கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 80
1. மன்னா! படையெடுப்பு என்றதும் நம் வீரர்கள் ஆளாய்ப் பறக்கிறார்கள்!
போர்க்களத்திற்கா!
இல்லை பதுங்கு குழிக்கு!
2. என் பையன் எதையும் நீட்டி முழக்கிப் பேசறான் டாக்டர்!
வருங்காலத்துல சீரியல் டைரக்டரா வருவான்னு சொல்லுங்க!
3. பொண்ணுக்கு பையனை பிடிக்கலையாம் நாசூக்கா சொல்லிருச்சு!
எப்படி?
வாட்சப் குருப் ல இருந்து லெப்ட் ஆகிருச்சே!
4. தலைவர் புதுசா இங்கிலீஷ் கத்துக்கிறாராம்!
அதுக்காக உள்ளாட்சி தேர்தலை “இன்னர்வேர் எலக்ஷன்”னு சொல்றது கொஞ்சம் கூட நல்லா இல்லை!
5. அந்த ஜோஸ்யர் போலின்னு எப்படி சொல்றே?
சோழியை உருட்டி ஜோஸ்யம் பார்க்கிறதுக்கு பதிலா கோலியை உருட்டி ஜோஸ்யம் சொல்றாரே!
6. மந்திரியாரே அவையில் புலவர்களை காணவில்லையே!
எல்லோரும் சூப்பர் சிங்கருக்கு பாடப்போய்விட்டார்கள் மன்னா! நீங்கள் கொடுப்பதைவிட அங்கு அதிகம் சன்மானம் கிடைக்கிறதாம்!
7. அந்த எழுத்தாளர் எழுதி எழுதியே நிறைய சேர்த்து வைச்சிருக்காராமே!
ஆமாம் நிறைய குப்பைகளை!
8. அதோ போறாரே அவர் நிறைய ஜோடிகளை சேர்த்து வைச்சிருக்கார்!
காதல் ஜோடிகளையா?
ஊகும்! கல்யாண மண்டபத்தில நிறைய செருப்புக்களை!
9. விடிகாலை அஞ்சு மணிக்கு என் வொய்ஃப் கரெக்டா எழுந்திருவா!
பலே! அப்புறம்!
என்னை எழுப்பி விட்டுட்டு திரும்பவும் படுத்து தூங்கிடுவா!
10.தலைவரை யாரும் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையாம்!
அப்புறம்!
கட்சியோட பேரை கூட்டணிக் கட்சின்னு மாத்தி அறிவிச்சிட்டார்!
11.வாட்சப் குருப்ல இருந்து லெப்ட் ஆக மாட்டேன்னு தலைவர் அடம் பிடிக்கிறாரா ஏன்?
அவருக்கு இடதுசாரி கொள்கை பிடிக்காதாம்!
12. பொண்ணு சுயநலமா இருக்குதுன்னு எப்படி சொல்றீங்க?
நிறைய செல்ஃபி எடுத்து வைச்சிருக்கறதை வைச்சுத்தான்!
13. இப்ப எதுக்கு போய் வேலைக்காரியோட புடவையை இழுத்து விடறீங்க?
நீதானே சொன்னே ஜன்னல் திறந்திருக்கு கொஞ்சம் மூடுங்கன்னு!
14.தலைவர் எதுக்கு மைக் முன்னாடி வந்து ஊதிக் காட்டிக்கிட்டு இருக்கார்?
அவர் போதையில இல்லைன்னு நிருபிக்கிறாராம்!
15.அன்னிய முதலீடுகள் நாட்டுக்கு தேவைன்னு தலைவர்கிட்ட சொன்னது தப்பா போயிருச்சு!
ஏன்? என்ன ஆச்சு?
வெளிநாட்டு பெண் ஒருத்தியை கல்யாணம் பண்ணிகிட்டார்!
16.யாருகிட்டேயும் விலை போக மாட்டேன்னு நம்ம தலைவர் சொல்லிட்டார்!
அதுக்காக அவரை “விலையில்லா தலைவர்”னு கூப்பிடறது கொஞ்சம் கூட நல்லா இல்லை!
17.கொட்டுற மழையில தலைவரை நிக்க வைச்சு கேள்வி கேக்கவும் அவர் தலை சாயம் எல்லாம் கரைஞ்சு போயிருச்சு!
அப்ப சாயம் வெளுத்துப் போச்சுன்னு சொல்லு!
18. வெற்றி! வெற்றி! எதிரி தோற்று ஓடிப்போய்விட்டான்!
பகல்கனவு காணாதீர்கள் மன்னா! இன்னும் போரே ஆரம்பிக்கவில்லை!
19.அந்த ஜூஸ் கடையில என்ன கலாட்டா?
புருட் மிக்சர் வாங்கினவர் மிக்சர் கொடுக்காம ஏமாத்தறாங்கன்னு சண்டை போடறாராம்!
20. அந்த டாக்டர் பயங்கர கிண்டல் பேர்வழி!
எப்படி சொல்றே?
ஆபரேஷன் பண்ற தேதியை குறிச்சிட்டு பேஷண்ட் கிட்ட யுவர் கவுண்ட் டவுண் ஸ்டார்ட்னு சொல்லிட்டு பொறாரே!
21. தலைவருக்கு இன்னும் யாரும் பெட்டியே தரலை போலிருக்கு!
எப்படி சொல்றே?
எங்களை யாரும் ”கவனிக்கவே மாட்டேன்”கிறார்கள்னு சொல்றாரே!
22.ஒரு காலத்துல தலைவர் எடுக்க போற முடிவுக்காக கட்சிங்க எல்லாம் காத்துக் கிடந்துச்சு!
இப்ப?
எந்த கட்சியாவது கூப்பிட்டு தனக்கு விடிவு” வராதான்னு தலைவர் காத்திட்டிருக்கார்
23.என் மனைவி ஒரு சர்வாதிகாரியா நடந்துக்கிறா?
என்ன செய்யறா?
சமையல் கட்டுல சிசிடிவி காமிரா வைச்சிட்டா! சமைக்காம ஓ.பி அடிக்கிறதை பார்த்தா உடனே வந்துடறா!
24.பட்டத்து யானைமீது ஏறி செல்ஃபி எடுக்கும் மன்னரின் கனவு சிதைந்து போய்விட்டது!
என்ன ஆயிற்று!
தவறி விழுந்த செல்போனை யானை மிதித்து சிதைத்துவிட்டது!
25. எப்ப பேட்டிக்கு கூப்பிட்டாலும் ”மூடு” இல்லைன்னு இனிமே சொல்லாதீங்க தலைவரே!
ஏன்?
கட்சிக்கு “மூடு” விழா நடத்திட்டாரோன்னு வெளியே பேசிக்க ஆரம்பிச்சிட்டாங்க!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கபடுத்துங்கள்! நன்றி!