Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

ஹன்சிகாவை அலற வைத்த நயன் தாரா! சினி நொறுக்ஸ்!

$
0
0

ஐயா படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழுக்கு அறிமுகமானவர் கேரள நடிகையான நயன்தாரா.அதன்பிறகு சிம்புவுடன் மன்மதன் படத்தில் ஜோடி சேர்ந்தார். அப்போதிலிருந்தே அவர்களுக்கிடையே கசமுசா நட்புகள் தொடர்ந்தது. இதனால் அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்றுகூட எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குறுகிய காலத்திற்குள்ளேயே அவர்களது உறவில் விரிசல் விழுந்தது. அதையடுத்து போக்கிரியில் நடித்தபோது அப்படத்தை இயக்கிய பிரபுதேவாவுடன் நட்பாகி பின்னர் அவரையே திருமணம் செய்து கொள்ளவும் முடிவெடுத்தார் நயன்தாரா.
இதன்காரணமாக தனது காதல் மனைவியைகூட விவாகரத்து செய்தார் பிரபுதேவா. நயன்தாராவும் அவருக்காக தனது கிறிஸ்தவ மதத்தில் இருந்து விலகி இந்துவாக மாறினார். இந்தநிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்வோம் என்று சொல்லிக்கொண்டே ஓரிரு வருடங்களை நகர்த்தினர். இந்த சூழ்நிலையில் அவர்களுக்கிடையே என்ன நடந்ததோ, நயன்தாராவை விட்டு பிரிந்தார் பிரபுதேவா. இதனால் கடும் அதிர்ச்சியடைந்தார் நயன். சில மாதங்கள் தனது தாய்வீடான கேரளா சென்று புலம்பிக்கொண்டிருந்தார். அதையடுத்து மீண்டும் கலையுலகம் அழைப்பு விடுக்கவே, தெலுங்கு, தமிழ் என்று பிசியான நடிகையாகி விட்டார் அம்மணி.
இந்த சமயத்தில் எப்போது யாரை திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்கள்? என்று மீடியாக்கள் கேட்கும் கேள்விக்கு, ஆண்களால் நிம்மதி இழந்து விட்டேன். அதனால் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக வாழப்போகிறேன் என்று பதிலுரைத்து வருகிறார் நயன்தாரா. 
ஹன்சிகாவை அலறவைத்த நயன் தாரா!
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெற்றிக்குப்பிறகுதான் ஹன்சிகாவின் மார்க்கெட் சூடுபிடித்தது. அதைத் தொடர்ந்து அனுஷ்கா, அஞ்சலிக்கு செல்லவிருந்த சில படங்கள்கூட ஹன்சிகா பக்கம் திரும்பின. இதனால் தற்போது அரை டஜனுக்கும் மேலான படங்களில் பிசியாக நடித்து வருகிறார் ஹன்சிகா. அதோடு இன்னும் சில ஆண்டுகளுக்கு தன்னை ஓரங்கட்ட எந்த நடிகையும் வர சான்ஸ் இல்லை என்றும் மிதப்பில் இருந்தார்.
இந்த நிலையில், ஹன்சிகாவுக்கு எதிர்பாராத பெரும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் நயன்தாரா. விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடித்து வரும் அவர், அடுத்தபடியாக ஆர்யாவுக்கு ஜோடியாக ராஜா ராணி படத்தில் நடிக்கிறார். ஆனால் இந்த படத்தில் நடிப்பதற்கு முதலில் ஹன்சிகாவிடம்தான் பேசியிருக்கிறார்கள். கால்சீட் கொடுப்பதற்கு ஹன்சிகா தயாராகிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று ஆர்யாவின் அதிரடி சிபாரிசினால் அப்படத்தை கைப்பற்றியிருக்கிறார் நயன்தாரா. இதைத் தொடர்ந்து ஹன்சிகாவுக்காக மாதக்கணக்கில் காத்திருந்த மேலும் சில படங்களும் இப்போது
நயன்தாரா பக்கம் திரும்பி நிற்கின்றன. இதனால் கைவசம் இருக்கும் படங்களோடு தன்னை டெபாசிட் இழக்க செய்து விடுவாரோ நயன்தாரா என்று கலங்கிப்போய் இருக்கிறார் ஹன்சிகா. 
விஜய் படவாய்ப்பை தட்டிக் கழித்த அசின்
கஜினி படத்தின் மூலம் இந்திக்கு சென்ற அசின், அதன்பிறகு கோலிவுட் நடிகர்களை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. அங்குள்ள ஷாரூக்கான், சல்மான்கான், அக்சய்குமார் போன்ற பிரபல நடிகர்களை தனது பாக்கெட்டில் இருப்பதால், கோலிவுட் நடிகர்களெல்லாம் அவருக்கு ஹீரோவாகவே தெரியவில்லையாம். சமீபத்தில்கூட விஜய் படத்தை இயக்கும் தாண்டவம் இயக்குனர் ஏ.எல்.விஜய் அசினிடம் கால்சீட் கேட்டு மும்பைக்கு சென்றாராம். அப்போது துப்பாக்கிக்கு அப்புறம் விஜய் நடிக்கிற படத்தை நான்தான் டைரக்ட் பண்றேன். அந்த படத்துல நீங்க விஜய்யோட ஆக்ட்டு கொடுத்தா சூப்பரா இருக்கும்னு பீல் பண்றேன் என்று தனது பாணியில் அசினிடம் தமிழ், இங்கிலீஷ் இரண்டையும் கலந்து பொறிந்தாராம்.
ஆனால் அதை சுடச்சுட கேட்டுக்கொண்டிருந்த அசின், அவர் பக்கமா திரும்பி, இப்ப அக்சய்குமாரோட கில்லாடி 786 படத்துல நடிக்கிறேன். இதுக்கு அப்புறமா என்னோட நடிக்கிறதுக்கு இரண்டு பெருசு நடிகருங்க க்யூவுல நிக்கிறாங்க. இந்த நேரத்துல நான் கோலிவுட்டுக்கு வந்துட்டா பாவம் இங்க இவங்க ரொம்ப பீல் பண்ணுவாங்க. அதனால் வேற ஏதாச்சும் நடிகைங்கள பாத்துக்கிங்க என்று சொல்லி அனுப்பிவிட்டாராம் அசின். அதையடுத்துதான் தனது ஆஸ்தான நாயகியான அமலாபாலை கமிட் பண்ணியிருக்கிறார் ஏ.எல்.விஜய்.
ஆனால் அசின் சொல்லி அனுப்பிய இந்த சேதியைக்கேட்டு தளபதி நடிகருதான ரொம்ப டென்சனாகி விட்டாராம். எங்கூட நடிச்சு வளர்ந்த நடிகை. எனக்கே டேக்கா கொடுக்குதா? ஏத்தம்னு ஒன்னு இருந்தா, இறக்கம்னு ஒன்று இல்லாமலா போகும். அப்ப பாத்துக்கிறேன் என்று அசின் பெயரை தனது டைரியில் குறிச்சி வைச்சிருக்கிறாராம் .                       நன்றி  தினமலர்                                                                                                                                                                                       டிஸ்கி: கடந்த மூன்று தினங்களாக குழந்தைக்கு பெயர்சூட்டு விழா, பாட்டி சிரார்த்தம், உறவினர் வருகை என பிசியாக இருந்தமையால் பதிவிட முடியவில்லை! இன்று  இந்த காப்பி பேஸ்ட்!  பேஜ் வியுவை தக்கவைக்க! நன்றி!  



Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!