Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

சகல சௌபாக்கியம் தரும் சனிப்பிரதோஷ வழிபாடு!

$
0
0
சகல சௌபாக்கியம் தரும் சனிப்பிரதோஷ வழிபாடு!



  சிவாலயங்களில் பட்சம் தோறும் வழிபடும் சிறந்ததொரு வழிபாடு பிரதோஷம் ஆகும். ஒவ்வொரு மாதமும் சுக்லபட்சம் மற்றும் கிருஷ்ணபட்சம் திரயோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலமாக அனுசரிக்க படுகின்றது.

பிரதோஷங்களில் நித்ய பிரதோஷம், பட்ச பிரதோஷம், மஹாபிரதோஷம் என்று வகைபடுத்தப்பட்டுள்ளது.

   பாற்கடலை கடைகையில் வெளிப்பட்ட ஆலகால விஷத்தை தாங்க முடியாமல் தேவர்கள் அங்கும் இங்கும் சிதறி ஓட நந்தி தேவர் அதை திரட்டி சிவனிடம் வழங்க சிவபெருமான் விழுங்கிவிட்டார். உடனிருந்த உமாதேவி கழுத்தினில் அழுத்த விஷம் கீழிறங்காமல் நெஞ்சுக்குழியோடு நின்றுவிட்டது. சிவன் திரு நீலகண்டன் ஆனார்.

   சிவன் அச்சமயத்தில் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே நர்த்தனம் ஆடினார். அனைத்து தேவர்களும் அங்கே கூடி இருந்தனர். இதன் காரணமாகவே பிரதோஷ வேளையில் வேறு சன்னதிகளில் பூஜை நடப்பதில்லை! பிரதோஷ காலத்தில் எல்லா தெய்வங்களும் சிவாலயத்தில் கூடுவதாக ஐதீகம்.


  இப்படி விஷம் உட்கொண்ட சிவன் நந்தியின் கொம்புகளுக்கு இடையில் நர்த்தனம் ஆடியது ஓரு தேய்பிறை சனிப் பிரதோஷ காலமாகும். எனவே சனிப் பிரதோஷம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.
 எனவே இது மஹா பிரதோஷம் என்று சொல்லப்படுகின்றது. மஹா பிரதோஷ காலத்தில் பகலில் உபவாசம் இருந்து மாலையில் தம்பதிகளாக சிவாலயம் சென்று சிவனை வழிபடுவதால் தரித்திரம் விலகும். ஞானம் கிட்டும்.

பிரதோஷ வேளைரஜ்னிமுக வேளை என்றும்அழைக்கப்படுகிறது
அதற்கு இரவின் முகம் என்பதுபொருள்.தோஷம் என்றால்குற்றமுள்ள என்று பொருள்.பிரதோஷம் என்றால் குற்றமில்லாததுகுற்றமற்ற அந்தவேளையில் ஈசனைத் தொழநம் தோஷங் கள் நீங்கும்.ஈசன் விஷத்தையுண்டுசயனித்துபிறகு எழுந்துமுதன்முதலாக 
சந்தியா தாண்டவத்தை ஆடியது ஒருசனிக்கிழமை மாலையில்தான் 
என்பதால்
சனிப்பிரதோஷம் சிறப்பானதுநாம் யாருக்காவது கடன்கொடுக்க 
வேண்டியிருந்தால் அதில் ஒரு சிறு தொகையைசனிப்பிரதோஷ 
வேளையில் தரநம் கடன்கள் சீக்கிரம்அடைபடும் என்பார்கள்.


பிரதோஷபூஜைஅபிஷேகத்திற்கானபொருள்களும்பலன்களும்
மலர்கள் - தெய்வதரிசனம்கிடைக்கும்
பழங்கள் - விளைச்சல்பெருகும்
சந்தனம் - சிறப்பானசக்திகள்பெறலாம்
சர்க்கரை - எதிர்ப்புகள்மறையும்
தேன் - இனியசாரீரம்கிடைக்கும்
பஞ்சாமிர்தம் - செல்வம்பெருகும்
எண்ணெய்சுகவாழ்வுகிடைக்கும்
இளநீர் - நல்லமக்கட்பேறுகிடைக்கும்
பால் - நோய்தீரும்நீண்டஆயுள்கிடைக்கும்.
தயிர் - பலவளமும்உண்டாகும்
நெய் - முக்திபேறுகிடைக்கும்


ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால்,ஐந்து வருடங்கள்தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும் என அனுபவம்
 மிக்கசிவனடியார்கள் தெரிவிக்கின்றனர்.

சிவாலயங்களை பிரதோஷ காலத்தில் பின்வருமாறுதான் வலம் வர வேண்டும். இந்த பிரதட்சணம் சோம சூக்த பிரதட்சணம் என்று வழங்கப்படுகிறது

 நந்தி பெருமானிடம் இருந்து புறப்பட்டு இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை வணங்கி அங்கிருந்து திரும்பி நந்திபெருமானிடம் வணங்கி இரு கொம்புகளிடையே சிவதரிசனம் செய்து அங்கிருந்து வலப்புறமாக சென்று கோமுகி வரை சென்று கோமுகியை வணங்கி பின்னர் திரும்பி நந்தி தேவரிடம் வந்து வணங்கி சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும் பின்னர் அங்கிருந்து திரும்பி நந்திதேவரை வணங்கி கோமுகியை வணங்கவேண்டும். அங்கிருந்து வந்து சண்டிகேஸ்வரரை வணங்கிவிட்டு நந்தி தேவரிடம் பிரதட்சணத்தை முடிக்க வேண்டும். இது சோமசூக்த பிரதட்சணம் என்று வழங்கப்படுகிறது.
பிரதோஷவேளையில்ஸோமஸூக்தபிரதக்ஷிணம்அளவற்றபலனைத்தரும். ஸத்புத்ரசந்தானம்எனும்குழந்தைபாக்கியம்கிடைக்கும். வாழ்வுவளமாகும்.
ஸோமஸூக்தபிரதக்ஷிணம்என்பதைமிகஎளியவகையில்செய்யஒருஉபாயம்உண்டு.
   கோ
  கோ
  
மேற்கண்டகுறியீடுகளைஞாபகம்கொண்டுஎளிதில்வலம்வரலாம்.
- நந்தி
- சண்டிகேஸ்வரர்
கோ - கோமுகிஎனும்ஆலயக்கருவறையிலிருந்துஅபிஷேகத்
தீர்த்தம்விழும்இடம்.


பிரதோஷகாலத்தில்நந்தியைவழிபடுவதால்கிடைக்கும்பலன்கள் :
1. செல்வங்கள்பெருகும்.
2. கடன்தொல்லைகள்நீங்கும்,
3. நோய்கள்அகலும்
4. எதிரிகளால்ஏற்படும்அனைத்துதீயசெயல்களும்செயலற்றுப்போகும்.
5. குழந்தைகளின்கல்விமேம்படும்.
6. வேண்டியவரம்கிட்டும்.
7. குழந்தைகள்எவ்விதமானகஷ்டமும்இன்றிஉணவுஎடுத்துக்கொள்ளும்.
8. நீடித்தஆயுள்கிட்டும்.
9. சிவசக்தியின்அருள்பரிபூரணமாகக்கிடைக்கும்.

 தினசரி கோவிலுக்கு சென்று வழிபட்டால் பஞ்சமாபாவங்கள் விலகும்ஒரு சனிப்பிரதோஷ வழிபாடு 108 சிவபூஜை செய்த பலன் உண்டாகும்.

பிரதோஷ காலத்தில் பிரபலமான ஆலயங்களில் கூட்டம் நிரம்பும் சுவாமி தரிசனம் கிடைப்பதில் நிம்மதி இருக்காது. அதே சமயம் பழமையான ஊரைவிட்டு ஒதுங்கி இருக்கும் ஆலயங்களில் வழிபாட்டிற்கு கூட வழி இருக்காது. அம்மாதிரி ஆலயங்களை கண்டுணர்ந்து அங்கு பிரதோஷ பூஜையை நடத்துவதால் ஆலயமும் சுபிட்சமாகும். நாமும் நலம் பெறுவோம்.


பிரதோஷ காலத்தில் சிவபெருமானையும் நந்தியெம்பெருமானையும் வழிபாடு செய்து வாழ்வில் வளங்கள் பெறுவோமாக!

(படித்து தொகுத்தது)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!