Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

தளிர் சென்ரியு கவிதைகள்!

$
0
0

(சுருக்கமாகச் சொல்வதென்றால் கவித்துவம் அதிகமாக இருந்தால் ‘ஹைக்கூ’. கவித்துவம் குறைந்து நகைச்சுவை உணர்வு மேலோங்கி இருந்தால் அது ‘சென்ரியு’. ) 

சென்ரியுவும் ஜப்பானிய மொழிக்கவிதை. 3 அடிகள் கொண்டது. ஜென் தத்துவம், இயற்கை மற்றும் மெய்யியலோடும் சிறிது தொடர்பு கொண்டு நகைச்சுவை உணர்வை நோக்கமாகக் கொண்டு எழுதப்படுவது சென்ரியு ஆகும். சென்ரியு சமூகம், அரசியல் ஆகியவை குறித்து நகைச்சுவை உணர்வோடும் அங்கத உணர்வோடும் வெளிப்படுத்தும். 

‘சென்ரியு’ என்னும் புனைப்பெயரைக் கொண்ட ‘கராய்ஹச்சிமோன்’ என்னும் ஜப்பானியக் கவிஞர் கி.பி. 18ஆம் நூற்றாண்டில் இவ்விலக்கியத்தை அளித்தார். பின்னர் அக்கவிஞரின் புனைப் பெயரே அக்கவிதை வகைகளுக்கான பெயரும் ஆயிற்று. தமிழில் இவ்வகையை நகைப்பா என்கிறார்கள். 

தமிழ்நாட்டு ‘சென்ரியு’ 3 அடிகள் கொண்டு எழுதப்படுகிறது. அவ்வாறு 3 அடிகள் கொண்டு எழுதப்படுவதை தமிழ் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு ‘சென்ரியு’ வடிவமாகவும் அங்கீகரித்துள்ளார்கள். இது இந்திய சமூகம், அரசியல் ஆகியவை குறித்த போக்கை நகைச்சுவை உணர்வோடும் அங்கத உணர்வோடும் வெளிப்படுத்த ஏற்ற மிகச் சிறந்த வடிவம் ஆகும். எனவே இந்தியாவின் சூழலுக்கு தமிழில் ‘ஹைக்கூ’வை விட ‘சென்ரியு’ சிறந்த வடிவம் /உள்ளடக்கம் ஆகும். 



தளிர் சென்ரியூ கவிதைகள்!


அரசியல் வளர்க்கிறது
அறியா சிறுவன் மரணம்!
பாலசந்திரன்.

காணாமல் போகும் விடைத்தாள்கள்
கேள்விக்குறியானது
மாணவன் எதிர்காலம்!

புகழ்ச்சி மழையில்
மூழ்கிப் போனது
சட்டமன்றம்!

தடம் மாறும் ஆசிரியர்களால்
தடுமாறுகிறது
கல்வி!

கண்ணா மூச்சி ஆட்டம்
கண்டுபிடிக்க திணறும் கூட்டம்
அஞ்சலி தலைமறைவு

ஊரெல்லாம் இருட்டு
ஓளியில் ஆடுகிறார்கள்
ஐபிஎல் கிரிக்கெட்டு!

வறண்ட காவிரியால்
இருண்டது
விவசாயியின் வாழ்க்கை!

 அலையை எதிர்த்து
 எதிரி வலையில் வீழ்கிறார்கள்
ராமேஸ்வரம் மீனவர்கள்!

 வெட்டிக்கொண்டே இருக்கிறார்கள்
 வேதனைபட்டும் தீரவில்லை
 மின்வெட்டு!

 ஊழல்கள் மலிந்ததில்
 ஒளிந்து கொண்டது
 காந்தீயம்!

 வாகனப் பெருக்கம்
 வழிவிட்டு மறைந்தன
 மரங்கள்!

 கறைபட்டாலும்
 சிரித்துக் கொண்டுஇருக்கிறார்
 ரூபாய் நோட்டில் காந்தி!

 எதிரிகள் ஆயின
 எதிர்கட்சிகள்
 தமிழக அரசியல்!                                                                                                               சென்ரியு விளக்கம் ; கவிஞர் கவியருவி ரமேஷ். நன்றி தமிழ்தோட்டம் கருத்துக்களம்

Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!