Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள்! பகுதி 25

$
0
0
நொடிக்கதைகள் பகுதி 25


1.   நோட்டு!
  “ ஆயிரம் ரூபா நோட்டு மாத்திக்குவீங்களா சார்?” என்று தயங்கியபடி மெடிக்கல் ஸ்டோரில் கேட்டபோது, “மாத்திக்குவோம் சார் என்றுசொன்னதும் மகிழ்ந்து ஆயிரம் ரூபாய்தாளை நீட்ட வாங்கிக்கொண்டு இரண்டு ஐநூறு ரூபா தாள்களைத் தந்தார் கடைக்காரர்.

2.   பசி:
பசியால் அழுத குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டிருந்தாள் தாய். பசி அடங்காது அதையே முறைத்துக் கொண்டு பார்த்துக்கொண்டிருந்தன இரண்டு மிருகங்கள்.

3.   பக்தி:
  கடவுளுக்கு நேர்ந்து கொண்டு ஒவ்வொரு படியாக ஏறிக் கொண்டு இருக்கையில் இறங்கி வந்துகொண்டு இருந்தார் கடவுள்.


4.   மகிழ்ச்சி!
   பஸ்ஸை விட்டு இறங்குகையில்தான் கவனித்தான். பேண்ட் பாக்கெட் ஓட்டையாக இருப்பதை.பர்ஸை எவனோ அடித்துவிட்டான். “ஹாஹாஹா” வென சிரித்தான். வெச்சிருந்த ஒத்தை ஐநூறுரூபாயை திருடிட்டியா எப்படி மாத்தப் போறேயோ?”

5.   கடன்:
   வாங்கிய கடனை கட்ட முடியவில்லை என்று விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதை செய்தியில் ஹாயாகப் பார்த்துக் கொண்டிருந்தார் பல கோடிகள் கடனாக பெற்று தலைமறைவான கோடீஸ்வரர்.

6.   பானிப்பூரி!
   ரோட்டோரம் பானிப்பூரி வியாபாரம் நன்கு நடந்து கொண்டிருந்தது. வியாபாரம் முடிந்ததும் அன்றைய வசூலை எண்ணி பாக்கெட்டில் வைத்த வட மாநில இளைஞர்கள் ஹோட்டலுக்கு சென்று இட்லி ஆர்டர் செய்தனர்.


7.   பொய்மையும் வாய்மையிடத்து!
  தான் கிறுக்கலாக வரைந்த ஓவியத்தை காட்டி நன்றாக இருக்கிறதா என்று கேட்ட குழந்தையிடம் சூப்பரா இருக்கு என்று சொன்னான். கண்களில் மகிழ்ச்சி ஒளிர்ந்தது குழந்தைக்கு.

8.   லீவ்!
  இந்த வருஷம் மழையே கம்மி! சரியா பெய்யலை! என்று பேசிக்கொண்டு இருக்கையில் ஆமாம்பா! இன்னும் ஒரு நாள் கூட மழைக்கு ஸ்கூல் லீவ் விடலை! என்றது குழந்தை.


9.   கடன்!
   அஞ்சு லட்சம் வங்கியில் கடன் வாங்கி மளிகை கடை ஆரம்பித்த அண்ணாச்சி முதல் காரியமாக கடையில் “கடன் அன்பை முறிக்கும்” என்று எழுதி தொங்கவிட்டார்.

10.கலப்பு!
   கலப்பு விதைகள் விதைச்சிருக்கேன்! நல்ல விளைச்சல் கிடைக்குமாம். நல்ல லாபம் வரும் என்றவர் மகன் வேறு ஜாதிப் பெண்ணை காதலிக்கிறான் என்றதும் எரிந்து விழுந்தார்.

11.துக்கவீடு!

   துக்க வீடு நிறைந்திருந்தது வந்திருந்தோர் கையில் ஒலித்த பல்வேறு செல்போன் ரிங் டோன் சத்தங்களால்!

12.தாவல்!
   கட்சி தாவி வந்தவருக்கு சீட் கொடுத்திருக்கீங்க! இத்தனைவருஷம் கட்சியில் இருந்தவனுக்கு மதிப்பில்லை! நான் போறேன் என்று கட்சி மாறியவருக்கு உடனே சீட் தரப்பட்டது சேர்ந்த கட்சியில்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!




Viewing all articles
Browse latest Browse all 1537

Latest Images

Trending Articles



Latest Images