கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 62
1. ஒளிரும் நிகழ்காலம்…! மிளிரும் எதிர்காலம்…!
வார்டு கவுன்சிலரா இருந்தப்ப பல்பு திருடினதை எல்லாம் இப்படி விளம்பரப் படுத்திக்க வேணாம் தலைவரே…!
2. உன்னோட ப்ரெண்ட் ஒரு மார்வாடி பொண்ணை லவ் பண்ணிக்கிட்டு இருந்தானே எப்படி இருக்கான்?
ஏர்வாடியிலே இருக்கான்!
3. எதிரி இதுவரை என் முகத்தை பார்த்து ஒரு வார்த்தை பேசியது இல்லை தெரியுமா தளபதியாரே!
அவர் படையெடுத்து வரும்போதெல்லாம் நீங்கள் முதுகுகாட்டி ஓடினால் பாவம் அவர் என்ன செய்வார் மன்னா!
4. என்ன சொல்றே? நம்ம தலைவரை நிறைய பேரு லைக் பண்றாங்களா?
ஆமா அவரை கலாய்ச்சு போடற மீம்ஸ் எல்லாம் லைக் அள்ளுதே…!
5. அந்த டாக்டர் ஒரு குடிகாரர்னு எப்படி சொல்றே?
சிரப் எழுதி கொடுத்து காலையிலே ஒரு லார்ஜ் ஏத்திக்கங்கன்னு சொல்றாரே!
6. குலதெய்வத்தை பார்க்காம வரமாட்டேன்னு உன் வொய்ஃப் சொல்றதுல என்ன தப்பு இருக்குன்னு கோச்சுக்கிறே?
அவ பார்க்கறேன்னு சொல்றது குலதெய்வம் சீரியலை!
7. தலைவரோட நமக்கு நாமே திட்டம் பெரிய வெற்றி அடைஞ்சிடுத்தாமே…?
நீ வேற பொதுக்கூட்டத்துக்கு அவரே கூட்டத்தை ஏற்பாடு பண்றதைத்தான் அவர் இப்படி நாசூக்கா சொல்லிக்கிறார்!
8. பட்ஜெட்டில் பற்றாக்குறை இருக்குங்கிறதை தலைவர் தப்பா புரிஞ்சிகிட்டார்…
அப்புறம்?
நல்லா பற்ற வைக்கிற தீக்குச்சியை யூஸ் பண்ண மாட்டாங்களான்னு கேக்கிறார்!
9. தலைவரோட வீடியோ ஒண்ணு வாட்சப்பில் ரிலீஸ் ஆயிருச்சு…!
அப்புறம்?
அவரை பதவியிலிருந்து “ரிலீஸ்” பண்ணி விட்டாங்க!
10.ப்ளட் பேங்க்ல நடந்த கொள்ளைக்கும் நம்ம தலைவருக்கும் என்ன சம்பந்தம் இருக்கு? எதுக்கு விசாரிக்கிறாங்க?
நம்ம தலைவர் மீட்டீங்ல கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச போறேன்னு பேசி இருக்காராமே!
11.பதுங்கு குழியில் இருந்த மன்னரை எதிரிகள் எப்படி பிடித்து விட்டனராம்?
வாட்சப் பார்த்துக்கொண்டிருந்த மன்னர் சிக்னல் கிடைக்கவில்லை என்று வெளியே வந்து சிக்கிக் கொண்டாராம்!
12. தலைவரோட நேர்காணல் டீவியிலே சரியா பத்து மணிக்கு வருதுன்னு தெரிஞ்சதும் எல்லோரும் கிளம்பிட்டாங்க..!
பார்க்கிறதுக்கா…?
இல்லே தூங்கறதுக்கு!
13. நகர்வலத்துக்கு மன்னருடன் இப்போது ராணியாரும் வருகின்றாரே என்ன விஷயம்?
மன்னர் “ டாவு” அடிப்பதை எவனோ வேவு பார்த்து ராணியாரிடம் போட்டுக் கொடுத்துவிட்டானாம்!
14. மன்னர் படுக்கை தலையணையுடன் எங்கே கிளம்புகின்றார்?
சமாதான உடன் படிக்கைக்கு எதிரி அழைத்ததை தவறாக புரிந்துகொண்டு விட்டார் போலும்!
15.புலவரே உங்கள் பாட்டில் சந்த நயம் கொஞ்சம் குறைவாக இருக்கிறதே….!
மன்னா! தாங்கள் பரிசாக கொடுக்கும் தங்கத்திலும் மாற்று கொஞ்சம் குறைவாகத்தானே உள்ளது…!
16.ஆபரேஷனுக்கு முன்னாடி பேஷண்ட்டோட உறவினர்கள் கிட்ட டாக்டர் சிரிச்சு சிரிச்சு பேசி சிரிக்க வைக்கிறாரே….
ஆபரேஷனுக்கு அப்புறம் அவங்களாலே சிரிக்கவே முடியாதே அதனாலதான்
17. ஆபரேஷனுக்கு அப்புறம் நான் எழுந்து நடப்பேனா டாக்டர்?
அந்த கவலையே உங்களுக்கு வேணாம்! உங்களை தூக்கிட்டு போக நாலு பேர் ரெடியா இருப்பாங்க!
18. எதிரி உள்ளே நுழைய நம் பாதுகாப்பில் ஓட்டை ஏதும் இல்லைதானே தளபதியாரே…?
ஒட்டை ஏதும் இல்லை மன்னா… ஆனால்…
என்ன ஆனால்…?
வாசலே திறந்துதான் இருக்கிறது!
19.மக்கள் நலக்கூட்டணியிலே தலைவர் ஏன் சேரமாட்டேன்னு சொல்லிட்டாரு…?
அவருக்குத்தான் பிள்ளைங்களே இல்லையே?
20. பேஸ் புக் பார்த்துக் கொண்டிருந்த மன்னர் ஏன் இப்படி தலைதெறிக்க அவைக்கு ஓடி வருகின்றார்...?
எதிரி மன்னன் மீம்ஸ் போட்டு “ தெறி”க்க விட்டிருப்பான்!
டிஸ்கி} நாளை திருமீயச்சூர் செல்கிறேன்! மாலையில் பயணம். புதனன்று லலிதாம்பிகை அம்மனுக்கு லட்சார்ச்சனை மற்றும் அன்னப்பாவாடை வைபவம். வியாழனன்று மீண்டும் சந்திக்கிறேன்! உங்களின் பதிவுகளையும் படிக்கிறேன்! நன்றி!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!