Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 2

$
0
0

உங்களின் தமிழ் அறிவு எப்படி?  பகுதி 2

சென்ற பகுதியை பாராட்டி நிறைய பேர் ஊக்கம் அளித்தனர். அவர்களுக்கு எனது நன்றிகள். தமிழ் கூறும் நல்லுலகத்தில் பிறந்த நாம், நம் தமிழை பற்றி நிறைய இந்த தொடர் கேள்வி பதிலில் அறிந்து கொள்வோம். உங்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் நானும் என் சிற்றறிவை விசாலப்படுத்திக் கொள்ள இருக்கிறேன். தொடர்ந்து வந்து ஆதரவும் ஊக்கமும் உங்களின் ஆலோசனைகளையும் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.  இனி  கேள்விகளுக்குள் நுழைவோம்.
1.   நளனுக்கு தூது சென்ற பறவை எது?
2.   நெடுந்தொகை என்று அழைக்கப்படும் நூல் எது?
3.   கம்ப ராமாயணத்தில் எத்தனைக்காண்டங்கள் உள்ளன? அவைகளின் பெயர்கள் தெரியுமா?
4.   நக்கீரர் எழுதிய இரண்டு நூல்கள் யாவை?
5.   திவ்ய கவி என்று அழைக்கப்பட்ட புலவர் யார்?
6.   சிற்றிலக்கியங்கள் மொத்தம் எத்தனை?
7.   திருக்குறள் பொருட்பாலில் உள்ள இயல்கள் எத்தனை?
8.   கலம்பகத்தின் எண்ணிக்கை எத்தனை?
9.   திருவருட்பிரகாச வள்ளல் என்பவர் யார்?
10.அகநானூற்றை தொகுத்தவர் யார்?
11.கண்ணதாசன் வெளியிட்ட பத்திரிக்கை எது?
12.வைகை ஏட்டிலே தவழ்ந்த பேதை எது? யாருடைய கூற்று?
13.ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் என்று உரைக்கும் நூல் எது?
14.திருமுறுகாற்றுப்படை எந்த பிரிவை சேர்ந்த நூல்?
15.உமறுப் புலவர் எழுதிய நூல் எது?
16.நால்வாய் என்று அழைக்கப்படும் விளங்கு எது?
17. நாண்மணிக் கடிகையின் ஆசிரியர் யார்?
18.பெண்ணின் பெருமை என்ற நூலை எழுதியவர்?
19.கண்ணதாசனின் இயற்பெயர் தெரியுமா?
20.இலக்கியத்திற்கு வழங்கப்படும் உயரிய விருது எது தெரியுமா?

விடைகள்

1.   அன்னம்
2.   அகநானூறு
3.   6.பாலகாண்டம், அயோத்தியா காண்டம்,சுந்தரக்காண்டம், ஆரண்யகாண்டம், கிஷ்கிந்தா காண்டம்,யுத்தகாண்டம்
4.   நெடுநல்வாடை, திருமுருகாற்றுப்படை.
5.   பிள்ளைப்பெருமாள் அய்யங்கார்.
6.   64
7.   மூன்று இயல்கள் அரசியல், அங்கவியல்,ஒழிபியல்
8.   பதினெட்டு.
9.   இராமலிங்க அடிகளார்.
10.உருத்திரசன்மர்
11.தென்றல்
12.தமிழ். வரந்தருவார் உடைய கூற்று.
13.சிலப்பதிகாரம்
14.பத்துப்பாட்டு
15.சீறாப்புராணம்.
16.யானை
17.விளம்பி நாகனார்.
18. திரு.வி. க
19. முத்தையா.
20. ஞான பீடம்.

இதில் பல உங்களுக்கு தெரிந்திருக்கலாம். சில தெரியாது இருக்கலாம். ஒரு முறை படித்து நினைவில் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தமிழறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துகளை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles