Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

காதல் அவஸ்தை! 2

$
0
0

காதல் அவஸ்தை! 2



அதிகாலைப்பனி போல
அன்பே நீ என்னை ஊடுறுவி நிற்கையில்
குளிரில் குளித்த பூக்களாய்
மகிழ்ந்து நிற்கிறது என் மனசு!

ஆதவனை கண்ட தாமரை போல
உன் முகம் காண துடிக்கையில்
காணேன் என கதிரவனைக் கண்ட பனி போல
விலகுகிறாய்!
நீ அருகில் வருகையில்
மெல்லிய தென்றலில் அசைந்தாடும்
உன் கூந்தல் எனை வருட
மேகமாய் நான் மிதக்கிறேன்!

நீ சிரிக்கும் போது விழும்
கன்னத்து குழியழகில்
கவிழ்ந்து போனது என் காதல் மனசு!

உன் அலைபாயும் விழிகளில்
வலை வீசி என்னை சிக்கவைத்தாய்!
என் வழியில் தேவதையாய் வந்தவளே!
உன் கூந்தலில் அலங்கரிக்கும்
ஓற்றை ரோஜா போல
உன் மனதில் எனை அலங்கரிக்கும்
நாள் என்நாளோ?

அற்றை அவ்வெண்ணிலவின் ஒளியில்
உன்னோடு உரையாடி வருகையில்
ஒளி படர்ந்த உன் முகம் நிலவை
மங்கலாக்கியது கண்டு மகிழ்ந்தேன்!

பனிக்கூழாய் உறுகி நிற்கிறேன்!
நனிபோல இனிப்பவளெ!
நல்ல வார்த்தை சொல்லிவிடு!

டிஸ்கி} நீண்ட கவிதைகள் எழுதி நாளாகிவிட்டது! டச் விடாமல் இருக்க இனி அவ்வப்போது இப்படி காதல்ரசம் பொழிய இருக்கிறேன்! பொறுத்துக் கொள்ளுங்கள்!
 படங்கள் உதவி} ரிஷவன் காம், ரமாமலர்காம், தமிழ் வேர்ல்ட் காம்.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


பழம்பெரும் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் காலமானார்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


சித்தன் அருள் - 1883 - கேள்விகளுக்கு அகத்தியப் பெருமானின் பதில்கள்!


படம் இயக்குவது என் நோக்கம் அல்ல - சிவகார்த்திகேயன்


நுழைவுத்தேர்வு


புழல் சிறையில் கைதி கொலை எதிரொலி : உதவி ஜெயிலர், வார்டன் சஸ்பெண்ட்


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


வேலூர் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பு முலாம் பழம் கிலோ ரூ.30 க்கு விற்பனை


வட மாநிலங்களும் தவிப்பு டெல்லியில் 120 டிகிரி வெயில்: ராஜஸ்தானில்...


சேரி பிகேவியர்