பூவை
சூடிய
பூவை!
கூந்தலில்
குடிகொண்டது
விலைபோகா மலர்!
மவுனம் பேசும்
வேதனை
விழிகள்!
வெட்க வதனத்தில்
வேதனைக்
கோடுகள்!
பூவுக்கு
ஆசைப்பட்டது
பூ!
கேசம் கலைந்தாலும்
கலையவில்லை
கனவுகள்!
சிவப்பது
பூ மட்டுமல்ல
பூவும்தான்!
கட்டுப்பட்டதும்
வாடின
பூக்கள்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் இட்டு உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!