்மாண்டமான பிரம்மோற்சவ திருவிழா நடைபெறுகிறது.

அடுத்த வாரம் இன்னும் சில அம்மன்களை தரிசிப்போம்!

எனக்கா வழி இல்லை? பாப்பா மலர்!

$
0
0
எனக்கா வழி இல்லை? பாப்பா மலர்!


     அந்த வீடு பழங்காலத்து வீடு! வாசலில் பெரிய திண்ணை அதற்கடுத்து ரேழி எனப்படும் ஒரு சிறு தாழ்வாரம் அதற்கடுத்து கூடம் முற்றம், அறைகள் பின் வாசல் என நீண்டு இருந்தது. இது மாதிரி வீடுகள் இப்போது கிராமத்தில் எல்லாம் கூட மறைந்துவிட்டது. அந்த மாதிரியான ஒரு அழகான வீட்டின் திண்ணையில் சாய்வாக அமர்ந்து கொண்டு ஒரு தாத்தா தன் பேரன் பேத்திகளுக்கு கதைச் சொல்லிக் கொண்டிருந்தார்.
     இதெல்லாம் இப்போது நாம் கதைகளில்தான் படிக்கிறோம்! பிள்ளைகள் பள்ளியில் இருந்து வந்ததும் டியுசன், அப்புறம் ஹோம் ஒர்க், அப்புறம் கார்டூன் சேனல் என மாறிவிட்டனர் இப்போது. வீடுகளில் பெரியவர்களும் இருப்பதில்லை! அம்மா அப்பாவோடு சரி! அப்படியே ஒன்றிரண்டு ச்வீட்டில் பெரியவர்கள் இருந்தாலும் அவர்களோடு பேச பிள்ளைகள் தயாராக இருப்பதில்லை! எங்கள் காலத்தில் எல்லாம் தாத்தா பாட்டிகள் இந்த மாதிரி இரவு நேரத்திலோ சாயங்கால பொழுதிலோ பேரன் பேத்திகளை அமர்த்திக்க் கொண்டு புராணக் கதைகள், விக்ரமாதித்தன் வேதாளம்,மதனகாமராஜன் கதை என பல சுவையான கதைகளை சொல்லுவார்கள்.
   அப்படி ஒரு தாத்தாதான் இப்போது இந்த கதையில் தன் பிள்ளைகளுக்கு கதை சொல்லிக் கொண்டு இருந்தார். நமக்கு அவர் சொல்லும் கதை தேவையில்லை! அவர் கதை சொல்லும் போது என்ன நடக்கிறது என்று பார்ப்போம்!
      அந்த தாத்தா கதை சொல்லிக் கொண்டிருக்கும் போது அந்த பக்கமாக சுவற்றோரத்தில் ஒரு சிற்றெரும்பு வந்தது. சிற்றெரும்பு என்றாலும் அது மகா கர்வம் பிடித்த எறும்பு. தன்னுடைய ஆற்றல் மீது அதற்கு அபார நம்பிக்கை! அது பிறந்த போது யாரோ சொல்லிவிட்டார்களாம் ஒரு யானையைக் கூட கொல்லக் கூடிய வலிமை நமக்குண்டு என்று. அதனால் அது மிகவும் தெனாவட்டாக நடந்துகொள்ளும். யானையையே வெல்லக் கூடிய நான் யாருக்கு பயப்பட வேண்டும்? என்று மிகவும் வேகமாக ஊர்ந்து வந்தது சிற்றெரும்பு.
    பேரனுக்கு கதைச் சொல்லிக் கொண்டிருந்த தாத்தா தன் முதுகை அந்த சுவற்றில் பதித்திருந்தார். சாய்வாக அமர்ந்திருந்த அவரது முதுகு எறும்புக்கு வழிவிட மறுத்தது. எறும்பால் அந்த தடையை மீறிச் செல்ல முடியவில்லை! சுற்றிக் கொண்டு செல்ல அந்த எறும்புக்கு மனமில்லை!
     எறும்புக்கு கோபம் கோபமாக வந்தது. ஒரு பெரிய யானையையே கொல்லக்கூடிய எனக்கா வழி இல்லை! வழிவிட மறுக்கும் உன்னை என்ன செய்கிறேன் பார்! என்று கறுவியது. தனது சிவந்த கொடுக்கால் தாத்தாவை கடித்தது. சுவாரஸ்யமாக கதைச் சொல்லிக் கொண்டிருந்த தாத்தாவிற்கு எறும்பின் கடி எரிச்சலை ஏற்படுத்தியது.
     சே! சதா இந்த எறும்புகளோட ஒரே ரோதனையா போச்சு! என்று முதுகில் தட்டி எறும்பை பிடித்து எடுத்து நசுக்கிவிட்டார்.
        எறும்பு தன் கர்வத்தால் உயிரை இழந்தது!

   நீதி: அகம்பாவம் ஆளை வீழ்த்தும்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவுகுறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 25

$
0
0
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 25



  அன்பான வாசகர்களே! ஏதோ ஒரு ஆர்வத்தில் தொடங்கிய இந்த பகுதி இன்று 25ஐ எட்டியிருக்கிறது. உங்களின் ஆதரவு இல்லாமல் இத்தனை வாரங்கள் இதை தொடர்ந்திருக்க முடியாது. தமிழின் இலக்கண இலக்கியங்களை தேடி பலரோடு பகிர்ந்து கொள்வதே இப்பகுதியின் நோக்கம்! நான் அறிந்தவற்றை நாலுபேரோடு பகிர்ந்து கொள்வதில் இருக்கும் மகிழ்ச்சி வேறெதிலும் இருக்க முடியாது.
             டிகிரி முடித்து இருந்தாலும் நான் படிக்கும் போது அறியாத இலக்கணங்களை இந்த பகுதிக்காக என்னால் இப்போது தேடிப் படித்து அறிந்துகொள்ள முடிகிறது. முடிந்தவரை அதை எளிமையாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சென்ற பகுதியில் இலக்கியவகை சொற்களை பார்த்தோம். இந்தவாரம் வழக்கு என்பதை பார்க்க போகிறோம். கோர்ட் வழக்கு அல்ல!
    வழக்கு என்பது நம் முன்னோர் வழங்கி வந்தமையை குறிக்கும். நம் முன்னோர்கள் வழக்கமாக சில சொற்களை வழங்கி வந்தனர். அதை நாமும் பின்பற்றி வருகிறோம். அதுவே வழக்கு சொல் ஆயிற்று. இதை இயல்பு வழக்கு தகுதி வழக்கு என்று இருவகையாக பிரிக்கலாம்.
   இயல்பு வழக்கு ஒரு பொருளை சொல்வதற்கு எந்த சொல் இயல்பாக வருகிறதோ அந்த சொல்லாலேயே வழங்குதல் இயல்பு வழக்கு என்று சொல்லுவர். இயல்பு வழக்கினை, இலக்கணமுடையது, இலக்கணப்போலி, மரூஉ என்று மூவகையாக பிரிக்கலாம்.
 ஒரு சொல்லை இலக்கணமாக பேசுதல் அல்லது சொல்லுதல் இலக்கணமுடையது என்பர். உதாரணமாக மாலினி பாடம் படித்தாள். இது இயல்பாக நடப்பது. இலக்கணப்பிழையும் இல்லை! இதுவே இலக்கணமுடையது.
   இலக்கணமுடைய சொற்களை இலக்கணமில்லாமல் மாற்றி வழங்கி வருதல் இலக்கணப் போலி ஆகும். உதாரணமாக, நகர்ப்புறம்,கால்வாய், கொம்பு நுனி, போன்ற இலக்கணச் சொற்கள் இன்று புறநகர், வாய்க்கால், நுனிக்கொம்பு என்று வழங்கி வருகிறது இவை இலக்கணப்போலி ஆகும்.
  மரூஉ: மருவி வந்தது மரூஉ என்று அழைக்கப்படும் மயிலாப்பூர் மயிலை என்றும் தஞ்சாவூர் தஞ்சை, என்றும் பாண்டிச்சேரியை , பாண்டி என்றும் அழைக்கிறோம். இவ்வாறு ஊர் பெயர்கள் சிதைந்து வருவது மரூஉ ஆகும்.
 தகுதி வழக்கு: ஒரு சொற்களுக்கு தகுதியான இன்னொரு சொற்களை பேசுவது தகுதி வழக்கு ஆகும். இதுவும்  மூன்றுவகைப்படும்.
  இடக்கரடக்கல்,மங்கலம், குழு உக்குறி என்பன அவை.
பலர் முன்னே சொல்ல சங்கடமாக உள்ள சொற்களை மாற்றி தகுதியான சொற்கள் பேசுவது இடக்கரடக்கல் எனப்படும். உதாரணமாக வாய் கழுவி வந்தேன் என்பதை வாய் பூசி வந்தேன் என்று சொல்வது இடக்கரடக்கல் ஆகும்.
மங்கலம்: அமங்கலமான சொற்களை நீக்கி மங்கலமான சொற்களை சொல்லுதல் மங்கலம் எனப்படும். விளக்கை அணைத்து விடு என்று சொல்லாமல் விளக்கை குளிரவை என்பது மங்கலமாகும்.
குழு உக்குறி ஒரு குழுவினர் தமக்கு மட்டும் புரியும் வகையில் ஒரு பொருளுக்கு குறிப்பாக வழங்கும் பெயர் குழு உக்குறி என்பர்.
  பொற்க்கொல்லர் பொன்னை “பறி” என்று வழங்குவர்.


 இனி இலக்கிய சுவையை பார்ப்போம்! இன்று ஒரு கதையை பார்க்க போகிறோம்.
   ஒர் ஊரில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. ஏரி நிரம்பி கடைக்கால்வழி வழிந்து ஓடிக்கொண்டு இருந்தது. ஏரிக்கரை அருகே நிலக்கிழார் ஒருவரும் புலவர் இருவரும் சென்று கொண்டிருந்தனர். அந்த ஏரிப் பாய்ச்சல் பகுதியில் நிலக்கிழாரின் நிலம் இருந்தது.
     அப்போது அங்கு வந்த முதல் புலவர், “ஏரி கடை போகிறது” என்றார். அவர் கூறி முடிக்கும் முன்னே ஏரியின் கரை நடுவே உடைந்து விட்டது. அதை கவனித்த இரண்டாம் புலவர் “ ஏரி இடை போகிறது” என்றார்.
    இதை பார்த்துக் கொண்டிருந்த நிலக் கிழாரோ  தம் வயல்கள் பாழாவதை கண்டு வேதனைப் பட்டு, புலவர்களை பார்த்து, புலவர்களே “கடைபோவதனையும் இடை போவதனையும் தான் பார்த்தீர்கள்; முதல் போவதனை பார்க்கவில்லையா?” என்று கேட்டார்.
   புலவர்கள் இருவரும் திகைத்தனர். நிலக்கிழார் சொன்னார். “ஏரி உடைந்தமையால் என் வயல்கள் முழ்கி நான் போட்ட ‘முதல்’ (செல்வம்) போகிறதே!” அதைச் சொன்னேன் என்றார்.
 துன்பத்திலும்  புலவர்களுக்கு இணையாக தமிழோடு விளையாடிய அந்த நிலக்கிழாரின் மன உறுதிதான் என்ன?
     நம் முன்னோர்கள் எவ்வளவு அறிவும் புலமையும் பெற்றிருந்தனர்! என்று அறியும் போது மகிழ்ச்சி ஏற்படுகிறது அல்லவா?

  மீண்டும் அடுத்த பகுதியில் இன்னும் நிறைய தகவல்களுடன் சந்திக்கிறேன்! பதிவு குறித்த உங்கள் பின்னூட்டங்கள் இத்தொடரை சிறப்பிக்க உதவும்! மறக்காமல் பின்னூட்டம் இட்டு ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


தளிர் ஹைக்கூ கவிதைகள்!

$
0
0
  தளிர் ஹைக்கூ கவிதைகள்!


 குளுமை அணைத்ததும்
போர்த்திக் கொண்டது பூமி!
 இருட்டு!

மழையில் உதித்தது
சூரியன்!
வாகனமுகப்புவிளக்கு!

ஒளியினைத்தேடி
உயிரினை இழந்தன
ஈசல்கள்!

மஞ்சள் பூசிக்
குளித்தது பூமி!
மாலைவெயில்!


வியர்த்துப் போன மலர்கள்
விசிறிவிடுகின்றன
வண்ணத்துப்பூச்சிகள்!

குழு நடனம் ஆடின
வயல்கள்!
காற்றின் வருகை!

வெட்கமின்றி
பற்றிக்கொண்டது!
செடியில் கொடி!

சூடான சொற்களால்
தீய்ந்து போனது
உறவுகள்!

வெம்மை பீடிக்கையில்
விரட்டி வந்தது
மழை!

சத்தமிட்டே
நல்லபெயர் எடுக்கிறது
பல்லி!

துடைத்து எடுத்தது
வீட்டை
வறுமை!

ஓசையிட்டு
தட்டி எழுப்புகிறது
காற்று!

தலைக்கனம் அதிகமானதால்
தரையில் வீசப்பட்டன
மலர்கள்!


சூரியன் வரைந்த
ஓவியம்!
வானவில்!

கடற்கரை மணலாய்
காலொட்டி வந்தன
பழம் நினைவுகள்!


ஈரக்காலில்
பதியும் தடங்கள்
இனக்கவர்ச்சி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


சேராத இடத்தினில் சேர்ந்த "சேரன் மகள்" சந்துரு பற்றிய அதிர்ச்சிதகவல்கள்!

$
0
0
சந்துருஎன்கின்றசந்திரசேகரன்தமிழ்சினிமாவில்எந்தடைரக்டரிடமும்உதவிஇயக்குனராகவேலைசெய்யவில்லை, அவருடையஅப்பாசினிமாவில்சிலகாலம்வேலைபார்த்தவர். இவரதுஅம்மாபத்மாஆந்திராவைசேர்ந்தவர். சந்துருவின்அப்பாவும், அம்மாவும்சினிமாத்துறையிலேயேஇருந்ததால்அப்போதுஏற்பட்டபழக்கத்தில்இருவருமேகலப்புதிருமணம்செய்துகொண்டனர். தற்போதுசந்துருவின்அம்மாஒருஇருதயநோயாளியாகஅவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்.
சந்துருவின்அக்காகெளரிக்குஇராமநாதபுரம்மாவட்டம்மண்டபம்ஒன்றிய.தி.மு.பிரமுகர்சீனிக்கட்டியின்மச்சானானமுகம்மதுஇலியாஸ்என்பவரோடு 8 வருடங்களுக்குமுன்புதொடர்புஏற்பட்டு, இலியாஸைரகசியதிருமணம்செய்துகொண்டுஅங்கேயேசெட்டிலாகிஇருந்திருக்கிறார். ஆனால்ஏன்ரகசியதிருமணம்செய்யவேண்டும்என்றுகேட்டால்இலியாஸுக்குகெளரிமுதல்மனைவிஅல்ல. முதல்மனைவிஉயிரோடுஇருந்தபோதேஅவருக்குஇரண்டாவதாகவாக்கப்பட்டவர்தான்சந்துருவின்அக்காகெளரி.
சந்துருவும், அவருடையஅக்காகெளரியும்சிவகங்கைமாவட்டம்மானாமதுரையில்உள்ளஅன்புநகரில் 7 வருடங்கள்இருந்திருக்கின்றனர்.  இலியாஸுக்குசொந்தமானபொன்னிஃபில்லிங்ஸ்டேஷன்என்றபெட்ரோல்பங்க்கைஇவர்கள்தான்நடத்திவந்துள்ளனர்.
ஒருநிலையில்இலியாஸின்முதல்மனைவி, சந்துருவின்அக்காகெளரிசெய்துகொண்டசட்டவிரோததிருமணத்துக்குஎதிர்ப்புதெரிவித்து, கெளரிமீதுகோர்ட்டில்வழக்குதொடர்ந்தார். இதனால்சந்துரு, அவருடையஅக்காகெளரி, தாய்பத்மாஉள்ளிட்டஅனைவரும்இஸ்லாம்மதத்துக்குமாறினார்கள். இந்நிலையில்கெளரிக்குஒருபெண்குழந்தையும், ஒருஆண்குழந்தையும்பிறந்தது.
அதன்பிறகு, சொத்தைபிரித்துதரச்சொல்லிஇலியாஸைகெளரிகட்டாயப்படுத்த, கெளரியின்குணம்அறிந்தஇலியாஸ், தரமறுத்திருக்கிறார்.
இதனால்டென்ஷனானகெளரி, இலியாஸ்தன்னைபலாத்காரம்செய்ததாகவும், தன்னிடம்இருந்தஏராளமானநகைகளைபிடுங்கிக்கொண்டதாகவும்இலியாஸ்மீதுபோலீஸில்போலியாகபுகார்கொடுத்திருக்கிறார். இதனால்ஆத்திரம்அடைந்தஇலியாஸின்உறவினர்கள்கெளரிகுடும்பத்தினரைஅடித்துஉதைத்ததாகவும்கூறப்படுகிறது.
அதன்பிறகுசிங்கப்பூர்சென்றஇலியாஸ்மர்மமானமுறையில்இறந்திருக்கிறார்.
உடனே, தன்னையும்இலியாஸின்சொத்துக்குவாரிசாகஏற்கவேண்டும்என்றுஉச்சிப்புளிமுஸ்லிம்ஜமாத்தில்கெளரிபுகார்செய்தார். ஜமாத்பிரமுகர்கள்விஷயத்தைஆராய்ந்து, இஸ்லாமியர்கள்பின்பற்றும்தொழுகை, இஸ்லாத்தைதழுவியபெண்கள்செய்யவேண்டியமதவிஷயங்கள்உட்படஎந்தகாரியங்களையும்கெளரிசெய்யாமல்இருந்ததைக்கண்டித்தும், கெளரிஇலியாஸைஇஸ்லாம்முறைப்படிதிருமணம்செய்யவில்லைஎன்பதைகூறியும்கெளரியின்புகாரைபுறக்கணித்துள்ளனர்.

வேறுவழியில்லாதநிலையில்கெளரி, தன்தம்பிசந்துருவுடன்மீண்டும்சென்னையில்குடியேறினார். அதன்பின், சென்னையில்கெளரிமீண்டும்ஒருவரைதிருமணம்செய்துகொண்டுவாழ்ந்துவருவதாககூறப்படுகிறது.

சந்துரு, தன்னுடைய 18 வயதில்அண்ணாமலைநகரில்இருந்தஒருமுஸ்லிம்பெண்ணில்பின்னால்சுற்றியிருக்கிறார். இதுதெரிந்து, அங்குள்ளகன்னார்தெருமுஸ்லிம்ஜமாத்தார்கள்சந்துருவைஎச்சரித்ததாககூறப்படுகிறது.
ஆரம்பத்தில்மதுரை, விருதுநகர்உள்ளிட்டதென்மாவட்டங்களில்ஆடல்-பாடல்கலைநிகழ்ச்சிகள்நடத்தும்நடனகுழுக்களில்ஆடிவந்திருக்கிறார்சந்துரு. அப்படித்தான்கலைஞர்டிவியில்கலாமாஸ்டர்நடத்தியமானாடமயிலாடநிகழ்ச்சியிலும்பங்குபெறும்வாய்ப்பைபெற்றுநடனம்ஆடிபரிசுவாங்கியிருக்கிறார்.
மேலும்சந்துரு 10-ஆம்வகுப்புவரைதான்படித்திருக்கிறாராம். மற்றபடிமீடியாக்களில்வருவதுபோலஅவர்எம்.பி.. பட்டதாரிஎன்பதற்கானஆதாரமோ, சினிமாவில்அவர்உதவிஇயக்குனராகவேலைசெய்தார்என்பதற்கானஆதாரமோஇல்லவேஇல்லை.
மானாடமயிலாடநிகழ்ச்சியில்கிடைத்தபெயரைவைத்துபலநிகழ்ச்சிகளுக்குசென்றுவந்திருக்கிறார்சந்துரு. அப்படித்தான்ஒருகலைநிகழ்ச்சியில்தாமினியைசந்தித்துஉண்மையாககாதலிப்பதுபோலநடித்துஅந்தப்பெண்ணைமடக்கியிருக்கிறார்.
இப்படித்தான்இந்தசந்துருஎன்பவரின்வாழ்க்கைப்பின்னணிஇருந்துவந்திருக்கிறது.
இந்தவிஷயங்களைமுன்னிறுத்திதான்தன்மகள்சந்துருவைகாதலிப்பதைஎதிர்த்துவருவதாய்இயக்குநர்சேரன்தெரிவிக்கிறார்.
நன்றி: சவுண்ட் கேமரா ஆக்ஷன் இணையதளம்

  இது  ஒரு குடும்ப விசயம்! இதில் நாம் நுழையக் கூடாது என்று தான் நினைத்திருந்தேன்! சேரக்கூடாத இடத்தில் சேர்ந்து இருக்கிறார் சேரன் மகள் என்பது இந்த தகவலை படித்ததும் அறிந்து கொள்ள முடிகிறது. பத்துவயதில் காதல் , ஸ்கூல் காதல், காலேஜ் காதல் என்று காதல் காவியங்களை படைக்கும் இயக்குனர்கள் இனியாவது திருந்துவார்களா?
    தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் திருகுவலியும்! படத்தில் காவியம் படைப்பதாக சொல்லி எதை வேண்டுமானாலும் எடுத்து விடுவார்கள். உணர்ச்சி பூர்வமான ரசிகர்களும் ஆகா ஒகோ! என்று புகழ்ந்து தள்ளுவார்கள்.
      தமிழ்நாடு கிராமங்கள் கூட இன்று  சினிமா- மற்றும் டீ வி மீடியாவினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. ஒன்றும் அறியாத விடலைப்பருவத்தில் பள்ளிப் பருவத்தில் பல சிறுவர் சிறுமியர் காதல் என்று சீரழிகின்றனர். இதை ஊடகங்கள் வாயிலாகத்தான் அறிகிறோம். இனியாவது நிஜத்தை காட்டுகிறோம் என்று சமூக அக்கறை இல்லாமல் பள்ளி பிள்ளைகள் காதலிப்பதாக படம் எடுக்கும் இயக்குனர்கள் யோசிக்க வேண்டும்.
  ஒரு பெண் பிள்ளைக்கு தகப்பனாக சேரனுக்குத்தான் என்னுடைய ஆதரவு! ஆனால் சினிமா வேறு நிஜம் வேறு. சினிமாவில் காதலை ஆதரிக்கும் சேரன் நிஜத்தில் ஆதரிக்காதது ஏன் என்று பிதற்றுபவர்கள் இப்படி ஒரு பிள்ளையை தங்கள் மகள் காதலித்தால் கட்டிக் கொடுப்பார்களா ? என்பதுதான் என் கேள்வி?

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
        

       

காதல் அரங்கேற்றம்!

$
0
0
சார்! எங்கப்பா எங்க காதலை பிரிக்கப் பார்க்கிறாரு! நீங்கதான் எங்களை எப்படியாவது சேர்த்து வைக்கணும்! என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் பரபரப்பாக இயங்க ஆரம்பித்த பகல் பதினோறு மணி வேளையில் வந்து நின்ற அந்த இளம் ஜோடிகளை பார்த்து முகம் சுறுக்கினார் கமிஷனர் வெங்கட்.
   யாரும்மா நீங்க? இப்படி திடீர்னு வந்து கம்ப்ளைண்ட் பண்றீங்க?
இதற்குள் பக்கத்தில் இருந்த இன்ஸ்பெக்டர் கமிஷனர் காதில் கிசுகிசுத்தார் சார்! இவங்க ஆக்டர் கிஷோர்குமார் பொண்ணு!
  இதற்குள் வெளியே எப்படியோ மோப்பம் பிடித்து மீடியாக்கள் திரண்டுவிட்டது.
  இவனுங்களுக்கு இதுக்குள்ள தகவல் போயிருச்சா? ஸ்.. அப்பா! என்று தலையில் கை வைத்துக் கொண்டார். ம்.. சொல்லும்மா!
   சார் என் பேரு மாலினி! ஆக்டர் கிஷோர் குமாரோட டாட்டர்! இவர் மனோஜ், எங்க வீட்டு கார் டிரைவர்! நாங்க ரெண்டு பேரும் மூணு வருசமா காதலிக்கிறோம்! மூணு வருசமா ஒத்துக்கிட்ட எங்க அப்பா இப்ப எங்க காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இவரை கொன்னுடுவேன்னு ரவுடி வைச்சி மிரட்டரார்! என்னை வீட்டில அடைச்சி வச்சி டார்ச்சர் பண்றார்!
      சார்! நான் ஒரு ஐந்து வருசமா இவங்க வீட்டுல கார் டிரைவரா இருக்கேன்! நாங்க ஒருத்தரை ஒருத்தர் விரும்பறோம்! முதல்ல எங்க காதலுக்கு ஒத்துக்கிட்ட இவங்கப்பா இப்ப அடியாளுங்களை வைச்சி என்னை மிரட்டறார் சார்! ஒழுங்கா என் பொண்ணு பின்னால சுத்தறதை விட்டுட்டு வெளியே எங்கனா போயிடு உனக்கு எத்தனை லட்சங்கள் வேணும்னு பேரம் பேசினாரு! நான் மசியலை! அதனால என்னை கொன்னு போட்டுருவேன்னு நேத்து ஒரு ரெண்டு மூணு பேரோட வந்து மிரட்டிட்டு போயிருக்காரு!

     சரி! ஒரு கம்ப்ளைண்ட் கொடுங்க! விசாரிப்போம்! ஏம்மா! நீ மேஜர் தானே!
 எஸ் சார்! ஐ கம்ப்ளீட்டன் எய்ட்டீன்!
  இதுக்கு மட்டும் உண்மையான வயசை சொல்லுங்க! முணுமுணுத்த கமிஷனர்  மனோஜை சைகையால்  அழைத்து  தனியாக கூட்டிச்சென்றார்.  எப்படா கொழுத்த பட்சி சிக்கும்னே அலையறீங்க! என்றார்
  சார்! மரியாதையா பேசுங்க! நான் அப்படிப்பட்டவன் இல்லை! அப்படி இருந்தா இங்க கம்ப்ளைண்ட் பண்ண வரமாட்டேன்! இந்நேரம் கல்யாணம் முடிச்சிருப்பேன்!
    கூல்டவுண் பாய்! அந்த பொண்ணை பார்த்தா அப்பாவியா தெரியுது! அதுக்கு இப்பத்தான் பதினெட்டு முடிஞ்சிருக்கு! உனக்கு எப்படியும் 30க்கு மேல இருக்கும் போல தெரியுது!
    வயசை பார்க்காதீங்க சார்! மனசை பாருங்க!
  இந்த டயலாக் எல்லாம் சினிமாவுக்குதான் லாயக்குப்படும் வாழ்க்கைக்கு ஒண்னும் உதவாது! இப்ப அரைக்கிழவனான நீ இன்னும் பத்து வருசத்துல முழு கிழவனா ஆயிருவே! அப்ப உன் பொண்டாட்டி இளமையாத்தான் இருப்பா! அப்ப வரும் பிரச்சனை! கமிஷனர் நக்கலாக பேசினார்.
     இதற்குள் மாலினி கம்ப்ளைண்ட் எழுதி முடித்திருந்தாள். வெளியே மீடியாக்களுக்கு தீனி காத்திருந்தது.  காதல் இளவரசன் கிஷோர் குமார் தன் மகளின் காதலுக்கு எதிர்ப்பு!  பரபரப்பாக பத்திரிக்கைகள் எழுதி தள்ள பேஸ் புக் போராளிகள் கையில் இந்த மேட்டர் சிக்கி சின்னாபின்ன பட்டது.
     அவன் நேர்மையானவன் இல்லை! அவனுக்கு ஏற்கனவே கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன! என் மகளை ஏமாற்றுகிறான் என்று கிஷோர்குமார் அறிக்கை விட்டார். என் மகளை மீட்டுத்தாருங்கள் என்று  கமிஷனரிடம் முறையிட்டார்.
   இரு தரப்பையும் போலீசார் விசாரணை செய்தனர். அது ஒரு பதினைந்து நாட்களுக்கு ஓடியது.
  இந்த சந்தர்ப்பத்தில் ரிலிஸ் ஆன கிஷோர் குமாரின் புதிய படம் செம வசூல்  செய்தது! பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தது.
        என்னப்பா! படம் செம வசூலா! எப்படி என் ஐடியா!
  மனோஜும் நல்லா ஒத்துழைப்பு கொடுத்தான் மா! இல்லேன்னா இந்த படம் ஊத்தி மூடியிருக்கும்! ஒண்ணுத்துக்கும் உதவாத கதை! என் மேல ஏற்பட்ட பரிதாபத்தால ஜெயிச்சிருச்சு! ஆனா உன் வாழ்க்கையையே இதுல பிணையம் வைக்க வேண்டியதா போச்சே!
     கவலைப்படாதீங்கப்பா! நம்ம ஜனங்களுக்கு ஞாபக மறதி அதிகம்! சீக்கிரம் இந்த விசயத்தை மறந்துடுவாங்க!
    போலீஸ் விசாரணையில் மனோஜிக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிருச்சு என்று தெரியவந்தது! நான் அவரை மறந்துவிட்டேன்ன்னு மீடியாவுல ஒரு பரபரப்பு அறிக்கை விட்டா இந்த நாடகம் குளோஸ்! என்றாள் மாலினி!
     சத்தியமா நீ என்னோட வாரிசுதான்! என்று மகளை தட்டிக் கொடுத்தார் கிஷோர்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

காங்கிரஸை கடுப்பேற்றிய கையேந்தி பவன்! கதம்பசோறு பகுதி 4

$
0
0
கதம்பசோறு பகுதி 4

தாமினி-சேரன்-சந்துரு

            தமிழ் திரையுலகை மட்டுமல்ல தமிழ் நாட்டையே ஒருவாரகாலமாக இந்த காதல் விவகாரம் பரபரப்பாக ஆக்கி கொண்டுள்ளது. திரைப்பட இயக்குனர் என்பதாலேயே சேரன் குடும்ப விவகாரம் இந்த அளவுக்கு பெரிது படுத்தப்பட்டுள்ளதாக எனக்குத்தோன்றுகிறது. பொதுவாகவே தமிழனுக்கு அடுத்தவன் மீது ஒரு கண் இருந்துகொண்டே இருக்கும். இது பொறாமையோ என்னவோ தெரியாது. அடுத்தவன் வீட்டில் எழவு விழுந்தால் இவனுக்கு மகிழ்ச்சி என்ற நிலை எப்போது மாறுமோ?  மீடியாக்களும் எப்போது என்ன பரபரப்பு கிடைக்கும் என்று  அலைந்து தீயாய் வேலை செய்கின்றார்கள். இது அவர்களது குடும்பவிசயம்! ஒரு பெண்ணை பெற்ற தகப்பனுக்குத்தான் இதன் வலி உணர முடியும். அந்த பெண் வலிய வந்து புகார் கொடுத்து விட்டதாலேயே இது பொது விஷயமாக மாறிவிடாது. புதியதலைமுறை சேனல் இந்த விசயத்தில் ரொம்ப மோசமாகவே நடந்து கொண்டுவிட்டது. ஒருவழியாக தனிப்பட்ட விசாரணை முடிந்து இப்போது தாமினி அவர் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.  ஒரு பெண்ணை வளர்க்கும் பெற்றோருக்கு அவனது கணவனை தேர்ந்து எடுக்கும் உரிமை கூட இந்த காலத்தில் இல்லாது போனது வருத்தமே! இந்த காதல் விவகாரத்திற்கு தமிழ் சினிமா முக்கிய காரணம்! பள்ளிக் காதல் கிராமத்து காதல் விடலை காதல் என விதவிதமான படங்களை எடுத்து இளைய சமுதாயத்தை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கியவர்கள் இன்று அவர்கள் வீட்டிலேயே இப்படி ஒரு நிலைமை வந்தவுடன் பதைக்கிறார்கள்! கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல! இனியாவது இவர்கள் திருந்துவார்களா தெரியவில்லை!

ஓட்டலின் குறும்பும்! காங்கிரஸ் கடுப்பும்!
    மும்பையில் “அதிதி” என்ற பெயரில்  கையேந்திபவன் வகையறா ஹோட்டல் ஒன்று உள்ளதாம். இதுபிரபலமான உணவகம். இடம்பிடிக்கவே பலர் காத்துக் கிடப்பார்களாம். எப்போதும் கூட்டம் முண்டியடிக்கும் இந்த ஹோட்டலில் ஒருத்தர் சாப்பிட்டு முடிக்கும் முன்னே அந்த இடத்தை பிடிக்க பலர் போட்டி போட்டு காத்து நிற்பார்களாம்.
    இதனால் சாப்பிடுபவர்கள் அரைகுறையாக சாப்பிட்டுவிட்டு பாதி வயிறோடு கை கழுவ சென்று விடுவார்களாம். இந்த ஓட்டலில் சமீபத்தில் ஒரு விளம்பர பலகை வைத்தார்களாம். “ஸ்பெக்ட்ரம், நிலக்கரி போன்ற விவகாரங்களில் பணத்தை அடிப்பது மத்திய அரசுக்கு எவ்வளவு அவசியமோ அந்த அளவுக்கு இந்த ஹோட்டலில் புல் மீல்ஸ் சாப்பிடுவதும் ரொம்ப அவசியம்” என்று.
     என்னா தில்லு பாருங்க! ஹோட்டல்காரனுக்கு! இதைப்பார்த்து நம்ம மன்னு மோகனோட ஆட்கள் கொதித்து எழுந்து விட்டார்களாம்! நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்காதவரை ஹோட்டலை திறக்கவிடமாட்டோம் என்று திரண்டு எழுந்தனராம். உடனே ஹோட்டல்காரர்களுக்கு ஆதரவாக தாமரை கட்சி காரர்கள் குதித்தார்களாம்.
     மேலிடத்து காங்கிரஸ் மும்பை முதல்வர் பிரித்வி ராஜ் சவுகானை கூப்பிட்டு வறுத்து எடுத்து விட்டதாம்! ஒரு ஹோட்டல் விளம்பரம் கூட நம்மை இப்படி கடுப்பு ஏத்தி விட்டதே பேசாம அரசியல் துறவரம் போய்விடலாமா என்று யோசிக்கிறாராம் ப்ருத்விராஜ் சவுகான்.

பாக்டீரியாவை காட்டுங்க!
   மத்திய வர்த்தக தொழில் துறை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்  திருப்பூர் அருள்புரம் பொது சுத்திகரிப்பு நிலையத்து வந்தாராம். நிலையத்தை சுத்திப்பார்த்த அவரு திடீர்னு ஒண்ணு கேட்கவும் ஊழியர்கள் திணறி போயிட்டாங்களாம்!
  சுத்திகரிப்பு செய்ய பாக்டீரியா உடுறீங்களாமே? அந்த பாக்டீரியாவை நான் பார்க்கணும் என்றாராம் அமைச்சர்!
   ஊழியர்களும் மைக்ராஸ்கோப் வழியா பார்க்க சொல்லிக் கொடுத்தாங்களாம். அப்படி பார்த்த அமைச்சர் என் கண்ணுக்கு ஒண்ணுமே தெரியலையே! நான் பாக்டீரியாவை பார்த்தே ஆகனும்னு அடம்பிடிச்சாரம்!
   இது என்னடா சின்ன புள்ளத்தனமா இருக்கே! ன்னுட்டு மைக்ராஸ்கோப்பை சரி செய்து திரும்பவும் அமைச்சரை பார்க்க வைச்சாங்களாம்! பாக்டீரியாவை பார்த்து முடிச்சிட்டு அப்படி பாக்டீரியாவை பாக்கிறாமாதிரி பத்திரிக்கை காரங்களுக்கு போஸ் கொடுத்திட்டுதான் கிளம்பினாராம் அமைச்சர்!

நாலு பேருல ஒருத்தரு இப்படித்தானாம்!
   சர்வதேச அளவில் நான்கு பேரில் ஒருவர் லஞ்சம் கொடுப்பவராக உள்ளார் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. உலக அளவில் 107 நாடுகளில் 1.14 லட்சம் மக்களிடையே லஞ்சம் குறித்த கருத்துக்களை கேட்டறிந்தது. இதில் அரசியல்வாதிகளே மிக அதிக அளவில் லஞ்ச ஊழலில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்துள்ளது.
  ஊழல் நாடுகள் பட்டியலில் லைபீரியா  மங்கோலியா முன்னனியில் உள்ளது. லஞ்சம் இல்லாத நாடுகளின் பட்டியலில் டென்மார்க் முதலிடத்தில் உள்ளது. பின்லாந்து சுவிட்சர்லாந்து ஆகியவையும் லஞ்ச ஊழல் அற்ற நாடுகளாக உள்ளன.
   காவல் துறையில்  மிக அதிகமாக ஊழல் நடைபெறும் நாடாக காங்கோ தேர்வாகியுள்ளது. இங்கு போலீஸ் காரர்களுக்கு லஞ்சம் கொடுத்தால்தான் வேலையே நடக்கும் என்று 75% பேர் கூறியுள்ளனர்.

காதுகள் மூலம் காணலாம்;
   கண்பார்வையற்றோர்களும் காட்சிகளை காணும் வகையிலான கருவியை வடிவமைப்பதில் உலகின் பல நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த ஆராய்ச்சிகளின் பலனாக காட்சி பதிவுகளை ஒலி அலைகளாக மாற்றம் செய்து அதற்கான மொழியின் மூலம் அதை மீண்டும் ஒளி அலைகளாக மாற்றி மூளைக்கு கொண்டு செல்லும் அதி நவீன கருவியை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்து உள்ளனர்.
 கண்பார்வையற்றோரின் காதுகளில் பொருத்தப்படும் இந்த கருவி காட்சிகளை ஒளி அலைகளின் அதிர்வுகளை உள்வாங்கி அதை ஒலி அலைகளாக பதிவு செய்யும் தன்மை கொண்டது. இந்த கருவிகளில் பொருத்தப்பட்டுள்ள விஷுவல் வேர்டு பார்ம் எனப்படும் காட்சிகளுக்கான  ஒளி மற்றும் ஒலியியல் மொழிகள் எழுதப்பட்டுள்ளன. எனவே இவை உள்வாங்கிய ஒளி அலைகளை ஒலி எழுத்து வடிவில் மாற்றி மூளைக்கு அனுப்புகிறது. மூளையில் உள்ள காட்சி பதிவுகளை அறியும் பகுதியில் இவை மீண்டும் ஓளி அலைகளாக மாற்றம் செய்யப்படுவதால் இந்த கருவியின் மூலம் பார்வையற்றோரும் காட்சிகளை காணமுடியும். என்கின்றனர்.
  முதல்கட்ட ஆராய்ச்சியில் வெற்றி கண்டுள்ள இவர்கள் இதை முழு வெற்றி கண்டால் விழி இழந்தோரின் துயரங்கள் பெருமளவில் குறையும்.

சித்த மருத்துவம்!
   அத்திக்காய்க்கு வாதநோய் உடல் உஷ்ணம் இரணம், பிரமேகம், சூலை நோய் ஆகியவற்றை நீங்கச்செய்து குணமாக்கும் தன்மை உண்டு.
வாழைக்காய் பித்தசுரம் உமிழ்நீர் சுரப்பு வயிற்று உளைவு உடல் உஷ்ணம் இருமல் பித்தசுரம் பைத்தியம் பித்த வாந்தி ஆகியவற்றை குணப்படுத்தும். இரத்த விருத்தி அதிகரிக்கும்.
உடலில் ஆறாத ரணங்கள் வாய் குளறல் அதிகப்படியான வாய்வு, சிரங்கு சுக்கில நஷ்டம் பல் கூச்சம் ஆகியவை மாங்காய் உண்டுவருவதால் நீங்கும்.
தாகம், உடல் சூடு, காசம் சீதத்தால் உண்டாகும் பித்தம் ஆகியவை குணமாக அருநெல்லிக்காய் மருந்தாகும்

ஜோக்கு!

   அது ஒரு ஆங்கிலவழி கல்வி கற்பிக்கும் பள்ளி! அதில் நமது மாணவர் சேர்ந்து விட்டார். அவருக்கு சுட்டுப்போட்டாலும் ஆங்கிலம் வராது. ஆனால் அந்த பள்ளியில் பேசுவதாக இருந்தால் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும். மறந்தும் தமிழ் பேசக்கூடாது என்று ஸ்டிரிக்டான உத்தரவு.
    நம்ம ஆள் சேர்ந்த முதல் நாள்! அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும் போல வெளியே செல்ல வேண்டும். நம்ம மாணவர்கள் என்று கையை தூக்கி விரலில் ஒன் என சைகை காட்டி சென்று விடுவார்கள். அங்கு அப்படி எல்லாம் செல்ல முடியாது.
  நம்ம மாணவர் எழுந்தார். மேம்! என்று விரலை நீட்டினார்! மேம் கவனிக்கவே இல்லை! மாணவருக்கு பொறுக்க முடியவில்லை!
   மீண்டும் மேம்! என்றார். மேம் நிமிர்ந்து பார்த்து வொய் டொண்ட் டிஸ்டர்ப் மீ? என்றார்.
   மாணவர் பரிதாபமாக என்ன சொல்வது என்றறியாமல் மேம்!  கேன் ஐ சப்ட்ராக்ட் மை ஸ்மால் வாட்டர்? என்றார்.
   மேமுக்கு ஒன்றும் புரியவில்லை! பக்கத்திலிருந்த மாணவர்கள் கொல்லென்று சிரிக்க!  நம்மாளு மீண்டும் ஒரு விரலை காட்ட டீச்சருக்கு புரிந்து கர்மம்! கர்மம்! ஓடுன்னு தமிழ்ல திட்டுனாங்களாம்!

   இது எப்படி இருக்கு?                                                                              
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

ஓடும் பைக்கில் கூடு கட்டி 3 ஆண்டாக வசிக்கும் குருவி

$
0
0
பைக்கில், கூடுகட்டி, மூன்று ஆண்டுகளாக, அதில் வசித்து வருகிறது, ஒரு குருவி. இப்போது அதில் முட்டையிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள நெகனூர் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் குப்பன், 60. ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். கடந்த, 10 ஆண்டுகளாக, ஒரே பைக்கை பயன்படுத்தி வருகிறார். ஒருநாள், பைக்கை, "ஸ்டார்ட்' செய்த போது, "டூல்ஸ் பாக்ஸ்' உள்ளே இருந்து, குருவி ஒன்று பறந்து சென்றது. குருவி, அதில் கூடு கட்டி வசித்ததைக் கண்ட அவர், அதை கலைக்கவில்லை. தினமும் மாலையில், பைக்கை, வீட்டில் கொண்டு வந்து விட்ட சிறிது நேரத்துக்குள், பைக்கில் கட்டியிருந்த கூட்டுக்குள், குருவி வந்து அடைந்து விடும்; இரவில் வீடு திரும்ப நேரமானால், அருகே உள்ள மரத்தில், காத்திருந்து, பைக் வந்த பின், அடைந்து கொள்ளும். ஒரு முறை, பைக்கை பழுது நீக்க விட்ட போது, ஊழியர்கள், கூட்டை பிய்த்து எறிந்து விட்டனர். அதை, குருவி பொருட்படுத்தவில்லை; பைக்கில் அதே இடத்தில், மீண்டும் கூடு கட்டி அடையத்துவங்கியது. இதன் பின், குப்பன் பைக்கை சர்வீசுக்கு விடுவில்லை; தானே கழுவி சுத்தம் செய்து கொள்கிறார்; டூல்ஸ் பாக்சையும் திறப்பது இல்லை. பைக்கில் கட்டிய கூட்டில், மூன்று ஆண்டுகளாக, குருவி வசிக்கிறது. கடந்த, 4ம் தேதி, பைக்கில் செஞ்சி வந்தார் குப்பன். திரும்பி செல்ல முயன்றபோது, குருவி முட்டை ஒன்று, பைக் அருகே உடைந்து கிடந்தது. உடனே, டூல்ஸ் பாக்சை திறந்து பார்த்தார். அங்கு ஒரு முட்டை இருந்தது. பைக்கை ஓட்டிய போது, அதிர்வில், கூட்டில் இருந்து விழுந்துள்ளது. இப்போது, அந்த முட்டையை பாதுகாப்பதில் தீவிரம் காட்டுகிறார். முட்டையில் இருந்து, குஞ்சு வெளியே வந்தபின், பைக்கை வெளியே எடுத்தால், குஞ்சுக்கு உணவு எப்படி கிடைக்கும் என்பது தான், இப்போது குப்பனின் கவலை.

நன்றி: தினமலர்

சிம்ரனை மறக்காத சிங்கத்தமிழன்! சிரிக்கவைத்த சிரிப்புக்கள்! பகுதி 10

$
0
0
 சிரிக்க வைத்த சிரிப்புக்கள் பகுதி 10


1.   தலைவரை அதுக்கு லாயக்கில்லைன்னு கட்சியிலே சொல்லிட்டாங்களாம்!
எதுக்கு?
அது தெரியலைன்னுதான் தலைவர் புலம்புறாரு!
                        என்.உஷாதேவி.
2.   பலதரப்பட்ட மக்களை சந்திச்சிட்டு வருகிறேன்னு தலைவர் சொல்றாரே.. சுற்றுப்பயணம் போயிட்டு வர்றாரோ?
ஜெயில்ல இருந்து  வர்றார்!
                      என். உஷாதேவி.
3.   ஏம்ப்பா ஒரு வாரமா ஆளையே காணோம்.. எங்கே போனே?
நம்ம தலைவருக்கு பிடிவாரண்ட் வந்துச்சுன்னா எங்கெங்கே தலைமறைவா இருக்கலாம்னு லோகேஷன் பார்க்க அனுப்பியிருந்தாருப்பா!
                        எம்.எச். இக்பால்.
4.   மாப்பிள்ளையோட அப்பாவுக்கு சின்னவீடு இருக்கு போலிருக்கே!
எப்படிச் சொல்றே?
பாருங்களேன்! கல்யாண பத்திரிக்கையிலே மூணு வீட்டாரின் அழைப்புனு போட்டிருக்கே!
                     வி.சாரதிடேச்சு.
5.   சாமி! புள்ள ஏதோ காத்துக்கருப்பை பார்த்து பயந்துருச்சுன்னு நினைக்கிறேன்!
பயப்படாதீங்க! திடீர்னு வந்துட்டு போன கரண்ட்டைப்பார்த்து பயந்திருக்கு. சரி பண்ணிரலாம்!
                              கி.ரவிக்குமார்.
6.   ஜெயில்ல இருக்கும் நம்ம தலைவர் ரொம்ப ஓவராத்தான் போறாரு!
எப்படி சொல்றே?
ஜாமீன் கேட்டு ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பி இருக்காரே!
                 
            வீ.விஷ்ணுகுமார்
7.   எங்கள் தலைவருக்கு அடிக்கடி மனசு மாறுற பழக்கமெல்லாம் கிடையாது!
அதுக்காக ‘சிம்ரனை மறக்காத சிங்கத்தமிழனே’ ன்னா ஃப்ளக்ஸ் பேனர் வைப்பீங்க?
                              பர்வீன் யூனுஸ்
8.   அந்த வித்வான் எந்த தைரியத்துல தினமும் ஒரு கச்சேரி பண்றாரு!
கேக்கறதுக்கு யாரும் இல்லைங்கிற தைரியத்திலதான்!
                       பா.ஜெயக்குமார்.
9.   ஆபரேஷன் செஞ்சிகிட்ட உங்க கணவருக்குக் கொஞ்சநாள் ஷாக் நியுஸ் எதுவும் சொல்லாதீங்க!
கரண்ட் வந்துருச்சுன்னு கூடவா டாக்டர்?
                         என்.உஷா தேவி.
10.நான் சாப்பிட வேண்டிய மருந்து பேரை சீட்டில எழுதி தராம என் உடம்புல பச்சை குத்திவிடறீங்களே ஏன் டாக்டர்?
இதை நீங்க தொடர்ந்து பதினைஞ்சு வருஷத்துக்கு சாப்பிடணுமே!
                          சிக்ஸ்முகம்
11.தலைவர் தகவல் அறியும் உரிமை சட்டத்துல என்ன கேட்டார் தெரியுமா?
என்னது?
தமிழ்நாட்டுல எல்லா வசதியும் உள்ள ஜெயில் எதுன்னு?
                   பி.பாலாஜிகணேஷ்
12.சீரியல்ல அப்பா ரோல்ல நடிக்க சான்ஸ் கேட்கறீங்களே உங்களுக்கு என்ன தகுதி இருக்கு?
நான் நாலு குழந்தைக்கு அப்பா சார்!
                          வி.சாரதிடேச்சு.
13.படை வீரர்களே! புறப்பட தயாராகுங்கள்!
மன்னா! நமது படையில் அப்படி யாரும் இல்லையே!
        
         நா.கி.பிரசாத்.
14.நம் மன்னர் சிங்கம் வளர்க்க போகிறாராமே!
அப்படியாவது நம் அரண்மனையில் ஒரு சிங்கம் இருக்கிறது என்று நாடு முழுவதும் செய்தி பரவாதா என்ற நப்பாசைதான்!
                கதா.க. சேரன்.
15.எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று ஏன் மன்னா சொன்னீர்கள்?
அதற்கு என்ன அமைச்சரே இப்போது?
அந்தப்புரத்தில் ஆண்கள் கூட்டம் அலைமோதுகிறது பாருங்கள்!
                   நா.கி. பிரசாத்.
16.தலைவர் திடீர்னு தோட்டக்காரனை கூப்பிட்டுவெச்சு சத்தம் போடுறாரு?
தோட்டத்துக்கு செம்மண் லாரி வர்றப்பல்லாம் ‘சம்மன் வந்திருக்கு...சம்மன் வந்திருக்கு’ன்னு எகனை மொகனையா சொல்லியிருக்கான்.
                   பெ. கருணை வள்ளல்.
17.நல்லவருமான வல்லவருமான சிறந்தவருமான பெருமை மிக்கவருமான அருமை மிக்கவருமான...
தலைவரு வருமான் விரும்பிங்கிறதை அவன் தெளிவா புரிஞ்சி வெச்சிருக்கான்யா!
                                 வீ.விஷ்ணுகுமார்.
18.அன்பால் பகைவரை வெல்லலாம் அமைச்சரே!
ஆமாம் மன்னா! உங்களால் அவனை அம்பால் வெல்ல  முடியாதல்லவா?
                       ஜக்கி
19.நமது மன்னர் எதற்காக புலவரை நாடு கடத்தி விட்டார்?
மன்னர் பதுங்கு குழியில் ஒளிந்து மீண்டு வந்ததை ‘ அண்டர்கிரவுண்டு ஒண்டரே’ னு நக்கலா கவிதை பாடியிருக்கிறார்!
                     க.சரவணகுமார்.
20.  குழந்தைக்கு தலைவர் வெச்ச பேரு பிடிக்கலைன்னு பதினைஞ்சு நாள் கழிச்சி வந்து சொல்றீங்க அப்படி என்ன பேர் வச்சார்?
நாராயணசாமி!
                    எஸ்.பி வளர்மதி.
நன்றி: ஆனந்தவிகடன்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


ஆடிப்பூரம்! அம்மன் தரிசனம்! நிம்மதி நிச்சயம்!

$
0
0
ஆடிப்பூரம்! அம்மன் தரிசனம்! நிம்மதி நிச்சயம்!


  ஸ்ரீ விஷ்ணுசித்த குலநந்தன கல்பவல்லீம்
ஸ்ரீ ரங்க ராஜ ஹரிசந்தன யோக த்ருஸ்யாம்
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமி வாந்யாம்
கோதாம் அந்ந்ய சரணௌ சரணம் ப்ரபத்யே!

   விஷ்ணு சித்தர் எனப்படும் பெரியாழ்வாரின் குலத்திலே தோன்றியவளே! ரங்கராஜனான விஷ்ணுவை மணம் செய்தவளே! பொறுமையின் வடிவமான பூமாதேவி அம்சம் கொண்டவளே!கோதை என்னும் ஆண்டாளே! உனது திருவடிகளை சரணடைகிறேன்!

   பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும்-கோதைதமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதுவும் வம்பு.
   கோதை ஆண்டாளின் பாசுரங்கள் நம் பாவங்களை போக்கி திருமாலின் திருவடியில் சேர்க்கும். வேதத்திற்கு வித்தாக அமைந்திருக்கும் திருப்பாவை முப்பது பாடல்களை அறியாத மனிதர்களை இந்த பூமி சுமப்பது கூட வீணானதாகும்.

      ஆடிப்பூர நன்னாளில் தான் பெரியாழ்வாரின் வீட்டில் ஆண்டாள் அவதரித்தாள். ஆண்டாள் தன் அளப்பரிய பக்தியால் திருமாலை கரம்பிடித்து சூடிக் கொடுத்த சுடர்கொடியானாள். இன்று ஆடிப்பூர நன்னாள். சிவாலயங்களிலும் விஷ்ணு ஆலயங்களிலும் அம்மன் ஆலயங்களிலும் விசேசமாக கொண்டாடப்படுகிறது.
   அபிஷேக ஆராதனைகளுடன் பால்குடம் எடுத்தல் தீ மிதித்தல், வீதியுலா போன்ற பல்வேறு வைபவங்கள் இன்று அம்பாளுக்கு நடைபெறுகின்றன.
     ஆண்டாள் பிசூடிக் கொடுத்த சுடர் கொடியாள்' ஆனாள். ஒருநாள் பெரியாழ்வார் கனவில் ஸ்ரீரங்க பெருமாள் தோன்றி, "உனது மகளை ஸ்ரீரங்கம் அழைத்து வா. அங்கே யாம் அவளை மணந்து கொள்வோம்'' என்றார். அதன்படி பங்குனி உத்திரம் அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து ஆண்டாளை மணந்தார் பெருமாள். 
இத்தகைய சிறப்புமிக்க ஆண்டாள், ஸ்ரீவில்லிபுத்தூரில் நந்தவனத்தில் கண்டெடுக்கப்பட்டது ஆடி மாதம் வரும் பூரம் நட்சத்திர நாளன்று. அதனால், அன்றைய நாளை ஆடிப்பூரம் என்று அழைத்து கொண்டாடுகிறார்கள். ஆடிபூரத்தில் விரதம் இருந்தால் திருமணம் விரைவில் கைக்கூடும். ஆண்டாள் அவதார நாளான ஆடிப்பூரம் அன்று தேரோட்டம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான தேரோட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. 

ஆண்டாளும் ஸ்ரீரங்கமன்னாரும் பவனிவரும் காட்சியைத் தரிசனம் செய்தால் பிறவிப்பயனை அடையலாம். ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும். இந்த நாளில் தான் உமாதேவி தோன்றியதாக கூறப்படுவதுண்டு. 

உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் கூறுகின்றன. வைண வத்திருக் கோவில்களிலும் திருவாடிப்பூரம் பத்து நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. ஏனென்றால் ஆண்டாள் அவதரித்த நட்சத்திரம் பூரம். 
    இந்த ஆடிப்பூர நன்னாள் அம்மனுக்கு வலைக்காப்பு நடத்தி அழகு பார்த்தனர் பக்தர்கள். அம்மனை அழகுற அலங்கரித்து முளைகட்டிய தானியங்களை அம்மனது வயிற்றில் கட்டி கைகளில் வளைகள் மாட்டி வளைகாப்பு உற்சவம் நடத்தி அழகுற வழிபட்டனர் பக்தர்கள்.
   இந்த நன்னாளில் அம்மன் ஆலயங்களூக்கு சென்று வழிபட நம் துன்பங்கள் நீங்கி நிம்மதி கிடைக்கும் என்பது மரபு.
 மாசுபடா அம்மன் குடியாத்தம்!
     
குடியாத்தம் நெல்லூர் பேட்டையில் அமைந்துள்ளது மாசுபடா மாரியம்மன் ஆலயம். இது அம்மை நோய் கண்டவர்களை காப்பாற்றும் தலம். அம்மை இங்கு வந்து சென்றால் அண்டாது என்று சொல்வர். குடியாத்தம் கிராம தெய்வம் இந்த அம்மன். கழுத்துவரை மட்டுமே உள்ள அழகிய அம்மன் கருவறையில் காணலாம். அதன் அருகில் பழைய மூலவர் அம்மனும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆடி மாதத்தில் நான்கு வார வெள்ளிக்கிழமைகளும் இந்த ஆலயத்தில் விழாக் கோலம் தான்.அதிலும் கடை வெள்ளி எனப்படும் ஆடி கடைசி வெள்ளியன்று அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். பொங்கல் வைத்தல் கூழ் வார்த்தல் வீதி உலா போன்ற வைபவங்கள் நடைபெறும். இது தவிர ஜனவரி மாதம் முதல் தேதி லட்சார்ச்சணையும்  தை அமாவாசையில் பிரத்யங்கிரா யாகமும். ஒவ்வொரு பவுர்ணமியிலும் பவுர்ணமி யாகமும் நடைபெறுகிறது. இங்குள்ள சாஸ்தா மிகவும் விசேஷமானது.  அம்மை நோய் தீர்க்கும் மாசுபடா மாரியம்மனின் அருள் பெற ஒரு முறை சென்று வாருங்கள்!.

காஞ்சிபுரம் ஆதி காமாட்சி!

   கயிலாயத்தில் சிவனும் பார்வதியும் உரையாடிக்கொண்டிருந்தனர்.  அப்போது சிவன் ஒரு லீலை செய்தார் தன் கண்களை மறைக்கும் வகையில் பார்வதி தேவியைக் கொண்டு மூடச்செய்தார். அப்போது உலகமே இருண்டு போனது. உயிர்கள் தத்தளித்து நின்றன. அவளை பெரும்பாவம் சூழ்ந்தது. பொன்மயமான அம்பிகையின் மேனியில் அந்த இருள் படிந்தது. அம்பிகை தன் கைகளை இறைவன் கண்களில் இருந்து வெடுக்கென எடுத்துவிட்டாள்.
   சிவன் அவளிடம், தேவி கரிய நிறம் பெற்றதால் நீ காளி என்ற பெயர் பெறுவாய்! உன் பாவம் நீங்க பூலோகத்தில் தவம் இயற்றி அறம் பல செய்வாயாக! என்று அருள் புரிந்தார். அதன்படி தேவியும் பூலோகத்தில் கம்பா நதிக்கரையில் மணல் லிங்கம் அமைத்து தவமிருந்து வந்தாள். ஒருநாள் ஆற்றங்கரையில் வெள்ளம் பெருக்கெடுக்கவே சிவலிங்கத்தை தன் கைகளால் அணைத்துக் கொண்டாள். அப்போது உமையவள் வளையல் தழும்பு மணல் லிங்கத்தில் பதிந்தது. அம்பிகையின் அன்புக்கு கட்டுப்பட்டு சிவன் தோன்றினார். தேவியும் தன் கருமை நிறம் நீங்க  வேண்டினாள். சிவனருளால் பழைய நிறம் பெற்றாள். அதே வடிவில் ஆதி காமாட்சி காளிகாம்பாள் என்ற திருநாமத்துடன் அருள் புரிய தொடங்கினாள்.
     கருவறையில் கிழக்கு நோக்கி பத்மாசனத்தில் மேல் கைகளில் பாச அங்குசத்துடனும் கீழ் கைகளில் அட்சயப்பாத்திரமும் அபய ஹஸ்தமாகவும் அனுக்கிரகம் செய்கிறாள் ஆதி காமாட்சி. வெள்ளிக்கிழமை மாலைகளில் வெளிப்பிரகாரத்தில் 16கால் மண்டபத்தில் அம்மன் ஊஞ்சல் சேவை நடக்கும்.
   காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே ஆதி காமாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.  தொடர்புக்கு 9941470606.
கதிராமங்கலம் வனதுர்கை!

    பூலோகத்தில் யாகங்களை செய்யவிடாமல் முனிவர்களை தடுத்து வந்தனர் மகிஷன் சும்பன், நிசும்பன்,பண்டன் ஆகிய அசுரர்கள். இதனால் தேவர்களுக்கு அவிர்பாகம் கிடைக்கவில்லை! அவர்கள் முப்பெரும் தேவர்களான சிவன் விஷ்ணு பிரம்மாவிடம் முறையிட அனைவரும் இணைந்து ஆதிபராசக்தியின் அருள் வேண்டி மிகப்பெரிய யாகம் செய்தனர். யாக குண்டத்தில் தேவி எழுந்தருளி விரைவில் அசுரர்களை அழிப்பதாக வாக்களித்தாள். பின் அசுரர்களை அழித்து தேவர்களை காத்தாள்.பின் அவள் தனித்த நிலையில் சிவமல்லிகா என்று அழைக்கப்பட்ட கதிரா மங்கலத்தில் உலக நலன் கருதி தவம் புரிந்தாள்.
   கதிராமங்கலம் பெயர்க்காரணம்!
    இத்தலத்திற்கு அருகில் கம்பர் வாழ்ந்த தேரழுந்தூர் உள்ளது. இவர் வனதுர்க்கையின் மீது தீவிர பக்தி கொண்டவர்.ஒரு மழைக்காலத்தில் கம்பரின் வீட்டுக் கூரை சிதைந்து போனது. கம்பர் அம்பாளை நினைத்து மனமுருகி வேண்டினார். காலை விழித்தெழுந்த போது அவர் வீட்டுக்கூரை நெற்கதிர்களால் வேயப்பட்டு இருந்தது. கம்பர் மனமுருகி ‘கதிர்வேய்ந்த மங்கலநாயகி’ என்று பாடினார்.  கதிர்வேய்ந்த மங்கலம் என்ற ஊர்ப்பெயர் பின்னாளில் கதிரா மங்கலம் ஆனது.
   இத்தல அம்மனுக்கு ஆகாச துர்க்கை என்ற பெயரும் உண்டு. தினமும் ராகு காலத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன.
  கும்ப கோணத்தில் இருந்து ஆடுதுறை, சூரியனார் கோவில் செல்லும் வழியாக மயிலாடுதுறை செல்லும் வழியில் 26 கீ.மீ தொலைவில் கதிராமங்கலம் அமைந்துள்ளது.
தொடர்புக்கு 04364-232344,232555.

  ஆடிப்பூர திருநாளில் அம்மன் ஆலயங்களுக்கு சென்று வளையல் குங்குமம் மஞ்சள், புஷ்பம் போன்றவகளை வாங்கி அம்மனுக்கு செலுத்தி பெற்று ஏழை எளிய மக்களுக்கு தானமாக வழங்குவோம்!
    அம்மனின் அருளைப் பெறுவோம்! நிம்மதி அடைவோம்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

தானாக தீப்பிடித்து எரியும் குழந்தை! மருத்துவர்கள் திணறல்!

$
0
0
சென்னை: தானாகதீப்பிடித்துஎரியும்அதிசயகுழந்தைசென்னை, கீழ்ப்பாக்கம்அரசுமருத்துவமனையில்சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளான். விழுப்புரம்மாவட்டம், திண்டிவனம்அருகேஉள்ளடி.பரஸ்கனிகிராமத்தைச்சேர்ந்தவர்கர்ணன் (26). இவரதுமனைவிராஜேஸ்வரி (23). காதல்திருமணம்செய்துகொண்டஇவர்களுக்குஒருபெண்குழந்தைஉள்ளது. இந்தநிலையில்கடந்தமேமாதம் 22 ஆம்தேதிஆண்குழந்தைஒன்றுஇந்ததம்பதிக்குபிறந்தது. அந்தகுழந்தைக்குராகுல்எனபெயர்சூட்டினர். சரியாக 8ம்நாளில்குழந்தையின்உடலில்திடீரெனதீப்பிடித்துஎரியஆரம்பித்தது.இதைபார்த்தபெற்றோர்அதிர்ச்சிஅடைந்தனர். தீபிடித்தகுழந்தைபச்சிளங்குழந்தையின்உடலில்தீப்பிடித்துஎரிந்ததால்உடலில்பலஇடங்களில்தீக்காயங்கள்ஏற்பட்டன. சிலநாட்களில்அந்தகாயம்ஆறிப்போனது. ஒருமுறையல்லஇருமுறையல்லபிறந்துஇரண்டரைமாதத்தில்பலமுறைகுழந்தையின்உடலில்தீப்பிடித்துஎரியவேகாரணம்தெரியாதபெற்றோர்கதறித்துடித்தனர். பலமருத்துவமனைக்குசிகிச்சைக்காககொண்டுசென்றநிலையில்கோவில்கோவிலாகப்போய்பரிகாரம்வேறுசெய்தனர். பாண்டிச்சேரியில்சிகிச்சைஇறுதியாக, புதுச்சேரியில்உள்ளஜிப்மர்மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைஅளிக்கப்பட்டது. அதன்பிறகும்ராகுலின்உடலில்தீப்பிடித்துஎரிந்தது. இதனால்அந்தகிராமமக்களேஅதிர்ச்சிஅடைந்தனர். குடும்பத்தைஊரைவிட்டும்ஒதுக்கிவைத்தனர். இதனால்தற்கொலைவரைசென்றார்குழந்தையின்தாய். மண்ணெண்ணைய்வாசனைஇந்நிலையில், குழந்தைதீப்பிடித்தும்எரியும்செய்திதமிழகத்தின்பலபகுதிகளுக்கும்பரவியது. குழந்தையைபரிசோதனைசெய்தமருத்துவர்கள்குழந்தையின்உடலில்இருந்துமண்எண்ணைவாசனைவருவதாகதெரிவித்தனர்.
அதிசயகுழந்தைராகுலைஅதிசயகுழந்தையாகவேமருத்துவர்கள்பார்த்தனர். இதனையடுத்துராகுல், சென்னைகீழ்ப்பாக்கம்அரசுமருத்துவமனைக்குநேற்றுஇரவுகொண்டுவரப்பட்டான். கீழ்ப்பாக்கம்மருத்துவமனைமுதல்வர்ராமகிருஷ்ணன்மேற்பார்வையில்ராகுல்உடல்முழுவதும்பரிசோதனைசெய்யப்பட்டது. மிரண்டமருத்துவர்கள்குழந்தைதீப்பற்றிஎரிவதுகுறித்துபெற்றோர்கூறியதகவல்சென்னைடாக்டர்களையும்மிரளவைத்துள்ளது. குழந்தைகள்நலவார்டில்சிறப்புடாக்டர்குழுவினர்சிகிச்சைஅளித்துவருகிறார்கள். குழந்தைகள்நலம், சிறுநீரகம்துறைமற்றும்தோல்நோய்துறைடாக்டர்கள்முழுமையாகஇன்றுபரிசோதனைசெய்தனர். அபூர்வநோய்குழந்தைராகுலுக்குஉடலில்தீப்பற்றிஎரியும்அபூர்வநோய்ஏற்பட்டுள்ளது. இதுமருத்துவஉலகில்அதிசயம். இப்படிப்பட்டகுழந்தைகள்அரிதாகத்தான்பிறக்கும். அப்படித்தான்ராகுலும்பிறந்துள்ளான். இந்தகுழந்தைஅதிசயகுழந்தைஎன்றேகூறலாம். தமிழ்நாட்டில்முதன்முதலாகஇப்போதுதான்இதுபோன்றுஅதிசயகுழந்தைபிறந்துஇருக்கிறது' மருந்துகிடையாதுகடந்த 300 ஆண்டுகளில்சுமார் 200 குழந்தைகளுக்குஇந்தநோய்இருந்துள்ளது. இவர்களதுஉடலில்இருந்துவெளியேறும்ஆல்கஹால்எனப்படும்வாயுவால், உடலில்தீப்பற்றிக்கொள்கிறது. இதற்குஇதுவரைஎந்தமருந்தும்கண்டுபிடிக்கப்படவில்லை. தீவிரகண்காணிப்பில்ராகுல்ராகுலுக்குதற்போதுதீக்காயத்திற்கானபொதுவானசிகிச்சைஅளிக்கப்பட்டுவருகிறது. ஒருடாக்டர்மற்றும்நர்ஸ்குழந்தையைகண்காணித்துவருகிறார்கள். ராகுலின்பெற்றோரும்அருகில்இருந்துராகுலைகவனித்துவருகின்றனர். மீண்டும்உடலில்தீப்பிடிக்காமல்இருக்கதண்ணீர், தீதடுப்புசாதனங்கள்தயாராகவைக்கப்பட்டுள்ளது.

  நன்றி: தட்ஸ் தமிழ்!

 டிஸ்கி: வியாதிகள் வித்தியாசமாய் வருகின்றன! பச்சிளம் குழந்தைக்கு இந்த மாதிரி வியாதி வந்திருக்க வேண்டாம்! இந்த வேதனையை அனுபவிப்பவர்களால்தான் புரிந்துகொள்ள முடியும்! இந்த நோயிலிருந்து அந்த குழந்தையை இறைவன் காப்பாற்றட்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்! என்னை தொடரும் நண்பர்களும் வாசகர்களும் இந்த குழந்தையை நோயின் பிடியில் இருந்து காப்பாற்ற இறைவனை வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
Viewing all 1537 articles
Browse latest View live