கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 61.
1. தலைவர் பத்ம விருது கொடுக்கிற நிகழ்சியிலே உளறி கொட்டிட்டார்!
அப்படி என்ன சொன்னார்?
பத்ம விருதுகள் வாங்கிய இவர்களெல்லாம் கூடியவிரைவில் பரம்வீர் சக்ராவும் வாங்க வாழ்த்துக்கள்னுட்டார்!
2. தலைவர் புதுசா கால் செண்டர் துவக்கனதும் யாரோ வேண்டாதவங்க போன் போட்டு கலாய்ச்சிட்டாங்களாம்!
என்னன்னு?
கால் செண்டர் நடத்தறீங்களே? ஆட்டுக்கால் கிடைக்குமா? இல்லே கோழிக்கால் கிடைக்குமான்னு கேட்டிருக்காங்க!
3. ஸ்மார்ட் போனும் புதுப் பொண்டாட்டியும் ஒண்ணுன்னு எப்படி சொல்றே?
தடவிக்கொடுத்து வேலை வாங்கணும் கீறல் பட்டா செலவு அதிகம் வைக்குமே!
4. பேய்ப்படத்துக்கு கூட்டிக்கிட்டு போகச் சொன்னா கூட்டிக்கிட்டே போகமாட்டேங்கறீங்களே…!
நிஜத்துல பேயை பார்த்தா மக்கள் பயந்து ஓடுவாங்களே!
5. இராம நாராயணன் விஜயை வைச்சு படம் எடுத்தா என்ன பேர் வைப்பாரு…?
“குறி”
6. எங்கள் கட்சி தலைவர் உப்புமா கட்சி தலைவராய் இருக்கலாம்! அதற்காக கூட்டணிக்கு அழைத்து வெறும் உப்புமாவை போட்டு அனுப்பியதை வன்மையாக கண்டிக்கின்றோம்!
7. படத்துல ஹீரோயினை மூணு பசங்க லவ் பண்றாங்க! அதுல யாரை கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு ஹீரோயின் ஒரு போட்டி வைக்கிறாங்க! அதுல ஜெயிக்கறவரை கரம் பிடிக்கிறாங்க…!
படத்தோட டைட்டில் என்ன?
தகுதிச் சுற்று!
8. அந்த கிளினிக்லே உன்னை அடிக்கடி பார்க்க முடியுதே? ஏதாவது பெரிய வியாதியா?
அதெல்லாம் ஒண்ணுமில்லே அங்க புதுசா ஒரு நர்ஸ் வந்திருக்காங்க!
9. மந்திரியாரே! மக்கள் ஒழுங்காக கிஸ்தி எல்லாம் கட்டிவிடுகின்றார்களா?
எங்கே மன்னா! குஸ்தி போடத்தெரியாத மன்னனுக்கு எதற்கு கட்டவேண்டும் கிஸ்தி? என்று குரல் எழுப்புகின்றார்கள்!
10. போர்க்களத்தில் மன்னர் கண்மூடி திறப்பதற்குள்….!
எதிரியை வீழ்த்திவிட்டாரா?
காணாமல் போய்விட்டார்!
11. ஆனாலும் நம்ம ராப்பிச்சைக்கு கொழுப்பு அதிகம்?
என்ன பண்ணான்?
மூனு நாளைக்கு பிச்சையெடுக்க வரமாட்டேன்! மிச்ச மீதி வைக்காம எல்லா சோத்தையும் ஐயாவுக்கே போட்டுருங்க! வேஸ்ட் பண்ண வேண்டாம்னு வாட்சப் ல தகவல் அனுப்பியிருக்கான்.
12. அந்த எம்.எல்.ஏ நம்ம கட்சிக்கு டாட்டா காட்டிட்டு போயிட்டாராமே?
ஆமாம்! எதிர்கட்சியிலே நிறைய ”பேட்டா” போட்டுக் கொடுக்கறேன்னு சொன்னாங்களாம்!
13.மாப்பிள்ளை ஸ்டிக்கர் வியாபாரம் பண்றாரு…!
அப்ப நல்ல வருமானம் நிறைய எதிர்பாப்பாருன்னு சொல்லு!
14. தலைவர் அரசியலுக்கு வர்றதுக்கு முன்னே சினிமாவிலே “கெத்தா” இருந்தாராம்!
இப்ப….!
“ வெத்தா” போயிட்டார்!
15. நூறு ஜோக்ஸ் அந்த பத்திரிக்கை எழுதி அனுப்பினதுலே ஒரு ஜோக்கை மட்டும் திருப்பி அனுப்பிட்டாங்களா மீதியை வெளியிட்டுட்டாங்களா?
ஊகும்…! ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்னு சொல்லிட்டாங்க!
16.என்ன சொல்கிறீர்கள் மந்திரியாரே மன்னர் முன் நிறைய சிக்கல்கள் காத்திருக்கின்றனவா?
ஆமாம்… மஹாராணியாரும் இளவரசியும் முடியில் சிக்கலை அவிழ்த்துவிட சொல்லி காத்திருக்கின்றார்கள்!
17. “2016ல் ….”
கட்சியில் ஒருத்தரும் இருக்க மாட்டாங்க தலைவரே!
18. தலைவர் படத்தை ஸ்டிக்கர் ஒட்டினதை எல்லோரும் அரசியல் ஆக்கிட்டாங்களாமே!
“ஒட்டி” அரசியல் பண்றாங்கன்னு சொல்லு!
19. உன் பொண்ணு காதலிக்கிறான்னு சொல்றியே அவ மனசில அவன் எந்த அளவுக்கு இடம் பிடிச்சிருக்கான்…?
அவ வயித்துல ஒரு பிள்ளைக்கு இடம் கொடுக்கற அளவுக்கு…!
20. அந்த ஷாக் ட்ரிட்மெண்ட் கொடுக்கிறதுல எக்ஸ்பர்ட்…!
அதுக்காக ஸ்டெத்தாஸ் கோப்புக்கு பதிலா கரண்ட் ப்ளக்கை கழுத்தில தொங்க விட்டிருக்கிறது கொஞ்சம் கூட நல்லா இல்லை…!
21. தலைவரை ஏன் கட்சியிலே இருந்து நீக்கிட்டாங்க…?
தகவல் அறியும் உரிமை சட்டத்திலே கட்சியோட கொள்கை என்னன்னு கேள்வி கேட்டாராம்!
22. மாலையும் கழுத்துமாக மக்கள் பூமாறி தூவ ஊர்வலத்தில் வருவது போல கனாக் கண்டேன் அமைச்சரே…!
மன்னா! அதில் நீங்கள் யானைமீது அமர்ந்து வந்தீர்களா இல்லை பல்லக்கில் படுத்து வந்தீர்களா மன்னா?
23. நம்ம தலைவருக்கு டைமிங் காமெடி நல்லா வரும்...!
அதுக்காக கட்சியை விட்டு நீக்கனதும் “ என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா! “ அறிக்கை விடறது கொஞ்சம் கூட நல்லா இல்லை!
24. ரொம்ப நாளா உங்க பையன் தடவிகிட்டே இருக்கான் தடவிகிட்டே இருக்கான்னு சொல்றீங்களே அப்படி என்னத்தை தடவுறான்?
ஸ்மார்ட் போனைத்தான்!
25. மன்னருடைய ஆட்சியில் மக்கள் எல்லாம் சந்தோஷமாய் இருக்கிறார்கள் என்று சொல்கிறாயே எப்படி?
எதிரி மன்னன் மன்னரை கலாய்த்து மீம்ஸ் போட்டு வாட்சப் பேஸ்புக் என உலாவிடுகிறானே அதை பார்த்துதான்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!