தளிர் சென்ரியு கவிதைகள்!
”குடி”புகுந்ததும்
ஓடவிரட்டப்பட்டது
தன்மானம்!
முகநூல் பழக்கம்
முடிவுரை எழுதியது
சுவாதி படுகொலை!
கூச்சல் போட்டு
காப்பாற்றுகிறது
ஆம்புலன்ஸ்!
விரிவான சாலைகள்
விழுங்கி முடித்தன
மரங்கள்!
கட்டுப்பாடு உடைத்து
தட்டுப்பாடின்றி கிடைத்தது
பான் மசாலா!
அறுவடை ஆகின மரங்கள்
விளைந்தது
வெம்மை!
தீக்குளித்தாலும்
உயிரை இழக்கவில்லை!
பாலீத்தீன் கவர்!
படித்தவர்களிடம்
பட்டுப் போனது மனிதம்!
சுவாதி படுகொலை!
பற்ற வைத்தவனிடம்
பற்று வைத்தது
சிகரெட்!
உடைந்த நதிகள்
குடையப்பட்டன
ஆற்றுமணல் கொள்ளை!
பெருகும் வாகனங்கள்
கறுகிப் போனது
சூழல்!
கையெழுத்தைக்
களவாடிக் கொண்டது
விசைப்பலகை!
புற்றீசலாய் கல்லூரிகள்
பொறியில் சிக்கிய எலி
மாணவர்கள்!
முதலின்றி லாபம்
முதலாளிஆகவில்லை
பிச்சைக்காரன்!
இருட்டில் தொலைந்தது
வெளிச்சத்தில் தேடல்!
கச்சத் தீவு!
வரவேற்பரையில்
பறிமாறப்படுகின்றது விஷம்!
தொலைக்காட்சி தொடர்கள்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!