Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

கருணாநிதியை கடுப்பாக்கிய அழகிரி பிறந்தநாள் போஸ்டர்

$
0
0
சென்னை நகர் முழுவதும் மு.க.அழகிரியின் பிறந்தநாளை ஒட்டி அவரது ஆதரவாளர் ஒருவர் ஒட்டியிருந்த போஸ்டரைக் கண்டு திமுக தலைவர் கருணாநிதி கடும் கோபம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் ஜி.வெங்கட் என்கிற ஜி.வி.ரமணா (இருவரும் திமுகவினர் அல்ல) வரும் 30-ந் தேதி அழகிரியின் பிறந்தநாளை ஒட்டி சென்னை நகர் முழுவதும் குறிப்பாக கருணாநிதியின் வீடு உள்ள கோபாலபுரம் பகுதியில் ஒருசுவர் கூட விடாமல் 3 வித போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில் அழகிரியின் படம் மட்டும்தான் இடம்பெற்றுள்ளது. திமுகவினர் எப்போதும் பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் படத்தை சேர்த்து அச்சிடுவதே வழக்கம். இப்படி ஒட்டப்பட்ட போஸ்டர்களில். சுவரொட்டி வாசகங்கள்: கண்ணகி சிலம்பும், மனோகரன் விலங்கும் வீழ்ந்ததா வீழ்த்தியதா.? அதுக்கும் மேல.. அதுக்கும் மேல... அதுக்கும் மேலே.. அண்ணன் உசுருலே. இங்கே பரமசிவனும் இல்லை. நாங்கள் கருடனும் இல்லை. நடப்பது ராம நாடகமே என கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மு.க.ஸ்டாலின் தான் அடுத்த தலைவர் என்று கருணாநிதி அறிவித்துவிட்ட நிலையில் அழகிரியின் சார்பாக கருணாநிதியை கடுப்பேற்றும் வகையில்தான் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இதைப் பார்த்த கருணாநிதியும் அனைத்து போஸ்டர்களையும் எப்படியாவது கிழித்து எறியுமாறு உத்தரவிட்டிருக்கிறார்.

இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலைடா நாராயணா! இவங்க நாடகம் எப்போ முடியும்! திண்ணை எப்போ காலியாகும்!                                                                     நன்றி: தட்ஸ் தமிழ்
 

Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!