Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

பெண் "முதல்"வர்கள்! இன்று சர்வதேச பெண்கள் தினம்!

$
0
0
டாக்டர். முத்துலட்சுமிரெட்டி

1.   ஆணின் இதயத்தை விட பெண்ணின் இதயம் வேகமாக துடிக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
2.   புகழ்பெற்ற பிரெஞ்சு வீராங்கனை ஜோன் ஆப் ஆர்க் பிறந்தது மே 30, 1431
3.   கைவிளக்கேந்திய காரிகை நைட்டிங்கேல் அம்மையார் பிறந்தது மே 12, 1820
4.   இதுவரை ஒன்பது பெண்கள் சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்றுள்ளனர்.
5.   உலகின் முதல் விண்வெளி வீராங்கணை வாலண்டினா தெரஸ்கோவா 45முறை பூமியை வெற்றிகரமாக வலம் வந்தவர்.
6.   இரண்டுமுறை நோபல் பரிசு பெற்ற மேடம் கியுரி சிறுவயதில் வீட்டுவேலை செய்யும் வேலைக்கார சிறுமியாக தம் வாழ்க்கையை பல கஷ்டங்களுக்கிடையே துவக்கினார்.
 மேடம்கியுரி
7.   ஆங்கில கால்வாயை நீந்தி கடந்த முதல் இந்திய பெண் ஆரதி சாகா.
8.   ஆங்கிலக் கால்வாயை மிக வேகமாக நீந்திய ஒரே ஆசிய வீராங்கனை அனிதா சூட். 81/4 மணி நேரத்தில் நீந்திக்கடந்தார்.
9.   இந்திய விமானப்படையில் முதன் முதலில் பெண்கள் ஜூலை19,1993ல் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
10.வெளிநாட்டு தூதுவராக சென்ற முதல் இந்தியப் பெண் டாக்டர் விஜயலட்சுமி பண்டிட்.
11.இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.
12.உலகின் முதல் பெண் பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகா.
13.தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் திருமதி பாத்திமா பீவி.
14.இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி திருமதி பிரதீபா பாட்டில்.
15.பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடு நியுசிலாந்து.
16.இந்தியாவின் முதல் பெண் உயர்நீதிமன்ற  நீதிபதி அண்ணா சாண்டி.
17.இந்தியாவின் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பெண்மணி சானியாமிர்ஸா.
18.மிகக் குறைந்த வயதில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் வென்ற பெண்மணி மார்டினாஹிங்கிஸ்.
19.இந்தியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் வசந்தி
20.இந்தியாவின் முதல் பெண் பைலட் துர்கா பேனர்ஜி
21.இந்தியாவை ஆண்ட முதல் பெண் சுல்தானா ரஸியா பேகம்.
 சகுந்தலா தேவி
22.இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என்றழைக்கப்படும் பெண் சகுந்தலா தேவி.
 கல்பனாசாவ்லா
23.விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியப்  பெண் கல்பனாசாவ்லா
24.இந்தியாவின் முதல் பெண் மக்களவை சபா நாயகர் மீரா குமார்.
25.இந்தியாவின் முதல் பெண் முதல்வர் சுஜேதா கிருபாளினி.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!  நன்றி!

Viewing all articles
Browse latest Browse all 1537