Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

சட்டம் ஒழுங்குக்கே முன்னுரிமை; கமல் மீது தனிப்பட்ட வெறுப்பு இல்லை: முதல்வர் ஜெயலலிதா

$
0
0

 ஒரு முதல்வராக சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதே தனது முன்னுரிமை என்றும், தனக்கு நடிகர் கமல் மீது தனிப்பட்ட வெறுப்பு ஏதுமில்லை என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல் நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் கடந்த 25ம் தேதி திரையிடப்படுவதாக இருந்தது. ஆனால் இத்திரைப்படம் வெளியானால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் எனக்கூறி, படத்திற்கு தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர்கள் 15 நாள் தடை விதித்து உத்தரவிட்டனர். இதை எதிர்த்து கமல் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து தனி நீதிபதி வெங்கட்ராமன் திரைப்படத்தை பார்வையிட்டு, மாவட்ட கலெக்டர்களின் தடையுத்தரவிற்கு தடை விதித்தார். இதையடுத்து விஸ்வரூபம் திரையிடப்படும் என கமல் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். எனினும் சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. இதை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) எலிபி தர்மாராவ் மற்றும் அருணா ஜெகதீசன் அடங்கிய பெஞ்ச், படத்திற்கு மீண்டும் தடை விதித்து உத்தரவிட்டனர்.

இதனிடையே, சில முஸ்லிம் அமைப்புகள் நேற்று நடிகர் கமலை சந்தித்து பேசினர். அப்போது விஸ்வரூபம் படத்தில் உள்ள சில ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க கமல் ஒப்புக்கொண்டார். இதையடுத்து தனக்கும், தனது முஸ்லிம் நண்பர்களுக்கும் இடையே எந்த பிரச்னையும் இல்லை என தெரிவித்தார். படத்தின் சில காட்சிகளை நீக்க கமல் ஒப்புக்கொண்டதை வரவேற்ற மற்ற முஸ்லிம் அமைப்புகள், எந்த காட்சிகள் நீக்கப்படவுள்ளன என்பது குறித்து தங்களுடன் ஆலோசிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில், இன்று காலை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா, மாநில டி.ஜி.பி., ராமானுஜம், தலைமைச் செயலாளர் ஷீலா பால கிருஷ்ணன், அரசு வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், "கடந்த சில நாட்களாக, விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. எதையும் முறையாக அறிந்து கொள்ளாமல் இது போன்ற செய்திகள் பரப்பப்படுவதையடுத்து, இதற்கு விளக்கமளிப்பது எனது கடமை. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதே எனது முதல் கடமை. இதை சிலர் புரிந்து கொள்ளவில்லை. மக்கள் எவ்வித பிரச்னையும் இல்லாமல் தங்களது வேலைகளை செய்ய வேண்டும். விஸ்வரூபத்திற்கு அனுமதி அளித்திருந்தால் வன்முறைகள் ஏற்படும் என உளவுத்துறை அளித்த அறிக்கையின் காரணமாகவே அப்படம் தடை செய்யப்பட்டது. அதை மீறி, அது திரையிடப்பட்டிருந்தால், வன்முறை ஏற்பட்டிருக்கும். தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் வெளியாகும் 524 தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க 31 ஆயிரத்து 440 போலீசார் தேவை. ஆனால் தமிழகத்தில் உள்ள மொத்த போலீசாரின் எண்ணிக்கையே 91 ஆயிரத்து 807 தான். அசம்பாவிதங்களை தடுப்பது தமிழக அரசின் கடமை. நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டே படம் தடை செய்யப்பட்டது. ஜெயா டி.வி., அ.தி.மு.க.,வை ஆதரிக்கிறது. அந்த டி.வி.,யில் எனக்கோ, அ.தி.மு.க.,வுக்கு எந்த பங்கும் இல்லை. மேலும், கமல் மீது எனக்கு எவ்வித தனிப்பட்ட வெறுப்பும் இல்லை. கடந்த 1980ம் ஆண்டுகளில் நடந்ததாக தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறும் விஷயங்கள் மிகவும் கேலியானது. அப்படி ஒரு கடிதத்தையே நான் எம்.ஜி.ஆருக்கு எழுதவில்லை. எம்.ஜி.ஆரை தினமும் சந்தித்த எனக்கு கடிதம் எழுத வேண்டிய அவசியம் இல்லை. என்னைப் பற்றி தவறான செய்தியை தெரிவித்த கருணாநிதி மீது நடவடிக்கை எடுப்பேன். வேட்டி கட்டிய தமிழன் ஒருவர் பிரதமராவார் என கமல் பேசியதாலேயே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்ற கருத்து பேசப்பட்டு வருகிறது. நான் கடந்த 30 ஆண்டுகள் அரசியலில் இருக்கிறேன். யார் பிரதமரை தேர்ந்தெடுப்பார்கள் என்பது எனக்கு தெரியும். நாட்டிலுள்ள 100 கோடி மக்களே பிரதமரை தேர்ந்தெடுக்கிறார்கள். கமல் பிரதமரை தேர்ந்தெடுப்பதில்லை. அவர் எனக்கு போட்டியாளரும் இல்லை. எனவே இதன் காரணமாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது உண்மையல்ல. சினிமா ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ் ஒரு படத்திற்கு மாநில அரசு நேரிடையாக தடை விதிக்க முடியும். இதன் அடிப்படையிலேயே டேம் 999 படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. 
விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக பல்வேறு முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும், நடிகர் கமல் ஒரு காட்சியைக் கூட நீக்க தயாராக இல்லை. சமரசத்துக்கும் கமல் முன்வரவில்லை. கமல் பெரிய முதலீட்டில் படம் எடுத்திருந்தாலும், அதற்கு அவரே பொறுப்பேற்க வேண்டும். படத்துக்கு அனுமதி அளித்து பெரிய கலவரம் ஏற்பட்டிருந்தால் அப்போதும் மீடியாக்கள் என்னை விமர்சித்திருக்கும். அரசு எல்லாவற்றிற்கும் பொறுப்பேற்க முடியாது. இருதரப்பும் சுமூகமாக பேசி இப்பிரச்னையை தீர்த்துக் கொள்ள முன்வந்தால், தமிழக அரசு அதற்கு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.                                                                                                                         

நன்றி தினமலர்.


Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!