கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 95
1. தலைவர் பன்முகத்திறமை கொண்டவர்னு சிலை செய்யற ஸ்தபதி கிட்டே சொன்னது தப்பா போயிருச்சு!
ஏன்?
சிலையை ஒவ்வொரு பக்கம் பார்க்கும் போது ஒவ்வொரு உருவம் தெரியுதே!
2. சிலையை செய்த ஸ்தபதியை தலைவர் பாராட்டினதும் அப்படியே மயக்கம் போட்டுட்டாராமே அப்படி என்ன சொல்லி பாராட்டினார்?
இது என் சிலைன்னு என்னாலேயே நம்பவே முடியலைன்னுதான்!
3. நம்ம தலைவர் “பார்ட் டைம் அரசியல்வாதி”ன்னு சொல்றாரே மீதி நேரம் என்ன செய்யறார்?
“ஃபுல் டைம்” அரசியல்வாதி ஆகலாமா வேணாமான்னு யோசனை பண்ணிகிட்டே இருக்காராம்!
4. கட்சிக்கு உறுப்பினர்களை ஏன் “ஆன் லைனில்” சேர்க்கறீங்க தலைவரே!
என் கட்சியில் சேர்வதற்கு வரிசையில் காத்திருக்கிறார்கள்னு பெருமையா சொல்லிக்கலாம் இல்லையா?
5. என்னங்க பையன் வயித்துல எட்டி உதைக்கிறான்!
வருங்காலத்துல பெரிய ‘டிராபிக் கான்ஸ்டபிளா” வர்றதுக்கு இப்பவே ப்ராக்டீஸ் பண்றானோ என்னவோ?
6. எதிரி வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருக்கிறான் மன்னா!
இன்கமிங் கால் வருவதற்குள் மிஸ்டு கால் ஆகிவிடுவோமா மந்திரியாரே!
7. என் பொண்ணு தலைநிமிர்ந்து தான் நடப்பா!
அப்ப அவகிட்டே ஸ்மார்ட் போன் இல்லேன்னு சொல்லுங்க!
8. ஸ்பான்ஸர் கிடைச்சதும் படிப்பை தொடர போறேன்னு சொல்றியே எதாவது அப்ளை பண்ணியிருக்கிறியா?
ரொம்ப நாளா ஒரு பையன் சுத்தி சுத்தி வந்து அப்ரோச் பண்ணிகிட்டிருக்கான் அவனைத்தான் கேக்கணும்!
9. நமது மன்னர் சிறுதானிய உணவுக்கு மாறி விட்டாராமே!
ஆமாம் எதிரி நாட்டு சிறையில் இருந்தபோது கேப்பங்கஞ்சி குடித்து பழகி விட்டாராம்!
10. போர் என்றதும் மன்னரின் நாடி நரம்பெல்லாம் முறுக்கேறி துடிக்கிறது பார்த்தீர்களா மந்திரியாரே!
பின்னே எதிரி ஒவ்வொரு எலும்பாய் சுளுக்கெடுத்த இடமாயிற்றே!
11.என்னடி சாம்பார்ல டூத் பேஸ்ட் வாசம் அடிக்குது!
உப்பு தீர்ந்து போயிருச்சு! அதான் டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கேன்னு கொஞ்சம் போட்டுட்டேன்!
12.நான் எது சொன்னாலும் என் மனைவி காதுலே வாங்கிக்கறதே இல்லை!
அரை சவரன்ல ஒரு கம்மல் வாங்கிக் கொடுத்துப்பாரேன்!
13.எல்லோரும் எதுக்குய்யா என் பின்னாடியே வந்து நின்னுகிட்டு இருக்கீங்க?
நீங்கதானே சார் சொன்னீங்க முன்பணம் கேட்டு என் முன்னாடி யாரும் வந்து நிக்க கூடாதுன்னு!
14.அதோ போறாரே அவர்கிட்டே யாரும் ரொம்ப நாள் குப்பை கொட்டிட்டு இருக்க முடியாது!
ஏன்?
அவர் கார்ப்பரேஷன் குப்பை வண்டி காரர்!
15. தலைவருக்கு திஹார்னு உறுதியாயிருச்சாம்!
அதுக்காக திஹாருக்கு போகும் எங்கள் விஹாரே!ன்னு ப்ளக்ஸ் பேனர் அடிச்சி வைச்சிருக்கிறது ரொம்ப அதிகம்!
16.அந்த கட்சியிலே உங்களை சேர்த்துகிட்டதா ஒரு மெயில் வந்திருக்குது தலைவரே!
ஆதார் மையத்துக்கு அப்டேட் பண்ண சொன்னா மக்கள் நீதி மையத்துக்கு அப்ளை பண்ணிட்டிங்களே அட்மின்!
17. தலைவர் ஒரு சுயமரியாதைக் காரர்!
கடவுள் மறுப்பு பேசிறவரா?
நீ வேற கண்ணாடி முன்னே நின்னு தனக்கு தானே வணக்கம் போட்டுக்கிறவர்னு சொல்ல வந்தேன்!
18.வேங்கை மகன் ஒத்தையா வந்து நிக்கேன்! ….
போங்கு ஆட்டமெல்லாம் வேண்டாம்! பின்னாலே நூறு பேர் ஒளிச்சு வைச்சிருக்கிறது எங்களுக்கும் தெரியும்!
19.எந்த ஒரு பிரச்சனையிலும் தலைவர் வாயைத்திறக்கவே மாட்டேங்கிறாரே இது என்ன அரசியல்?
இது மவுன அரசியல்!
20.மக்கள் ஆதரவு தனக்குத்தான் உள்ளது எந்த நம்பிக்கையிலே தலைவர் சொல்லிகிட்டு திரியறார்?
கட்டு கட்டா டோக்கன் வைச்சிருக்கிற நம்பிக்கையிலேதான்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!