Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

சோகங்கள் போக்கும் சோமவார வழிபாடு!

$
0
0
சோகங்கள் போக்கும் சோமவார வழிபாடு!




கார்த்திகை மாத பவுர்ணமி நாளில்தான் சிவபெருமான் ஜோதி வடிவமாக தோன்றினார். இதுவே கார்த்திகை தீபமாக கொண்டாடப்படுகிறது. சோமம் என்றால் சந்திரன் சோமவாரம் திங்கள் கிழமை. கார்த்திகை மாதத்தில் வரும் திங்கள் கிழமைகள் சோமவாரமாக கொண்டாடப்படுகின்றது. தேய்ந்து போகும் படி சபிக்கப்பட்ட சந்திரன் சோமவார விரதம் இருந்து சாபவிமோசனம் பெற்று சிவபெருமானின் ஜடாமுடியில் சூடிக்கொள்ளப்பட்டான். அத்தனை சிறப்பு பெற்றது சோமவார விரதம்.

சந்திரனின்நல்வாழ்வுக்காகஅவனுடையமனைவிரோகிணிஅவனுடன்சேர்ந்துஇந்தவிரதத்தைக்கடைப்பிடித்தாள். அன்றுமுதல், பெண்கள்சௌபாக்கியத்துடன்திகழவும், கணவனுக்குமேன்மைகள்உண்டாகவும், 

நோய்நொடிகள்இல்லாமல்இருக்கவும், இந்தவிரதத்தைக்கடைப்பிடிக்கின்றனர்.

சோமவாரவிரதம்ஆண்டுமுழுவதும்கடைப்பிடிக்கவேண்டியதாகும். என்றாலும், கார்த்திகைமாதத்துச்சோமவாரங்கள் (திங்கள்கிழமைகள்) தனிச்சிறப்புபெறுகின்றன.

கார்த்திகை மாதத்தில் சிவன் அக்னிப்பிழம்பாக இருப்பதால் அவரை குளிர்விக்க சங்காபிஷேகம் செய்விக்கப்படுகின்றது. கார்த்திகை சோமவார விரதம் கடைபிடிப்பவர்களிடம் நான் பிரியமாக இருப்பேன் என்று சிவபெருமான் சொன்னதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.

கார்த்திகை மாதத்தில் ஒவ்வொருவர் இல்லத்தில் உள்ள நீரிலும் ஸ்ரீமன் நாராயணன் இருப்பதாக ஐதீகம். இம்மாதத்தில் செய்யப்படும் பூஜைக்கு பலன் அதிகம். இம்மாதத்தில் மஹாவிஷ்ணுவை கஸ்தூரியால் அபிஷேகம் செய்து தாமரை மலர்களால் அர்சித்து வழிபட நம் இல்லங்களில் மஹாலஷ்மி குடிபுகுவாள். வில்வ இலையினால் விஷ்ணுவையும் சிவனையும் அர்ச்சித்து வழிபட்டால் மறுபிறவி இல்லை என்று நூல்கள் குறிப்பிடுகின்றன.

மனிதனுடைய உடலில் ஆறு மாதங்கள் சேரும் கழிவுகளை நீக்கி சுத்தமடையச் செய்ய கார்த்திகை மாதத்திலிருந்து தை மாதம்வரை மூன்று மாதங்கள் புனித நீராடலும் விரதங்களும் தொடங்குகின்றன.

மாதங்களில் மார்கழியாக இருப்பவர் நாராயணன். கார்த்திகையாக இருப்பவர் சிவபெருமான். சோமவார தினத்தில் காலையில் வீட்டில் தீபம் ஏற்றிச் சிவனைக் குறித்து விரதம் இருந்து ஒரு வேளை சிறிதளவே  ஆகாரம் எடுத்து, இரவில் உறங்கி மறுநாள் நீராடி விரதத்தைப் பூர்த்தி செய்தல் வேண்டும். இப்படியாக விரதம் செய்பவர்கள் சிவனின் அருள் பெற்று உய்வர் 

கார்த்திகை மாதத்தில் விடியற்காலையிலும் அந்திப்பொழுதிலும் வாசல் தெளித்து கோலமிட்டு விளக்கேற்றி வழிபட துன்பங்கள் அகலும்.

கார்த்திகை சோமவார வழிபாடு பல்லாண்டுகளாக சிவாலயங்களில் சிறப்பாக நடத்தப்படுகிறது.  சோமவார அபிஷேகம் நடக்கும் சிவாலயங்களுக்குச் சென்று தீபம் ஏற்றி அபிஷேகப் பொருட்கள் புஷ்பம் முதலியனவற்றை சிவனுக்கு சமர்பித்து பூஜையில் கலந்து கொள்வது சிறப்பாகும்.

கிராமங்களில் கவனிப்பார் அற்று இருக்கும் சிவாலயங்கள் ஏராளம். அந்த ஆலயங்களில் சோமவார பூஜைக்கு ஏற்பாடு செய்து பூஜை செய்து வழிபட சிவனருள் கிடைக்கும்.

  தேய்ந்து போன சந்திரனை தனது சடையில் சூடி சந்திர சேகரர் ஆனார் சிவபெருமான். அவருக்கு பிரியமான சோமவார விரதம் இருந்து நம் வாழ்வின் தேய்பிறையில் இருந்து வளர்பிறையாக வளர அவரின் அருள் பெறுவோமாக!

(படித்து தொகுத்தது)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!