Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

இந்த வார குங்குமத்தில் எனது ஒருபக்க கதை!

$
0
0
இந்த வார குங்குமத்தில் எனது ஒருபக்க கதை!

   பத்திரிக்கைகளில் படைப்புக்கள் வெளிவர வேண்டும் என்று ஒருவருட காலமாக முயற்சித்து வருகிறேன். கடந்த டிசம்பரில் வாரமலரில் ஜோக் வெளிவந்த பின் விடாது முயற்சித்து வருகிறேன். அதன் பலன் பாக்யா இதழில் அவ்வப்போது ஜோக்ஸ்கள் வெளிவந்தன. ஆகஸ்ட் மாதத்தில் விகடனில் நுழைந்தேன். குமுதம், குங்குமம், ஜன்னல், சிறுவர் மலர் என்று விடாது எழுதி போட்டுக் கொண்டிருந்தாலும் படைப்புக்கள் வெளியாகவில்லை!
   குங்குமத்திற்கு நிறைய ஜோக்ஸ்கள், அனுப்பினேன். சில நான்கு மாதங்களை கடந்து விட்டது. அதே போல்தான் ஒரே நாளில் நான்கு ஒருபக்க கதைகள் அனுப்பினேன். கடந்த ஜூன் 26ம் தேதி அனுப்பியது. நாள் கடந்து விட்டது. இனி  அவ்வளவுதான் என்று  நினைத்து விட்டேன்.
  இன்று மதியம் 12 மணிக்கு சீர்காழி ஆர் சீதாராமன் சார் போன் பண்ணி வாழ்த்திய போதுதான் குங்குமத்தில் எனது  ஒரு பக்க கதை வந்திருக்கிறது என்று தெரிந்தது.
       அப்போதுதான் வெளியே சென்று வந்திருந்தேன். வீட்டு பராமரிப்பு மராமத்து பணிகள் நடந்து கொண்டிருந்தது. எனவே வெளியே செல்ல முடியவில்லை! பவர் கட் அதனால் இணையத்திலும் சென்று பார்க்க முடியவில்லை!  போனிலும்  என்  குழந்தைகள் யூடியுப் ரைம்ஸ் பார்த்து சார்ஜ் இல்லாமல் பண்ணி விட்டார்கள்.
   மனம் பரபரப்புடன் இருந்தது. 8 மணி வாக்கில் கரண்ட் வந்தது சார்ஜ் போட்டு நெட் ஓப்பன் பண்ணி வாட்சப் குருப் போய்  என் கதை பதிவை பார்த்து பரவசம் ஆனேன். வாட்சப் குழுவினர் பலர் வாழ்த்தி இருந்தனர். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களுக்கு நன்றி தெரிவித்தேன்.

   தகவல் சொன்ன கோபாலன் சார், சீதாராமன் சார், வாட்சப்பில் பதிவிட்டு வாழ்த்திய தங்க நாகேந்திரன் சார் மற்றும் வாட்சப் தோழர்கள், முகநூல் தோழர்கள், வலைப்பூ தோழமைகள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களின் ஊக்கமூட்டும் வார்த்தைகள் என்னை நீரூற்றி வளர்த்து வருகிறது.

   தளிரின் வெற்றியில் உங்களின் பங்களிப்பிற்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். வெளியிட்ட குங்குமம் ஆசிரியர் குழுவினருக்கும்  எனது நன்றிகள்.  கதை கீழே!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Viewing all articles
Browse latest Browse all 1537

Latest Images

Trending Articles


சாலை விபத்துகளும், அவற்றைத் தடுப்பதற்கான சட்டத் தேவைகளும்..!


சித்தன் அருள் - 768 - தாமிரபரணி புஷ்கரம், அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர்!


விருப்பங்கள் நிறைவேற காமாட்சி தேவி மந்திரம்


சென்ற வார பாக்யா ஜனவரி 20-26 இதழில் என் ஜோக்ஸ்!


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


என்னிடம் நிர்வாண புகைப்படத்தை கேட்ட சீரியல் குழு அதிகாரி: நடிகை திவ்யா!


சோழர் பாசன திட்டம் என்றால் என்ன? அன்புமணி வைத்த அதிரடி கோரிக்கை-பின்னணி...


வெண்முரசு- குருபூர்ணிமா சிறப்புச் சலுகை


தொ.மு.சியின் புதுமைப்பித்தன் -கிருஷ்ணன் சங்கரன்


தகழி சிவசங்கரப்பிள்ளையின் ஏணிப்படிகள்



Latest Images