Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 57

$
0
0
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 57
 

1.   பேட்டி எடுக்க வந்த நிருபர் மீது தலைவர் காறித் துப்பிட்டாராமே…!
பல்லு விளக்கிக்கிட்டிருக்கும் போதே பேட்டின்னு மைக்கை நீட்டினா பாவம் அவரும்தான் என்ன செய்வாரு!

2.   அண்ணன் ஏன் சோகமா இருக்கார்? பதவி போயிருச்சுன்னா…?
பதவி கூட வந்த காரும் போயிருமோன்னுதான்!

3.   அடிக்கடி இப்படி கோர்ட் படியேறறியே உனக்கு கஷ்டமா இல்லையா?
ஆமாம் எசமான்! வயசாவது முட்டி நோவு படியேற முடியலை சாய்தளம் அமைச்சா நல்லா இருக்கும்..!
 

4.   எதிரி மன்னன் முற்றுகையிட தொடங்கியதும் மன்னர் இரவு முழுவதும் விழித்திருந்து திட்டம் வகுத்தாராமே எப்படி பதில் தாக்குவது என்றா?
  நீ வேறு… எந்த வாசல் வழியாக தப்பித்துச் செல்லலாம் என்றுதான் …!

5.   கூட்டணியிலே சேர்ந்தா பெட்டி பெட்டியா சம்பாதிக்கலாம்னு தலைவர் காத்துட்டு இருந்தார்…!
அப்புறம்?
யாரும் சேர்த்துக்காம போனதாலே பெட்டி செய்தியை கூட சம்பாதிக்க முடியாம போயிருச்சு!
 

6.   அந்த டாக்டர் ஏடாகூடமான பேர்வழியா இருக்கார்..!
எப்படி சொல்றே?
இடதுகாலுக்கு பண்ண வேண்டிய ஆபரேசனை வலது காலிலே பண்ணிட்டீங்களேன்னு கேட்டா “ரைட்டா” தானே பண்ணி இருக்கேன்னு சொல்றாரே!

7.    பொண்ணுக்கு பாடத்தெரியுமா ஆடத்தெரியுமான்னு கேப்பாங்க ஆனா நீங்க நீந்தத் தெரியுமான்னு வித்தியாசமா கேக்கறீங்களே ஏன்?
பொண்ணு வாழ்க்கைப் படப்போறது சென்னை மாப்பிள்ளைக்கு ஆச்சே…!

8.   உங்க பையன் எங்கிருக்கான்னு கேட்டா எப்பவும் மாமியார் வீட்டுல இருக்கிறதா சொல்றீங்களே வீட்டோட மாப்பிள்ளையா இருக்காரா?
ஜெயிலோட மாப்பிள்ளையா இருக்கார்!

9.   மாமியார் மேல எதுக்கும்மா எடைக் கல்லை தூக்கி போட்டே…?
குக்கர்ல பருப்பை வெச்சுட்டு அவங்கதான் வெயிட்டைப் போடு! வெயிட்டை போடுன்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க…!

10. எங்க மேனேஜருக்கு லஞ்சத்தை கைநீட்டி வாங்கிறது சுத்தமா பிடிக்காது..!
அவ்வளோ நல்லவரா?
 நீ வேற… பேங்க் அக்கவுண்ட்ல போட்டுறச் சொல்லுவாரு!
 




தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!