Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

பத்தாம் வகுப்பு மாணவனிடம் “பல்பு” வாங்கிய கதை!

$
0
0
பத்தாம் வகுப்பு மாணவனிடம் “பல்பு” வாங்கிய கதை!

டிகிரி முடிச்சுட்டு சுத்து வட்டாராத்துல இருந்த கம்பெனிக்கு எல்லாம் பைலோட அலைஞ்சி வேலை தேடி பார்த்தாச்சு! எங்களுக்கு தேவை கெமிஸ்ட்ரி படிச்ச ஆளுங்க அக்கவுண்ட்ஸ் எல்லாம் தேவைப்படாதுப்பா! என்று விரட்டாத குறைதான். 
அப்பத்தான் டியுசன் எடுக்க ஆரம்பிச்சேன்.
 அதுவும் நானா இல்ல! என் தங்கச்சிங்க கிட்ட அவங்களுக்கு தெரிஞ்சவங்க தங்களோட பசங்களை கொண்டு வந்து விட்டு சொல்லிக்கொடுக்க சொன்னாங்க எல்லாம் ஒரு பத்து பதினைஞ்சு பேரு சேர்ந்துட்டாங்க! வெட்டியா இருக்கமே அப்படியே நாலட்ஜை அப்படின்னு ஒண்ணு நமக்கு இருக்கா?! டெவலப் பண்ணிப்போம்னு உதவி பண்ண போனேன்.
 அஞ்சாவது வரைக்கும் இருந்த டியுசன் நான் போனதும் அப்படியே டெவலப் ஆகி டெந்த் வரைக்கும் வளர்ந்துடுச்சு! என் தங்கச்சிங்க கல்யாணமாகி போயிடவும் நான் அதை அப்படியே கண்டினிய்யூ பண்ணிகிட்டேன். இதுக்கு இடையில எஸ்.டி.டீ பூத்தும் பெட்டிக்கடையும் வச்சு  கொஞ்ச நாள் ஓட்டினேன். ஆனா அது எனக்கு செட் ஆகலை போன பதிவுல சொன்னா மாதிரி நாலணா பிரச்சனை ஒண்ணு வந்துது. அதை இப்ப சொல்ல மாட்டேன். பதிவு தேத்தனும் இல்லே!

     சரி விசயத்துக்கு வருவோம்.பத்தாவதுல  கணக்கு பாடத்துல பிதாகரஸ் தேற்றம் வரும். முழுசா அஞ்சு மார்க். ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்கு சொல்லிக் கொடுத்து டெஸ்ட் வச்சேன். பிதாகரஸ் தேற்றம் பற்றி ஒருத்தன் இப்படி எழுதினான்.

பிதாகரஸ் மிகவும் குண்டான மனிதர், கண்கள் சிவந்திருக்கும், முறுக்கிய மீசையுடன் நரைத்த தாடியும் அவருக்கு சிறப்பாக அமைந்திருந்தன. இவர் 1930 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் பதிமூணாம் நாளில் பரம பிதாவுற்கும் கிறிஸ்டினாவிற்கும் பிறந்தார். எனவே பிதாகரஸ் என்று அழைக்கப்பட்டார். இப்படி எழுதி வச்சிருந்தான் பையன்.
 என்னடா இது?  என்று பேப்பரை நீட்டிக் கேட்டேன்.

 சார்  பேப்பர் சார்! என்றான்.

    அது தெரியுது நீ என்னா எழுதி இருக்கே!

சார் இது தெரியாமலா எங்களுக்கு சொல்லிக் கொடுக்கறீங்க? என்றான்!

பையனுக்கு வால் ஜாஸ்தி! அது தெரியுதுடா! நான் என்னா கேட்டிருக்கேன் நீ என்னா எழுதி இருக்கே? நல்லா கொஸ்டீனை படிச்சியா?

   நல்லா படிச்சேன் சார்! நீங்க கேட்டதைத்தான் எழுதி இருக்கேன்!

டேய் விளங்காதவனே பிதாகரஸ் தேற்றத்தை கேட்டா? தோற்றத்தை பற்றி தப்பு தப்பா எழுதி இருக்கே?

    சார் இந்தாங்க சார் கொஸ்டீன் பேப்பர் பாருங்க நீங்க என்ன கேட்டிருக்கீங்க?

அச்சடித்த கொஸ்டீன் பேப்பரில் என் கண்பார்வை பட்டதும் தலை கிறுகிறுத்தது. பிதாகரஸ் தோற்றத்தை எழுதுக என்று தவறாக டைப் பண்ணீயிருந்தான் கணிணியில் தட்டச்சு செய்தவன்.

    சார் நீங்க தப்பா கேள்வி கேட்டா நாங்க இப்படித்தான் எழுத முடியும். தேற்றத்த சொல்லிக் கொடுத்த நீங்க தோற்றத்த சொல்லிக் கொடுக்காமலே கேட்டா எப்படி என்றான். 
அவன். ஐயோ ஆளவிடுப்பா சாமி என்று அவனை அமர்த்தினேன்.

  இவனைப் போலத்தான் இந்த மாணவனும் போல! சமிபத்தில் ஃபேஸ்புக்கில் மேய்ந்த போது கிடைத்தது இது!
படியுங்க வாய்விட்டு சிரியுங்க! கூடவே கொஞ்சம் சிந்திக்கவும் செய்யுங்க! மாணவர்கள் வேடிக்கையாக இப்படி எழுதினாலும். இந்த மாணவரின் எதிர்காலம் எப்படி இருக்கும் சற்று யோசியுங்கள்!

(மீள்பதிவு)

Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


எல்லாம் நாடக மேடை – பாடலாசிரியர் யார்?


அவதூறு + ஆபாசம் + சிபிஎம்


விவசாயிகளின் உரிமையை பறிக்கும் விதைகள் சட்ட மசோதா – 2010


ஆசீர்வாத மந்திரங்கள்


‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-18


பள்ளி ஆசிரியை இரும்பு ஸ்கேலால் அடித்ததில் 8ம் வகுப்பு மாணவன் பார்வை இழப்பு?...


Minority Report (2002) Tamil Dubbed Movie HD 720p Watch Online


திருமூலர் அருளிய உயிர்காக்கும் ரகசிய மந்திரம்


வேலூர் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பு முலாம் பழம் கிலோ ரூ.30 க்கு விற்பனை


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


வசியம் செய்வது எப்படி..? வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்


சித்தன் அருள் - 1883 - கேள்விகளுக்கு அகத்தியப் பெருமானின் பதில்கள்!


தேசிய விருது பெற்ற படத்தை வெளியிடுகிறார் வெற்றிமாறன்


பதினேழு வயதுக் கிராமத்துப் பெண்


கணவன் கண் முன்னே துப்பாக்கி முனையில் மனைவி கூட்டு பலாத்காரம்..!


பட்டைய கிளப்பும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் 2வது டிரைலர்


நாராயண பட்டத்ரி


பாக்கியசாலிகளாக்கும் காமாட்ஷி அம்மன் நவாவரண பூஜை


வட மாநிலங்களும் தவிப்பு டெல்லியில் 120 டிகிரி வெயில்: ராஜஸ்தானில்...