Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

நான்கெழுத்து நடிகையின் ரகசிய மீட்டிங்கும்! ஆர்யாவின் புலம்பலும்! சினிமா கதம்பம்!

$
0
0
சமீபகாலமாக நடிகைகள் குடும்பத்தையும், தொழிலையும் ஒரே இடத்தில் வைத்து குழப்பிக்கொள்வதில்லை. சினிமா என்கிறபோது அது சம்பந்தப்பட்ட நபர்களை சந்திக்க தனி இடம் வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் அங்காடித்தெரு நடிகை தன்னை சந்திக்க வரும் சினிமா விஐபிக்களை சந்திப்பதற்கென்றே சென்னையில் நவீன சினிமா தியேட்டர்கள் அடங்கிய ஒரு வர்த்தக வளாகத்தில் தங்கும் அறையை வாடகைக்கு எடுத்து வைத்திருக்கிறார். யாராவது கதை சொல்ல வேண்டும் என்று சொன்னால் இங்குதான் அவர்களை சந்திக்கிறார்.

அதோடு மட்டுமின்றி, சினிமாவுக்கு சம்பந்தமில்லாத விஐபிக்களுடனான சந்திப்பையும் இங்குதான் நடத்துகிறார் அம்மணி. அப்படி அவர்களுடன் சந்திப்பு நிகழ்த்தும்போது, நடிகையுடன் செல்லும் தாய்குலம் மகளின் சந்திப்புக்கு இடையூறாக இருக்க விரும்பாமல் அந்த வளாகத்தில் உள்ள தியேட்டருக்கு சினிமா பார்க்க சென்று விடுவாராம். இரண்டறை மணிநேரம் அவர் சினிமா பார்த்து விட்டு வருவதற்குள், வந்திருக்கும் விஐபியுடனான ரகசிய சந்திப்பை முடித்துக்கொள்வாராம் நடிகை. ஆரம்பத்தில் அவ்வப்போது நடைபெற்று வந்த இதுபோன்ற சந்திப்புகள், இப்போது அடிக்கடி நடக்கிறதாம். இதனால் பார்த்த படத்தையே திரும்பத்திரும்ப பார்க்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறாராம் தாய்குலம்.


வசந்தபாலன் இயக்கிய அங்காடித்தெரு படத்தில் நடித்தவர் மகேஷ். அந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு அவர் ஒரு ஸ்போர்ட்ஸ் மேன். இந்திய அளவில் பெரிய விளையாட்டு வீரராக வேண்டும் என்பதுதான் அவரது வாழ்வின் பெரும் கனவாக இருந்ததாம். ஆனால் எதிர்பாராதவிதமாக வசந்தபாலன் அவரது வாழ்க்கையில் குறுக்கிட்டு, சினிமா பக்கமாக திருப்பி விட்டார். இதனால், விளையாட்டு சாதனங்களையும், கனவுகளையும் மூட்டி கட்டி பரணி மேல் தொங்க விட்டுவிட்டு முழுநேர சினிமா நடிகராக பிரவேசித்தார். 

இருப்பினும் அதன்பிறகு மகேஷ் நடித்த எந்த படமும் வெற்றி பெறவில்லை. அதோடு நடித்து வரும் சில படங்களும் இழுபறியில் நிற்கின்றன. இதனால் மனசொடிந்து போன அவர், ஹோட்டலில் ரூம் போட்டு பாட்டில் பாட்டிலாக பீர் அடிக்கிறாராம். அதோடு புண்பட்ட மனதை ஆற்ற புகையை ஊதி தள்ளுகிறாராம். ஆக, இதுவரையில் கட்டுக்கோப்பாக உடம்பை வைத்திருநத மகேஷ், இப்போது அதை கண்டபடி வளர்த்து விட்டார். அவரது உருவம் 50 வயது கதாநாயகர்களைப்போன்று ஊதி பெருத்துப்போய் விட்டது. இதனால், அடுத்தடுத்து மகேஷை வைத்து படம் பண்ண இருந்த படாதிபதிகளும் இது தேறாது என்று பின்வாங்கிவிட்டனர். ஆக, வழக்கத்தை விட இப்போது இன்னும் இரண்டு பாட்டில் சரக்கை அதிகமாக உள்ளே தள்ளுகிறாராம் நடிகர்.


சமீபகாலமாய் ஆர்யா எந்த நடிகையுடன் பேசினாலும், அவர்களை அவருடன் இணைத்து விதவிதமான கிசுகிசுக்கள் பரவி விடுகிறது. தன்னைப்பற்றி எந்த மாதிரியான செய்திகள் வெளியானாலும் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை ஆர்யா. ஆனால் சம்பந்தப்பட்ட நடிகைகள் அதைப்பற்றி ரொம்பவே கவலைப்படுகிறார்கள். இதனால் மற்ற ஹீரோக்கள் தங்களுடன் இணைந்து நடிக்க தவிர்ப்பார்கள் என்று அச்சப்படுகிறார்கள். அதன்காரணமாக, மீண்டும் மீண்டும் ஆர்யா தங்களை தேடி வந்தால், அவரிடம் முகம் கொடுத்து பேசுவதை தவிர்க்கிறார்கள்.

அதில், நயன்தாரா முக்கியமானவராக இருக்கிறார். தற்போது ராஜா ராணி படத்தில் அவருடன் நடித்தபோதும், முன்பு மாதிரி கிளுகிளுப்பாக ஏதாவது பேசிக்கொண்டிருப்பதை தவிர்த்து வருகிறார். அதேபோல் இரண்டாம் உலகம் படத்தில் ஆர்யாவுடன் இணைந்திருக்கும் அனுஷ்காவும், அவருடன் இணைத்து கிசுகிசுக்கள் பரவியதை அடுத்து நெருக்கத்தை குறைத்திருக்கிறார். இதனால் எப்போதும ஸ்பாட்டில் கலகலப்பாக காணப்படும் ஆர்யா பேய் அறைஞ்சது போல் இருக்கிறாராம். அதோடு, எல்லாரும் நடிகைங்களை ஆர்யா பிக்கப் பண்ணிக்கிட்டே இருக்கிறதா சொல்றாங்க. ஆனா வெளியிலதான் நான் ஹீரோ, உள்ளுக்குள்ள ஜீரோங்கிறது யாருக்காவது தெரியுமா? என்று புலம்புகிறாராம்



ஒரு வார இதழில் வந்த பேட்டிக்காக பல்வேறு தரப்பிலிருந்தும் அந்த கவர்ச்சி நடிகை மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவரது வியாபார நிறுவனங்கள் முடங்கி விட்டன. கமிஷனர் ஆபீசுக்கும், கோர்ட்டுக்கும் அலைந்து கொண்டிருக்கிறார். வாடகை வீட்டுக்காரர்கள் காலி பண்ணச் சொல்கிறார்கள். கடைக்கு இடம் கொடுத்தவர்கள் காலி பண்ணச் சொல்கிறார்கள். பணியாளர்கள் வேலைவிட்டு நின்று விட்டார்கள். தங்கை மகளை படித்த பள்ளியிலிருந்து விலகிக் கொள்ளச் சொல்கிறார்கள். அம்மாவும், தங்கையும் பேசி பல நாட்களாச்சு. இதெல்லாம்கூட நடிகைக்கு பெரிய வருத்தம் இல்லை. இதுநாள் வரை தன்னைச் சுற்றி இருந்து நண்பர்கள் கூட்டம் எங்கே என்று தேடிக் கொண்டிருக்கிறார். வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக கூட உதவ யாரும் முன்வரவில்லை. குறைந்த பட்சம் ஆறுதல் சொல்லக்கூட யாரும் முன்வரவில்லை. "இப்போதுதான் நண்பர்களை புரிந்து கொண்டிருக்கிறேன். இனி எனக்கு நண்பர்களே வேண்டாம். நானே தனியாக எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன். நிஜத்தில் நான்தான் டிஷ்யூ பேப்பர் ஆகியிருக்கிறேன்" என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம் நடிகை.

நன்றி : தினமலர்

Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!