Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

புகைப்பட ஹைக்கூ 24

$
0
0

புகைப்பட ஹைக்கூ 24


தலையணை தந்த
தோழன்!
நாயல்ல தாய்!

நன்றி செலுத்துகிறது
நவினமாய்
தலையணையான நாய்!

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
உறங்குகின்றார்
உலகை மறந்து!

பிள்ளையானது
பில்லோவும் ஆனது
பிரியமான நாய்!

தோள் கொடுக்கவில்லை
மடி கொடுத்தான் தோழன்
தலையணையான நாய்!

 மடியில் பெண்
 தாயானது
 நாய்!

பிடி சோறுக்கு
மடி தந்தது
பாசமான நாய்!

நன்றிக்கு மட்டுமல்ல
நல்ல நட்புக்கும்
உதாரணம்!

 பாசம் கூடியதால்
 தெரியவில்லை!
  பாரம்!

நாடோடிகள்
நட்பின்
முன்னோடிகள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!



Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles