புகைப்பட ஹைக்கூ 14
நாற்று நடுகிறது
நவீன
நங்கை!
இயந்திரம் ஆனது
இந்திய
உழவு!
உழைப்பாளிகள் மறந்ததால்
உள்ளே புகுந்தது
இயந்திரம்!
சேற்றுக்குள் நாற்றுக்கள்
சேர்த்து வைத்தன
எந்திரம்!
நடும் முன்னே
கூலி கேட்டது
நடவு எந்திரம்!
விஞ்ஞானம் வளர்கையில்
விடை பெறுகிறது
உழைப்பு!
அறிவியல் புகுந்ததும்
நுழைந்தது
அவசரம்!
இயந்திர மயமாதலில்
சிக்கியது
இதயம்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!