Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

சிரிச்சுக்கிட்டே இருங்க! பகுதி 5.

$
0
0

 

சிரிச்சுக்கிட்டேஇருங்க! பகுதி 5.

 


1.     மாநாட்டுக்குவந்ததொண்டர்கள்எல்லாம் தங்களோட குமுறலைக் கொட்டித்தீர்த்திட்டாங்களாமே!

    அட நீ வேற  கெட்டுப்போன சாப்பாட்டைத்தான் கொட்டிட்டு போயிட்டாங்க!

   

2.   உண்ணாவிரதப்போராட்டத்துலேகலந்துகிட்டவங்கஎல்லாம்ஹாஸ்பிடலுக்குஎதுக்குவந்திருக்காங்க?

   அஜீரனக்கோளாறுஏற்பட்டிருச்சாம்!

 


3.     மன்னரின் வீரம் கொடிகட்டி பறக்கிறதாமே...?
     
ஆம்...! போரில் மன்னரிடம் உருவிய ஆடையை எதிரி மன்னன் தன் கோட்டையில் கொடிகட்டி பறக்கவிட்டுள்ளானாம்! 

 

4.    எதிரிக்குபயத்தைக்காட்டவேண்டும்அமைச்சரே…!

  நீங்கள் “அபயம்” கேட்டு அவன் முன் நிற்கையில் அவனுக்கு நன்றாக காண்பித்துவிடலாம் மன்னா!

    

 


5.   சந்திரனில்விக்ரம்லேண்ட்ஆகிருச்சுன்றதைநம்மதலைவர்தப்பாபுரிஞ்சுகிட்டார்!

   எப்படிசொல்றே?

விரைவில்செவ்வாயிலும்  விக்ரம்ரிலீஸ்பண்ணமத்தியஅரசுக்குகடிதம்எழுதப்போவதாகஅறிக்கைவிட்டிருக்காரே!

 


6.   தலைவருக்குசெஸ்போட்டியிலேஆர்வம்அதிகம்!

  அதுக்காக தேர்தல்ல தோத்துட்ட பிறகு திரும்பவும்  டை-பிரேக்கர் சுற்று வைக்கணும்னு சொல்றது நல்லா இல்லை!

 

7.    என்னப்பா சர்வர்  தோசை இப்படி கருகிப்போய்  ஓட்டை ஒடிசலா இருக்கு?

    இது புதுசா வந்திருக்கிற “மூன் தோசை” சார்!

 

8.   குழி பறிப்பதில் எதிரி நாட்டு அரசன் மகா கெட்டிக்காரனாக இருக்கிறான் அரசே!

  இருக்கட்டுமே! நான் தான் பதுங்கு குழி பறிப்பதில் கெட்டிக்காரனாயிற்றே!

 

9.   என்னது எதிரி இனி மயிலில் செய்தி அனுப்பச் சொல்கிறானா?

     மன்னா! அது மயில் இல்லை! மெயில்!

 


10.நாட்டு மக்கள் நாம் அதிகமாக வரிபோடுவதாகத் தூற்றிக்கொண்டு இருக்கிறார்கள் மன்னா?

   அந்த தூற்றலுக்கும் ஒருவரி போட்டுவிடுங்கள் அமைச்சரே!

 

11. தலைவரை எடக்கு மடக்கா கேள்வி கேட்ட  நிருபர் வாயாடைச்சுப்போயிட்டாராமே எப்படி?

    மீந்து போன புளியோதரையை வாயிலே திணிச்சிட்டாங்களாம்!

 


12. தலைவருக்குத் தமிழ் சரியாப் பேச வராது!

   அதுக்காக அவருக்கு “மிரட்சித் தமிழர்”னு பட்டம் கொடுக்கிறது எல்லாம் நல்லா இல்லை!

 

13.  ஒருகோடி ரூபாய்க்கு செக் எழுதி உண்டியல்ல போடறியே உன் அக்கவுண்ட்ல அவ்வளோ பணம் இருக்கா?

   5 கோடி ரூபாய் வேணும்னு வேண்டிகிட்டு போட்டிருக்கேன்! வந்ததும் ஒரு கோடியை கடவுள் எடுத்துக்கட்டும்!

 


14.  ரொம்ப நாளா ஒரு கேஸ் இழுத்துக்கிட்டே இருக்குதுன்னு சொன்னியே என்ன கேஸ் அது?

   சீரியல் நடிகை தற்கொலை கேஸ்தான்!

 

15. கடல் போருக்கு மன்னர் ஏன் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று சொல்கிறார்?

     எதிரிவிரட்டி அடிக்கும்போது  ஓடிவர முடியாதே!

 

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துகளை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

 

 


Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!