Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

பாகிஸ்தான் பயணித்த நாயும் சாவே வராத நாராயண சாமியும்! கதம்ப சோறு!

$
0
0

கதம்ப சோறு!

பாகிஸ்தான் பயணித்த நாய்!
நான் அவனிலலைங்கோ!
இந்தியாவில் டில்லிக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் சம்யொஜாதா என்ற பெயரில் நட்புறவு தொடர்வண்டி(டிரெயின்) இயக்கப்படுகிறது. இந்த டிரெயினில் பாகிஸ்தான் பயணிக்க வேண்டும் எனில் கடுமையான சோதனைகளை அனுபவிக்க வேண்டி வரும் என்பது பயணித்து அனுபவித்தவர்கள் கருத்து. இந்தியாவில் எல்லா டிரெயின்களும் இப்படித்தான் என்று சொல்பவர்களும் உண்டு. நிற்க இந்த டிரெயினில் தெரியாமல் ஏறிவிட்டது தெரு நாய் ஒன்று. பாவம் என்று நம்மவர்களும் டிக்கெட் கேட்காமல் அபராதம் விதிக்காமல் லாகூருக்கு அழைத்துச் சென்று விட்டனர். அங்கு அது யாரை தேடி வந்ததோ தெரியவில்லை! விஷயம் எப்படியோ பாகிஸ்தானியர்களுக்கு தெரிந்து விட்டது. பங்காளிகள் ஆச்சே? சும்மா விடுவார்களா? அடுத்த டிரெயினில் சுமார் ஐம்பது தெருநாய்களை பிடித்து ஏற்றி டில்லிக்கு அனுப்பி விட்டனர். ஒரு நாய் தெரியாமல் வந்ததற்கே ஐம்பது நாய்களை அனுப்பும் பங்காளிகளுடன் நமக்கு நட்புறவு வேண்டுமா? இந்த லட்சணத்தில் நமது சானியாவை வேறு அந்த ஊரு மருமகளாக அனுப்பி இருக்கிறோம்! அதற்கு எத்தனை அனுபவிக்க போகிறோமோ?! தெரியவில்லை! முகநூல் டிவிட்டரில் இது குறித்து நிறைய பேர் எழுதி விட்டனர். ப்ளாக்கரில் நான் ஆரம்பித்து வைக்கிறேன்! யாராவது முந்திக் கொண்டிருந்தால் அது குறித்து அறியேன்! பாகிஸ்தானின் திமிர்த் தனத்தை மன்னிப்பதா? இல்லை பதிலுக்கு நாமும் 50 கழுதைகள் அல்லது எருமைகள் அனுப்பி வைக்கலாமா? பாவம் இவர்களின் சண்டைக்கு இந்த விலங்கினங்கள் என்ன செய்யும்?


இளிச்சவாயாக்கிய இத்தாலி!

   அப்பாவி மீனவர்களை கொன்ற இத்தாலி கடற்படை வீரர்களை திருப்பி அனுப்ப இத்தாலி மறுத்துவிட்டது. இது மத்திய அரசின் இளிச்சவாய்த்தனத்தையும் மறைமுக ஆட்சியாளரின் தாய்நாட்டு பாசத்தினையும் காட்டுகிறது. இந்த விஞ்சான யுகத்தில் தேர்தலில் ஓட்டுப்போட அனுமதி கேட்டு அவர்கள் விண்ணப்பித்தார்களாம். இவர்கள் அனுப்பி வைத்தார்களாம். என்ன ஒரு நாட்டுப்பற்று. இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களும் ஓட்டுப் போட்டால் இவர்கள் ஆட்சியில் இருக்கமாட்டார்கள். இந்தியாவில் ஓட்டு சதவீதம் குறைவதை தவிர்க்க இவர்கள் துரும்பைக் கூட கிள்ளிப் போட்டது கிடையாது. ஆனால் இத்தாலியில் இந்த இரண்டு கொலைகாரர்கள் ஓட்டுப்போடாவிட்டால் குறைந்து போய்விடுமா என்ன? அவர்கள் கேட்டார்கள் இவர்கள் சலாம் போட்டு அனுப்பி வைத்து விட்டு இன்று நீ அடிக்கிறா மாதிரி அடி! நான் அழுகிறா மாதிரி அழுகிறேன்! என்று நாடகம் ஆடி வருகிறார்கள். காந்தியடிகள் ஆசை நிறைவேறாமல் போனது குறித்து நான் இந்த நேரத்தில் வருத்தப்படுகிறேன்! அவரின் ஆசை இந்த கருமம் பிடிச்ச காங்கிரசை கலைத்து விட வேண்டும் என்பது தான்! இவர்களால் தான் இந்தியா இன்னும் உருப்படாமல் இருக்கிறது.


தோனியின் எழுச்சி!

தொடர்ந்து பத்து பன்னிரண்டு டெஸ்ட்களில் தோல்வியை தழுவியதால் தோனியை குறித்து விமர்சனங்கள் எழுந்தன. கேப்டன் சரியில்லை! டெஸ்ட் போட்டிக்கு புதிய கேப்டனை அறிவிக்கவேண்டும். டெஸ்டில் இருந்து தோனியை நீக்க வேண்டும் என்று. ஒன்றுக்கும் உதவாதவர்கள் கூட இப்படி பேச ஆரம்பித்து விட்டார்கள். கிரிக்கெட் ஒரு விளையாட்டு இதில் வெற்றிகளும் தோல்விகளும் சகஜம். அதுவும் இது குழு விளையாட்டு பதினோரு பேரும் சிறப்பாக விளையாடினால்தான் வெற்றி கிடைக்கும். ஆரம்ப காலத்தில் ஒரு சிலரையே நமது அணி நம்பிக் கொண்டிருந்தது. கவாஸ்கர், கபில்தேவ், சச்சின், அசாருதின், டிராவிட், என்று ஒரு சில குறிப்பிட்ட வீரர்கள் விளையாடினால் வெற்றி என்ற நிலைமை இருந்தது. அணித் தேர்விலும் அரசியல் இருந்தது. இதெல்லாம் இருந்ததால்தான் சச்சினால் சிறப்பாக கேப்டன் பதவியில் ஜொலிக்க முடியவில்லை! தோனி வந்த நேரம் நல்ல நேரம். திறமையான பல வீரர்கள் அணியில் இருக்க இளமை களம் புக வெற்றி மேல் வெற்றி குவிய ஆரம்பித்தது. இடையில் காம்பிர், சேவக், ஹர்பஜன், என சிலர் கோஷ்டி கானம் பாடி முடக்கம் செய்ய தோல்விகள் குவிய ஆரம்பித்தது. இப்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மீண்டும் பேட்ஸ்மேன்களும் பவுலர்களும் அசத்த ஆரம்பித்து விட்டனர். வெற்றிகள் குவிகிறது. இரண்டு டெஸ்டிலும் அபார வெற்றி. இதற்கு தோனி மட்டும் காரணம் அல்ல! குழு முயற்சிதான். உடனே எல்லோரும் தோனியை ஆகா ஓகோ என்று புகழ்கின்றனர். தனிப்பட்ட முறையில் அவர் இரண்டு டெஸ்டிலும் சிறப்பாக ஆடினார். சிறப்பாக வழி நடத்தினார் அதுவரை ஓக்கே! ஆனால் ஆடினால் புகழ்வதும் ஆடாவிட்டால் இகழ்வதும் சரியா ரசிகர்களும் வர்ணனையாளர்களாக உள்ள முன்னால் ஆட்டக்காரர்களும் யோசிக்க வேண்டும். இவர்கள் என்னத்தை அந்த காலத்தில் ஆடிக் கிழித்து விட்டார்கள்!


விலையில்லா பொருள்கள்!

இன்று எங்கள் ஊரில் அம்மாவின் விலையில்லா மிக்சி, பேன், கிரைண்டர் வழங்கும் விழா. திங்களன்று வழங்குவதாக இருந்து மந்திரி பி.வி ரமணா வராததால் தள்ளிப் போய் இன்று நடைபெறுகிறது. இதுவரை மந்திரி வரவில்லை! காலையில் இருந்து பந்தல் போட்டு எம்.ஜி.ஆர் பாடல்கள் அலறிக் கொண்டு இருக்கிறது. இலவசத்திற்கு புதிய இலக்கணம் கண்டுபிடித்து விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன் என ரத்தத்தின் ரத்தங்கள் அறிவித்து வருகிறார்கள்! அது எப்படி விலையில்லாமல் போகும். நமக்கு விலையில்லாமல் கொடுத்தாலும் கம்பெனியில் இவர்கள் ஒரு விலை கொடுத்து அல்லவா வாங்குகிறார்கள்! என என் தந்தை கேட்டார்! எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை! இதனால் ஒரு பயன் பன்னிரண்டு மணிக்கு போன கரண்ட் மூன்று மணிக்கு வரும். இன்று மந்திரியின் வருகையால் இரண்டு மணிக்கே வந்து விட்டது. ஆனால் மந்திரிதான் வரவில்லை!


நியுமராலாஜியை நம்பும் நயன்தாரா

    கோலிவுட்டில் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்து அதே சமயம் சிம்பு, பிரபு தேவா என்று பல நாயகர்களுடன் கிசுகிசுக்கப் பட்டு  சற்று ஓய்ந்த நயன் தாரா இப்போது தனது இரண்டாவது இன்னிங்க்ஸை துவக்கி உள்ளார். சமீப காலமாக இவருக்கு எண் ஜோதிடத்தில் நம்பிக்கை ஏற்பட்டு உள்ளதாம்.அவருடைய ராசி எண் 5 என்பதால் தன்னுடைய கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் பதிவெண் கூட்டுத்தொகை 5 என வரும்படி கேட்டு வாங்கியுள்ளாராம்.
   பொதுவாக 5 என்ற ராசி எண் உள்ளவர்கள் வாழ்க்கை வெற்றிகரமாக இருந்தாலும் சில விஷயங்களில் அதிகமாக உணர்ச்சி வசப்படுவதால் வாழ்க்கையில் ஏற்றதாழ்வுகள் இருக்கும். இது நயன் தாரா விஷயத்தில் உண்மை என்பதால் நியுமராலாஜியை நம்பத்துவங்கியுள்ளாராம். எந்த ஒரு விஷயத்திற்கும் மனதில் நியுமராலாஜி கணக்குப் போட்டு பார்த்துதான் செயல்படுகிறாராம்! நேற்றைய தினமலரில் இதைப் படித்தேன்.


டெசோ பந்த்:
    என்னைப் பொறுத்தவரை பந்த் கடையெடுப்பை வெறுப்பவன். சின்ன வயதில் பாரத் பந்த் திமுக நடத்திய பந்த் ஆகியவற்றினை பார்த்து நொந்து போனவன். என்ன அப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்ததால் ஒரு நாள் லீவு கிடைக்கும் அந்த அல்ப மகிழ்ச்சி தவிர வேறொன்றும் இல்லை! இதனால் நாட்டிற்கு பேரிழப்புதான் ஏற்படுகிறது. மக்களுக்கு அசவுகர்யம் ஏற்படுகிறது. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இந்த கழகங்கள் ஒரு மயிரையும் புடுங்க வில்லை! போர் என்றால் உயிர்கள் இழக்கத்தான் செய்யும் என்று சொன்னவர் அம்மையார். போலி உண்ணாவிரதம் இருந்து மந்திரி பதவிகளை இன்னும் கெட்டியாக பிடித்துக் கொண்டு இருப்பவர் தாத்தா. சென்னையில் சில கடைகள் அடைத்து இருந்தாலும் ஊரகப் பகுதிகளில் இதற்கு துளியும் ஆதரவு இல்லை! ஈழத் தமிழர்களுக்கு உண்மையாக உதவ நினைப்பவர்கள் இப்படி கடையடைப்பை செய்வதற்கு பதில் கடை திறந்து தனது ஒருநாள் வருமானத்தை அவர்களின் மறுவாழ்விற்கு கொடுத்து இருக்கலாம்! மற்றதெல்லாம் வீணே!

கடைசியாக ஒரு ஜோக்கு!

நாராயணசாமிநாராயணசாமின்னுஒருத்தன்....
ஒருநாள்அவன்கடவுளைநோக்கிதவம்இருந்தான்..தவம்ன்னாசாதாரணதவம்இல்லை..
பயங்கரமானதவம்...

அவனோடதொடர்தவத்தால்மேலேகடவுள்இருக்கிறஇடம்பூராவெப்பத்தாலகொதிக்கஆரம்பிச்சிட்டுது... இனிமேல்பொறுத்தால்ஆகாதுன்னுதெரிஞ்சிநேரா 
தவம்செஞ்சிகிட்டிருக்கிறநாராயணசாமிக்கிட்டவந்துட்டார்..

நாராயணசாமிக்குசந்தோசம்தாங்கமுடியல..

கடவுள்கேட்டார்....என்னப்பாஉனக்குகுறை..?

இவன்சொன்னான்..சாமீ... உங்கஆசிர்வாதத்திலஎனக்குஎந்தகுறையும்இல்லை.. இந்தசந்தோஷமானவாழ்க்கையைவிட்டுபோகஎனக்குவிருப்பம்இல்லை..
ஆகவே...எனக்குசாவேவரக்கூடாது..ன்னுகேட்டான்..

கடவுள்,எவ்வளவோசொல்லிப்பார்த்தார்... அவன்விடுறதாஇல்லை... வேறவழிஇல்லாமல்அவன்கேட்டவரத்தைகொடுத்துவிட்டுபோயிட்டார்..

நாட்கள்வேகமாகநகர்ந்தன...ஒருநாள்....

தன்னோடபையனபள்ளிக்கூடத்திலேசேர்க்கப்போயிருந்தான்... தலைமையாசிரியர்
பையனோடஅப்பாபேருஎன்னன்னுகேட்டார்...

இவன்சொன்னான்..
என்னோடபேருநாராயணமின்னு..
மறுமடிமறுபடிசொல்லிப்பார்த்தான்....

நாராயணமி
நாராயணமி
நாராயணமி...ன்னுதான்வந்தது....

கடைசிவரைஅவனுக்கு "சா" வேவரலை...

கதையில்இருந்துவிளங்கும்நீதி:-
கலியுகத்திலகடவுளும்நக்கல்பண்ணுவாரு..
நாமதான்யோசிச்சுவரம்கேக்கணும்..


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப் படுத்துங்கள்! நன்றி!


Viewing all articles
Browse latest Browse all 1537

Latest Images

Trending Articles


சாலை விபத்துகளும், அவற்றைத் தடுப்பதற்கான சட்டத் தேவைகளும்..!


ஸ்ரீ நாக நாத சித்தர் வரலாற்று சுருக்கம் - ஆத்ம ஜோதி இதழ்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


Rango (2011) Tamil Dubbed Movie HD 720p Watch Online


வெட்டவெளிதனில் கொட்டிக்கிடக்குது – இளையராஜா


வேதம் புதிது - கபிலரும் பாரதிராஜாவும்


வசியம் செய்வது எப்படி..? வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்


சித்தன் அருள் - 1004 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு!


கார் கவிழ்ந்தது பாண்டி ரவி படுகாயம்


தகழி சிவசங்கரப்பிள்ளையின் ஏணிப்படிகள்



Latest Images