புகைப்பட ஹைக்கூ 7
ஏர் பிடித்த கரங்கள்
எந்திரம் பிடிக்கின்றன!
கால மாற்றம்!
காணாமல் போனது
காளைகள் மட்டுமல்ல!
உழவனின் எதிர்காலமும்!
விதைப்பது
விதையல்ல
நம்பிக்கை!
மாற்றங்கள் வந்தாலும்
மாறவில்லை!
உழவன்!
எந்திரங்கள் வந்தாலும்
ஏறவில்லை!
வாழ்க்கை தரம்!
சேற்றிலே உழன்றாலும்
சேர்வதில்லை உழவனிடம்
அழுக்கு!
உழுது
பிணி அகற்றுகிறான்
உழவன்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!