தளிர் சென்ரியு கவிதைகள்!
அழுக்கு கைகளில்
பளபளத்தது புது நோட்டு!
தேர்தல்!
கட்டிய தோரணங்கள்
கலர் மாறின
அடுத்த கட்சி விஜயம்!
மை பூசிக்கொண்டாலும்
வலிமை காட்டும் தினம்!
தேர்தல் நாள்!
விலை போன வயல்கள்!
விலை உயர்ந்தது
அரிசி!
மரபு மாற்ற பயிர்கள்!
உயிர் இழந்தன
பாரம்பரிய விதைகள்!
விதைகள் அழித்து விவசாயம்!
வியாபாரியான விவசாயி!
மரபு மாற்ற பயிரினங்கள்!
அதிவேகச் சாலைகள்!
அழித்து விட்டன
கிராமத்தின் அடையாளம்!
துரித உணவகங்கள்!
பெருக்கிவிட்டன!
நோயாளிகள்!
உதிரிக் கட்சிகள்
சேர்த்தன சில்லறை!
தேர்தல்!
தேர்தல் குதிரை
கடிவாளமாய் ஆணையம்!
கட்டவிழ துடிக்கும் கட்சிகள்!
கோடிகளில் கோட்டை
கோவணாண்டியிடம் வேட்டை!
வெட்கம் கெட்ட வங்கிகள்!
கலந்து விட்ட இதயங்கள்!
பிளந்து போட்ட ஜாதி!
உலர்ந்து போனது நீதி!
ஒன்று பட்டன கட்சிகள்!
ஒரே கொள்கை!
கிடைக்கும் வரை சுருட்டு!
மின்வெட்டை கண்டித்து போராட்டம்!
கொக்கிப் போட்டு எடுக்கப்பட்டது
ஓடி ஓடி சேகரித்தார்கள்
வாக்கு!
நிறையவில்லை வாக்காளார்கள்!
கூடி தேர் இழுத்தும்
நகரவே இல்லை!
நூறுநாள் வேலை!
தூண்டிலாய் தனியார் பள்ளிகள்!
சிக்கி விட்ட மீன்கள்
மாணவர்கள்!
நூறு சதவித தேர்ச்சி
நிறையவில்லை பள்ளி!
ஒரே மாணவன்!
கோயில்களில் அன்னதானம்!
வாசலில் பட்டினியோடு
பிச்சைக்காரன்!
விலை போகும் மக்கள்!
வீணாகும் தேர்தல்!
மரணக்குழியில் ஜனநாயகம்!
டிஸ்கி} தென்றலாய் வீசிக்கொண்டிருந்த தளிரின் வாழ்க்கையில் ஒருமாதத்திற்கும் மேலாய் புயல்! மனைவி, குழந்தைகள், தந்தை என உடல்நலம் பாதிப்பு காரணமாக தளிர் துவண்டு வாடியது. மீண்டும் தன்னம்பிக்கையோடு துளிர்த்தெழ முயற்சிக்கிறது. விரைவில் வழக்கம் போல பதிவுகளுடன் உயிர்த்தெழுவேன். வாசகர்கள் நண்பர்கள் வாழ்வில் இந்த ஒருமாதத்தில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை உணர முடிகின்றது. விரைவில் உங்களோடு இணைந்திருப்பேன். நன்றி!
சகபதிவர் வைகறை அவர்களின் மரணச் செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். அவரை இழந்துவாடும் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். வைகறை என பெயர்கொண்டதால் வைகறையாய் இறைவன் அவரை அழைத்துக் கொண்டானோ? பழகியதில்லை என்ற போதும் பதைக்கிறது மனது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும். அவரது கனவுகள் நினைவாகட்டும்.
சகபதிவர் வைகறை அவர்களின் மரணச் செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். அவரை இழந்துவாடும் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். வைகறை என பெயர்கொண்டதால் வைகறையாய் இறைவன் அவரை அழைத்துக் கொண்டானோ? பழகியதில்லை என்ற போதும் பதைக்கிறது மனது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும். அவரது கனவுகள் நினைவாகட்டும்.