Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

தளிர் ஹைக்கூ கவிதைகள்

$
0
0

இரவல்நகை!
பாராட்டினார்கள்!
நிலா!


பயந்து
பயப்படுத்துகிறது
பாம்பு!


தொங்கிக்கொண்டேஇருக்கிறது
வலிக்கவில்லை!
பல்பு!

 
ஒளித்துவைத்ததை
உடைத்துகுடித்தார்கள்!
இளநீர்!

அலைந்துகொண்டேஇருக்கிறது
அவதிப்படுகிறோம்
மனசு!

பிள்ளைகள்வளர்கையில்
வயதாகிறது
நமக்கு!

கண்சிமிட்டின
களங்கம்அடையவில்லை!
நட்சத்திரங்கள்!

விளக்கினடியில்
விருந்து
தவளை!


அழுகை சத்தம்!
மகிழ்ந்தார்கள்!
பிரசவம்!

வலி!
இன்பமானது
சுக பிரசவம்
 
மைபூசியதும்
பொட்டுஇட்டுக்கொண்டதுவானம்!
நிலா!

 
வானில்பிறந்தாலும்
மண்ணோடுகலக்கிறது
நீர்!

அழகானபூ
மிதிபட்டது!
மிதியடி!

துப்பறிந்ததும்
விரட்டப்படுகின்றன!
எறும்புகள்!

அசைந்தாலும்
நகரவில்லை!
நீரில்நிழல்!

 

தேடிக்கொண்டேஇருக்கின்றன
எதையும்தொலைக்கவில்லை!
எறும்புகள்!




 தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள் நன்றி!

Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles