தளிர் சென்ரியு கவிதைகள்!
புத்தகக் கண்காட்சி!
அமோகமாக விற்றுக்கொண்டிருந்தது
பஜ்ஜி!
சிரித்த முகம்!
சேரூற்றி பாய்ந்தது வாகனம்!
சாலைத்தடுப்பில் விளம்பரம்!
வெள்ளுடைக் காவலர்கள்
கையில் சிறைபட்டது
அழுக்கு நோட்டுக்கள்!
ஏறி இறங்குகையில்
மூச்சிறைத்தது பேருந்து!
மேம்பாலங்கள்!
அரங்கு நிறைந்த காட்சி
வசூல் அள்ளவில்லை!
புத்தகக் கண்காட்சி!
அறுகிப் போன மரங்கள்
உறுகி வழிந்தன
தார்சாலைகள்!
சிதைக்க முடியாமல்
சிதைபட்டது பூமி!
நெகிழிகள்!
உறிஞ்சிக்கொண்டே இருந்தார்கள்
புகுந்தது
கடல்நீர்!
நிறைய நிறைய
குறைந்து போனது சுத்தம்!
நகரம்.
நின்று விற்பவர்களால்
வென்றுகாட்டுகிறார்கள்
துணிக்கடை முதலாளிகள்!
இடம் கிடைக்கவில்லை!
சபிக்கப்பட்டது
அரசுப் பேருந்து!
நேரம் தவறி வந்தாலும்
பதறவில்லை!
மின் வண்டி!
நீரூற்றாமலே முளைத்தன
நீண்ட வீதிகளில்
பாதையோர கடைகள்!
தூய்மை தின விழா
அரசியல்வாதி வருகை!
வெடித்தன பட்டாசுகள்!
கவிழ்ந்து கிடக்கும் குடிமகன்கள்
நிமிர்ந்து நடக்கின்றது
அரசாங்கம்!
இலக்கை எட்டினாலும்
வீழ்ச்சி கண்டது நாடு!
டாஸ்மாக்.
ஏற்றிவிட்டதும்
இறங்கிப்போகிறான் சாமானியன்!
பெட்ரோல் விலை!
வாரம் ஒருமுறை
வர்ணம் மாறின சுவர்கள்!
சுவரொட்டிகள்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!