Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

மண்டைக்குள் மசாலா! இல்லை தேரை!

$
0
0

 மண்டைக்குள் மசாலா! இல்லை தேரை!
     இன்று விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. மூளை மாற்று அறுவை சிகிச்சை இதய மாற்று அறுவை சிகிச்சை என்று விதவிதமாக அறுவை சிகிச்சைகளும் வைத்திய முறைகளும் வந்து விட்டன. வைத்தியர்கள் பல அடுக்குமாடிகளில் மருத்துவ மனை கட்டி வைத்தியம் செய்து பொருள் ஈட்டுகின்றனர். பல மருத்துவ மனைகளில் வைத்தியம் செய்ய நேர்ந்தால் உடுக்கும் துணி கூட மிஞ்சாத அளவிற்கு பணத்தினை பிடுங்கி விடுகின்றனர்.
   இத்தனை இருந்தும் இன்னும் பல விசித்திர நோய்களுக்கு மருந்துகள் இல்லாமல் மருத்துவ உலகம் திணறி வருகிறது. ஏன் எய்ட்ஸ் நோய்க்கு இன்னும் மருந்து கண்டறியப்படவில்லை! ஆனால் பண்டைக் காலத்திலேயே தமிழர்கள் வைத்திய சாஸ்திரத்தில் பெரிய அளவில் தேர்ச்சி பெற்று இருந்துள்ளார்கள். பதினென் சித்தர்களும் அவர்களின் மாணாக்கர்களும் வைத்தியத்துறையில் அசாத்திய அறிவு பெற்றிருந்தனர். சித்தர்களின் வைத்திய முறை பிரமிக்க வைக்கிறது. முதல் முதலில் மண்டை ஓட்டை பிளந்து மருத்துவம் செய்தஅகத்தியரையும் அவரது மாணவர் தேரையர் என்ற சித்தரையும் பற்றி படித்ததை பகிர்ந்து கொள்கிறேன் இந்த பதிவில்
     பதினெட்டு சித்தர்களில் ஒருவர் தேரையர். இவருக்கு இந்த பெயர் எப்படி வந்தது? இவருடைய இயற்பெயர் ராமதேவர். இவர் சிறுவனாக இருந்தபோது இவரை அவ்வையார் அழைத்துப்போய் அகத்திய முனிவரிடம் சீடனாக சேர்த்தார்.
    காசிவர்மன் என்ற மன்னனுக்கு நீங்காத தலைவலி நோய், அகத்தியரை நாடினான். அவர் மன்னனை பரிசோதித்தார். காரணம் புரிந்தது. மன்னா.. நீ உறங்கும் போது மிக மிகச் சிறிய தேரைக்குஞ்சு ஒன்று உன் மூக்கினுள் புகுந்துவிட்டது.நீ மூச்சுக் காற்றை உள்ளே இழுத்தபோது அந்த தேரை மூளையில் போய் தங்கிவிட்டது. இதற்கு வாழ்வும் வளர்ச்சியும் உன் மூளையில்தான் உள்ளது.அதனால்தான் உனக்கு தீராத தலைவலி என்றார் அகத்தியர்.
   மன்னன் அதிர்ச்சி அடைந்தான். இதற்கு தீர்வு இல்லையா? கபாலத்தை பிளந்துதான் தேரையை வெளியே எடுக்க வேண்டும் என்றார் அகத்தியர். மன்னர் ஒத்துக் கொள்ள அகத்தியர் அவனுக்கு சிகிச்சை செய்யத்தொடங்கினார். மயக்க நிலையில் மன்னனை ஆழ்த்தி கபாலம் திறக்கப்பட்டது. மூளை மீது தேரை உட்கார்ந்திருந்தது. அதை எவ்வாறு எடுப்பது. குறடு போன்ற கருவிகளால் எடுத்தால் மூளை சேதாரமாகிவிடுமே என்ன செய்வது என்று விழித்தார் அகத்தியர்.
   குருநாதரின் திகைப்பை கண்ட இராமதேவர் வாயகன்ற பாத்திரம் ஒன்றில் தண்ணீர் கொண்டுவந்தார். அதை தேரைக் காணுமாறு செய்தார். தண்ணீரைப் பார்த்த சந்தோஷத்தில் தேரை பாத்திரத்தில் தேரை குதித்தது.
   பின்னர் அகத்தியர் மன்னரின் மண்டை ஓட்டை சந்தான காணி என்ற மூலிகையால் மூடினார்.மன்னனும் நலம் பெற்றான். இந்த நிகழ்ச்சிக்கு பின்னரே ராமதேவர் தேரையர் என்று அழைக்கப்பட்டார்.
நன்றி: ஈரோடு ஆற்றலரசு எழுதிய சித்தர்கள் வரலாறு. வாரமலர்.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles