தளிர் சென்ரியூ கவிதைகள்!
1. பை நிறைய நோட்டுக்கள்
சில்லரை கேட்டார்!
நடத்துனர்.
2. கேட்டு வாங்கினர் வாக்கு!
வென்றதும் தவறிப்போயினர்
வாக்கு!
3. பாகனுக்கு தட்சணை
கொடுத்ததும் கிடைத்தது
யானையின் ஆசிர்வாதம்!
4. சவுக்கடி இரத்தம் பீறிட்டாலும்
இரக்கம் பீறிடவில்லை!
பிச்சைக்காரன்!
5. ஏலம் போகும் தலைவர்கள்!
விலைபோகும் வாக்காளர்கள்!
விற்பனையானது ஜனநாயகம்!
6. வாய்ச்சண்டை
வாட்சப்பை விட்டு
விலகினாள் காதலி!
7. பள்ளிக்கூடம் சென்றனர்
பாடம் படிக்கவில்லை!
தேர்தல்!
8. கையைக் கடித்தாலும்
காயம் ஏதுமில்லை!
திடீர் செலவு!
9. தண்ணீர் திறந்துவிடக்கோரி போராட்டம்
அருகில் ஒழுகிக்கொண்டிருந்தது
குழாய் நீர்!
10.சிதறிக்கிடந்தது குப்பைகள்!
அருகில் காலியாக இருந்தது
குப்பைத் தொட்டி!
11.கட் அவுட்டிற்கு பாலபிஷேகம்
பசியில் அழுதது
பாலூற்றியவன் குழந்தை!
12.வேட்பாளரின் தூண்டிலில்
வசமாக சிக்கிக்கொண்டது!
வாக்காளரின் வாக்கு!
13.வழி தவறியவன்
வழிநடந்தனர் மக்கள்!
போலிச்சாமியார்!
14.புதுமுகமாய் அறிமுகம்!
தன் முகம் இழந்தாள்
நடிகை!
15. நடை திறந்ததும்
அலைமோதியது பக்தர்கள் கூட்டம்!
டாஸ்மாக்!
16.இலக்கை எட்டாமல்
பதவியிழந்தார் மந்திரி!
இலஞ்சம்!
17.தூர்ந்து போன குளங்கள்!
தீர்ந்து போனது
நீர் ஆதாரம்!
18.ஓடிப் பிழைத்துக் கொண்டான்
ஒருலட்சம் கோடி
கடனாளி!
19.சில்லரையை இரைத்து
நோட்டைப் பொறுக்குகிறார்கள்!
தேர்தல்!
20.ஆயிரம் வசதிகள் அரசு மருத்துவமனையில்
அறிமுகப்படுத்திய அமைச்சர் சேர்ந்தார்
தனியார் மருத்துவமனையில்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!