Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

சுபிட்சம் அளிக்கும் அன்னாபிஷேக தரிசனம்!

$
0
0
சுபிட்சம் அளிக்கும் அன்னாபிஷேக தரிசனம்!


ஐப்பசி மாத பவுர்ணமி அன்று சந்திரன் பூர்ண சந்திரனாய் தனது பதினாறு கலைகளும் ஜொலிக்க ஒளிர்கின்றான். அன்று சந்திரன் அமிர்த கலையாக ஜொலிக்கின்றான்.அஸ்வினி நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி தினம் சிவனுக்கு அன்னாபிஷேக தினமாகும். சிவன் பிம்ப ஸ்வரூபி. சிவன்பிம்பரூபி, அவரதுமெய்யன்பர்கள்பிரதிபிம்பரூபிகள். பிம்பம்திருப்திஅடைந்தால்பிரதிபிம்பம்திருப்திபெறும்அன்னம் லிங்க ஸ்வரூபம். ஒவ்வொரு அரிசியும் ஒரு லிங்க வடிவம்.

வேதத்தில் அஹமன்னம், அஹமன்னம் அஹமன்னதோ என்று கூறப்பட்டுள்ளது.எங்கும்நிறைந்திருக்கும்பரம்பொருள்அன்னத்தின்வடிவில்இருப்பதாககூறப்பட்டுள்ளதுஅன்னம்தான்உலகில்வாழும்அனைத்துஜீவராசிகளுக்கும்உயிர்நாடி. உலகவாழ்கைக்குஅச்சாணி. அன்னம்பிரம்ம, விஷ்ணு, சிவசொரூபம்.

தில்லையிலேஅனுதினமும்காலைபதினோறுமணியளவில்ஸ்படிகலிங்கத்துக்கு அன்னாபிஷேகம்நடைபெற்றுஅந்தஅன்னம்பக்தர்கள்அனைவருக்கும்பிரசாதமாகவழங்கப்படுகின்றது. எனவேதான்இத்தலத்தைஅப்பர்பெருமான் அன்னம்பாலிக்கும்தில்லைசிற்றம்பலம் என்றுசிறப்பித்துப்பாடினார். இந்தஅன்னாபிஷேகத்தைதரிசித்துபிரசாதத்தைஏற்றுக்கொண்டவர்களுக்குஎன்றுமேஅன்னஆகாரத்திற்குகவலையேஇல்லை.

சிவன் அபிஷேகப் பிரியர். மொத்தம் எழுபது வகை திரவியங்கள் அபிஷேகத்திற்கு சொல்லப்பட்டுள்ளன. அவற்றுள் அன்னமும் ஒன்று. ஒவ்வொரு அன்னமும் ஒருலிங்கம் என்பதால் அன்னாபிஷேகத் தினத்தில் சிவனை தரிசித்தால் கோடிலிங்க பலன் கிடைக்கும்.
சோறு கண்ட இடம் சொர்கம் என்ற சொலவடை உண்டு. அது டேரா போட்டு தங்கும் உறவினர்களை குறிப்பதன்று. ஐப்பசி அன்னாபிஷெக தரிசனத்தை கண்டவருக்கு சொர்கத்தில் இடம் உண்டு என்பது ஆகும்.
ஐப்பசிபௌர்ணமிநாளன்றுஅனைத்துசிவாலயங்களிலும்  அன்னாபிஷேகம்  எனப்படும்சிறப்புவழிபாடுலிங்கமூர்த்திக்குநடத்தப்படுகிறது.

அனைத்துஉயிர்களுக்கும்அன்னமானஉணவைஅளித்துப்பாதுகாக்கும்சிவபெருமானுக்குசுத்தஅன்னத்தைக்கொண்டுமுழுக்காட்டுவதுஇந்தநாளின்சிறப்பாகும். இனிப்பு, காய்கறிமற்றும்பழங்களுடன்செய்யப்படும்சுத்தஅன்னாபிஷேகக்காட்சி, ஆலயத்துக்குவழிபடவரும்பக்தர்களைபரவசத்துக்குள்ளாக்குகிறது. இந்தஅன்னாபிஷேகநாளன்றுசிவாலயங்களில்கருவறையிலுள்ளசிவபெருமானுக்குஅபிஷேகஆராதனைமுடிந்தபின்னர், சமைத்தசுத்தஅன்னத்தைக்கொண்டுதிருமுழுக்காட்டப்படுகிறது. லிங்கத்திருமேனிமறையுமளவுக்குஅன்னம்குவிக்கப்பட்டு, இனிப்புகள், பழங்கள்நிவேதனதுக்குவைக்கப்பட்டுசிறப்புதீபாராதனைகள்நடைபெறுகின்றன.இந்தஅன்னாபிஷேகநாளன்றுஇறைவனைத்தரிசித்துபிரசாதத்தைஉட்கொள்வதைபெரும்பேறாகபக்தர்கள்கருதுவதுடன், வரும்காலங்களில்வாழ்வில்பஞ்சமேஇராதுஎன்றும்நம்புகின்றனர். அத்துடன்  அபிஷேகஅன்னத்தைஎறும்பு, கால்நடை, பறவைஉள்ளிட்டஎல்லாஉயிர்களுக்கும்அளிப்பர்.

சிவன்பரம்பொருள், அவனதுபிரதிபிம்பமேஅனைத்துஜீவராசிகளும், இரண்டும்வேறல்ல. அபிஷேகஅன்னப்போர்வையால்ஐயன்அகமும்புறமும்குளிரும்போதுஎல்லாஜீவராசிகளும்அவனதுபேரருட்கருணையினால்குளிர்வதுஇயற்கைதானே.
ஆகாயத்தில்பிறந்தகாற்றின்துணையுடன்தீஎரிகின்றது. நிலத்தில்விளைந்தநெல்அரிசியாகின்றது. அரிசிநீரில்மூழ்கி, தீயில்வெந்துஅன்னமாகின்றது. எனவேஅன்னமும்பஞ்சபூதங்களின்சேர்க்கை. இந்தஅன்னம்அபிஷேகநிலையில்ஆண்டவன்மேனிமுழுவதும்தழுவிஅவனைஅகப்ப்டுத்திஅடைக்கலமாகின்றது. அதன்மூலம்ஐம்பூதங்களும்அவனுள்அடக்கமென்பதுபுலனாகின்றது.எனவேஅவனேபரம்பொருள்என்பதுதெள்ளத்தெளிவாகதெரிகின்றது.
அன்னாபிஷேகம்செய்தசாதத்தைகுழந்தைபாக்கியம்இல்லாதவர்கள்உண்டால்பலன்நிச்சயம்உண்டுஎன்பதுஐதீகம்.
சிவபுராணத்தில் உள்ள ஒரு கதை உணவின் முக்கியத்துவத்தைக் கூறுகிறது. இவ்வுலகில் உள்ளோர் எல்லோரும் உணவு உண்டார்களா தெரியவில்லையே எனச் சந்தேகம் எழுப்பினாராம் பார்வதி தேவி சிவபிரானிடம். அனைவரும் இன்றைய பொழுதில் உணவு உண்டாகிவிட்டது என்று பதில் கூறினாராம் சிவன்.

இங்கே, கைலாயத்தில் என்னுடனேயே தங்கி இருக்கும்போது, இது தங்களுக்கு எப்படித் தெரியும் என்று தேவி கேட்க, யாம் அனைத்தையும் அறிவோம் என்கிறார் சிவன். இதனைச் சோதிக்கப் பார்வதி தேவி முடிவு செய்கிறார். மறுநாள் சிறிய தங்கச் சம்படத்தில் எறும்பு ஒன்றைப் போட்டு அடைத்துவைத்தாள் தேவி. பின்னர் மதிய உணவு வேளையின்பொழுது, அனைவருக்கும் உணவு கிடைத்ததா என்று தேவி கேட்க, என்ன இது தினமும் கேட்க ஆரம்பித்துவிட்டாய், அனைவரும் உண்டார்கள் என்று பதிலிறுத்தார் சிவன்.

தன் புடவைத் தலைப்பில் சம்படத்தை முடிந்து வைத்திருந்த தேவி, அதனை எடுத்துத் திறந்தபடியே, இதில் இருக்கும் எறும்பும் சாப்பிட்டதா என்று கூறியபடியே அப்பாத்திரத்தினுள் பார்க்க, அதில் இருந்த அரிசியை எறும்பு உண்டுகொண்டிருந்தது. திகைத்தாள் பார்வதி.

கல்லுக்குள் தேரைக்கும், கருப்பை உயிற்கும் உள்ளுணர்வே தரும் தயாபரன் சிவன். அந்த லிங்கத் திருமேனிக்கு ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று ஆண்டுதோறும் அன்னாபிஷேகம் உலகமெங்கும் நடைபெறும். 
உணவு. உணவின்றி உயிரில்லை. உயிரின்றி உலகில்லை.
அன்னம் எனும் உணவேஅனைத்திற்கும் ஆதாரம்.வேதங்கள் அன்னத்தை மிகவும் போற்றுகின்றன. தைத்ரீயஉபநிஷதம், சாம வேதம் போன்ற ஸ்ம்ருதிகள் அன்னத்தின் புகழைப் பறைசாற்றுகின்றன. 

சோறு நம் பசிப்பிணியினை போக்கவல்லது! வயிற்றுத்தீயை அணைக்கவல்லது! யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி என்றார் திருமூலர்! அத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னத்தை இறைவனுக்கு அபிஷேகம் செய்து அதை பிரசாதமாக பெறுவது என்பது நம் பாக்கியம் ஆகும். இன்று அன்னாபிஷேக நன்னாள். 

பொதுவாகஅபிஷேகம்செய்யப்பட்டஅன்னத்தைஓடும்நீரில்கரைத்துவிடுவதுவழக்கம். குறிப்பாகலிங்கத்தின்மீதுஇருக்கும்அன்னத்தின்விடுத்துமற்றஇடங்களில்உள்ளஅன்னத்தைஎடுத்துதயிர்கலந்துபிரசாதமாககொடுக்கின்றனர். மீதமானஅன்னம்திருக்குளத்திலோஅல்லதுகடலிலோகரைக்கப்படுகின்றது. எம்பெருமானின்அருட்பிரசாதம்நீர்வாழ்உயிரினங்களுக்கும்கிடைக்கவேண்டும்என்பதால்இவ்விதம்செய்யப்படுகின்றது.

அன்னமே தெய்வம்! எனப்படுகிறது. இந்த காலத்தில் எப்படி எப்படியோ உணவுகள் வீணாக்கப்படுகிறது. ஒரு பருக்கை சாதம் சாக்கடையில் வீசினாலும் அடுத்த ஜென்மத்தில் புழுவாக பிறக்கவேண்டும் என்கிறது சாஸ்திரங்கள்! இரவில் விளக்கு வெளிச்சம் இன்றி உணவை அருந்தக் கூடாது என்றும் சொல்லப்படுகிறது.

 ஐப்பசிமாதப் பவுர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம்முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறான்.அது என்ன சாபம்? தெரிந்த கதைதான். 

சந்திரன், அஸ்வினி, முதல் ரேவதிவரையான தனது நட்சத்திர மனைவியரு ரோகிணியிடம் மட்டும் தனி அன்புசெலுத்தி மற்றவர்களிடம் பாரபட்சம் காட்டியதால், மாமனார் தட்சனால் உடல்தேயட்டும் என்று பெற்ற சாபம். 
சந்திரனுக்கு ஒவ்வொரு கலையாக தேயஆரம்பித்ததுஅவன் மிகவும் 
வருந்திக் கெஞ்சவே, திங்களூரில் சிவனை பூஜித்தால்சாப விமோசனம்கிடைக்கும்என்றார், தட்சன். உடனே அவன் திங்களூர் வந்துசிவனை நோக்கி தவம் செய்யத் துவங்கினான். அவன் மேனியின் ஒளி நாளுக்கு நாள்மங்கத் துவங்கியது. மூன்றே மூன்று கலைகள் மிச்சமிருக்கும் போது சிவனார்,அவன்பால் மனமிரங்கி அந்தப் பிறையைத் தனது தலையில் அணிந்து கொண்டார்.கொடுத்த வாக்கை மீறிய அவனுக்கு பதினாறு கலைகளும் கிடைக்கப் பெற்றாலும்முழுப்பொலிவும் வருடத்தின் ஒரு நாள் அதாவது ஐப்பசி பவுர்ணமி அன்று மட்டுமேகிடைக்கும். அது மட்டுமல்ல அவனது ஒளி தினமும் தேயும் முழுவதும் மறைந்துபின் படிப்படியாக வளரும். இது எப்போதும் நடக்கும் ஒரு சுழற்சியாக இருக்கும்என்று அருளிச் செய்தார் விடைவாகனர். திங்கள் முடிசூடியவருக்கு மதிமுழுமையான ஒளியுடன் இருக்கும் நாளில் சிறப்பு வழிபாடு செய்வதுதானே சிறப்பு !

ஆன்மிக ரீதியாக மட்டுமன்றி அறிவியல் ரீதியாகவும் இதற்கு ஆதாரம் இருக்கிறது.அக்டோபர் (ஐப்பசி) மாதத்தில்தான் நிலவு, பூமிக்கு மிக அருகில் வந்து தனது முழுஒளியையும் பூமியை நோக்கி வீசுகிறது என்கிறது வானவியல். நவகிரங்களில்சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. இதை உணர்ந்த நமது ரிஷிகள் அந்த மாதத்தில்அன்னாபிஷேகம் செய்வது சிறப்பு என்று கண்டறிந்து அதனைநடைமுறைப்படுத்தினார்கள்.

இந்நாளில்உபவாசம்இருந்துமஹாபிஷேகம்செய்துபின்சிவனுக்குஅன்னாபிஶேகம்செய்தபிரசாதத்தைஉண்ணும்போதுபக்திபுண்ணியபலன்கள்சேர்கின்றன.
வாடாமல்உயிரெனும்பயிர்தழைத்து
ஓங்கிமிக  அருள்மழைபொழிந்தும்இன்ப
வாரிதியிலேநின்னதன்பெனுஞ்சிறகால்
வருந்தாமலேயணைத்து
கோடாமல்வளர்சிற்றெறும்புமுதல்
குஞ்சரக்  கூட்டமுதலானž
கோடிகள்தமக்குபுசிக்கும்புசிப்பினை
குறையாமலேகொடுக்கும்
அந்தசர்வேஸ்வரனைஅன்னாபிஷேககோலத்தில்வருடத்தின்ஒருநாள்மட்டுமேகிட்டும்அந்தஅற்புததிருக்கோலத்தைகண்டுதரிசித்து, ஆலயம்தோறும்அன்னாபிஷேகம்சிறப்பாகநடைபெறநம்மால்முடிந்தஉதவிசெய்துநன்மையடைவோமாக.

(படித்து தொகுத்தது)


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!