Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள்! பகுதி 27

$
0
0
நொடிக்கதைகள் பகுதி 27.


1.   ரெடிமேட்!
  ஜவுளிக்கடையில் தனக்குப் பொருத்தமான ரெடிமேட் சட்டையைத் தேடித் தேடி எடுத்துக் கொண்டிருந்தான் அந்த ஜெண்ட்ஸ் டைலர்.

2.   வரன்!
  பொண்ணு ஐ.டி ஃபீல்டுல மாசம் ஒரு லட்சம் சம்பாதிக்குது! அதுக்கு பொருத்தமா அதே பீல்டுல அதிக சம்பளம் வாங்கிற வரனா பாருங்க தரகரே என்று சொல்லிக்கொண்டிருந்தார் பெண்ணைப்பெற்றவர்.

3.   முகூர்த்த நாள்:
  இன்னிக்கு முகூர்த்த நாள். கலெக்‌ஷன் அள்ளும் என்று தெம்போடு தொழிலுக்கு கிளம்பினான் பிக்பாக்கெட் கொள்ளையன்.

4.   நோ டிக்கெட்!
  ஐநூறு ரூபா நோட்டெல்லாம் வாங்க முடியாது. சில்லறையா கொடுத்து டிக்கெட் வாங்கிக்கங்க மத்தவங்க கீழே இறங்குங்க! என்று கண்டக்டர் சொன்னதும் காலியாகி போனது பஸ்!

5.   முரண்!

உட்கார்ந்த இடத்தில் இருந்தே எல்லோரையும் ஏவி வேலை வாங்கி பழக்கப்பட்டவன் உடல் இளைக்க காலையில் ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடினான்.

6.   ரியல் எஸ்டேட்!
   ரிட்டையர் ஆனதும் சொந்த ஊருக்கு வந்த செந்தில் விளைநிலங்களை மனைகளாக்கி விற்க ஆரம்பித்தார்.

7.    விருந்து!
  70 ஐட்டங்களுடன் தடபுடலாக கல்யாண விருந்து அளித்த அந்த புதுமண தம்பதிகள் விருந்துண்ண வந்தபோது இலையில் வைக்க ஒரு ஐட்டமும் மீதம் இல்லை!

8.   வாசிப்பு!

  நியுஸ்பேப்பர் விற்கும் பெட்டிக்கடையில் அந்த வாரப் புத்தகத்தை ஆவலாக வாங்கி புரட்டி “என்னோட கதை வந்திருக்கு! படிச்சு பாருங்கசார் என்றபோது கடைக்காரர் சொன்னார் சார் விக்கிறதோட சரி! எனக்கு படிக்கத் தெரியாது!

9.   துக்கம்!
   பல மக்கள் பசியாற அன்னதானம் செய்த தலைவர் இறந்தார். கடையடைப்பில் பலபேருக்கு அன்று கிடைக்கவில்லை சோறு!

10.முரண்!
     வரிசையிலே வாங்கப்பா! இப்படி முண்டியடிச்சா எப்படி நாங்க ஒர்க் பண்றது என்று பேங்கில் வாடிக்கையாளரிடம் சொன்னவர். ஸ்டேஷனில் டிக்கெட் வாங்க வரிசையை முந்திக்கொண்டிருந்தார்.


11. நிம்மதி!
   இறந்து போனார் தலைவர்! ஒருநாள் கடையடைத்தவர்கள் நிம்மதிபெருமூச்சு விட்டார்கள் ஒரு நாள் வியாபாரம் போனாலும் கடை பொருளெல்லாம் தப்பிச்சிருச்சு!

  .
12. அரட்டை!
   “எல்லோரும் டீக்கடையிலே உக்காந்து அரட்டை அடிச்சிகிட்டு அரசியல் பேசிக்கிட்டிருக்கிற வெட்டிபசங்க! இப்படி இருந்தா நாடு எப்படி முன்னேறும்?” என்று அலுவலகத்தில் வாட்சப் தட்டிக்கொண்டிருந்தான் மூர்த்தி.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!