தளிர் ஹைக்கூ கவிதைகள்!
1. அடைபட்டது விடுபட்டதும்
அலறியது குழந்தை!
பலூன்!
2. குழந்தை சோறு உண்கையில்
கூட சாப்பிட்டு மகிழ்கிறது
பூமி!
3. பொத்தல் விழுந்த வானம்
வெளிச்சம் போட்டு காட்டியது
இரவு!
4. பிச்சைக்காரனிடம் கையேந்தினார்
நடத்துனர்
சில்லறைக் காசு!
5. அடங்காப் பசி!
தூக்கத்தை தொலைத்தன
நகரங்கள்!
6. ஒளிரும் முத்துக்கள்!
ஒளிக்க இடம் தேடின
மின்மினிகள்!
7. எதையும் தொலைக்காமல்
தேடிக்கொண்டிருக்கின்றன
எறும்புகள்!
8. புற்று நோய்!
கொல்லப்பட்டன
எறும்புகள்!
9. ஆட்டுவித்தபடி
ஆடிக்கொண்டிருக்கிறது!
நிழல்!
10.கொப்பளித்தது
ஆற்றுவாரில்லை!
குழந்தையிடம் குறும்பு!
11.உப்பு மூட்டை
கரைந்து போகிறார் தாத்தா
குழந்தை!
12.மாற்றங்களின் பிறப்பிடம்
மாறாமல் இருக்கிறது
பள்ளிக்கூடம்!
13.உயரத்தில் இருந்து விழுந்தாலும்
உயிரை இழக்கவில்லை!
சருகு!
14.ஓட ஓட விரட்டினாலும்
ஒட்டிக்கொள்கிறது
சட்டையில் அழுக்கு!
15.வெயில் இறங்கியதும்
சூடு பிடித்தது
நடைபாதை வியாபாரம்!
16.கயிறே இல்லாமல்
கட்டிப்போட்டது
குழந்தையின் சிரிப்பு!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி