சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 6
1. டாக்டர் என் ஆயுள் ரேகை ரொம்ப கெட்டியா இருக்கு!
நீங்க என்கிட்ட வந்த பிறகு போய் பார்த்தீங்களா?
வி. சாரதி டேச்சு.
2. நகர்வலம் போகும் போது எவனோ மன்னர் மீது செருப்பை வீசிவிட்டான்.
அடடா மன்னர் என்ன செய்தார்?
ஓடுவதற்கு பயன்படுமே என்று பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டார்!
க. கலைவாணன்
3. யுத்தத்திற்கு தேவையான அளவு ஈட்டி கேடயம் கத்தி நம்மிடம் இல்லை என்ற ரகசியத்தை வெளியிட்டது யார்?
பேரிச்சம்பழ வியாபாரிதான் அரசே!
எஸ் மோகன்.
3. தலைவர் எப்பவும் கைல ஒரு ஸ்கேல் வச்சி இருக்காரே ஏன்?
4. எல்லாத்திலேயும் ஒரு அளவு கோலோடு செயல்படுங்கண்னு கட்சி மேலிடம் சொல்லியிருக்காம்!
இரா.வசந்தராசன்.
5. ஒரு காம்பவுண்ட் செண்டன்ஸ் சொல்லு பார்க்கலாம்?
இங்கு நோட்டீஸ் ஒட்டக்கூடாது சார்!
வி.சி. கிருஷ்ணரத்தினம்.
6. மாப்பிள்ளை ஆத்தோட போயிட்டார்!
ஐயையோ!
என்ன ஐயையோங்கிற.. ஆத்தோட மாப்பிள்ளையாயிட்டாருன்னு சொன்னேன்!
ஆர்.நரசிம்மன்.
7. ஏண்டா இண்டர்வியுவிற்கு போக மாட்டேன்னு அடம் பிடிக்கிற?
நீங்கதானப்பா நாலு பேரு கேள்வி கேக்கற மாதிரி வச்சுக்காதேன்னு சொன்னீங்க!
எப். ஷர்புதீன்.
8. உங்களை கல்யாணம் செய்துகிட்டதுக்கு பதிலா ஒரு நாயைக் கல்யாணம் செய்து இருந்தா கூட நான் சந்தோஷமா இருந்திருப்பேன்!
நான் கூட நாயைத்தான் கல்யாணம் செய்துகிட்டேன்! நான் என்ன சந்தோஷமாவா இருக்கேன்?
எஸ். மோஹன் குமார்.
9. அவசரத்துல கால் மாத்தி ஆபரேசன் பண்ணிட்டேன்!
ஆள் மாத்தியும் பண்ணீட்டீங்க டாக்டர்!
அண்டனூர் சுரா.
10.திருடன் உங்க வாயைத்தானே கட்டிப்போட்டான்! பக்கத்துல இருந்த உங்க கணவர் ஏன் திருடன் திருடன் னு கத்தலை?
என் பக்கத்துல அவரு இருக்கும்போது அவரு வாயே திறக்கமாட்டார் சார்!
வி. சாரதிடேச்சு.
11.என் மருமகன் கரண்ட் மாதிரி!
எந்த விஷயத்திலே?
கொஞ்ச நேரம் வீட்டில இருக்க மாட்டார்!
அண்டனூர் சுரா.
12.நாங்க உங்க வீட்டுக்கு ரெய்டுக்கு வரப்போறதா சம்மன் அனுப்பினோமே?
அதை நான் மனுன்னு நினைச்சி வாங்கி கிழிச்சி போட்டுட்டேன்!
13.டாக்டர் வர வர உங்க கம்பவுண்டர் கொடுக்கிற மாத்திரை ரொம்ப பெரிசா இருக்கு!
யோவ்! அது டோக்கன்யா!
பே. சௌரி.
14.நம் மன்னரை வீரத்துல சிங்கம் னு சொன்னதுக்கு ஏன் இப்படி ஓடுகிறார்!
அவர் காதுல தூரத்துல சிங்கம்னு விழுந்திருக்கும்!
எஸ் விஜயராணி.
15.சென்ற ஞாயிறன்று நள்ளிரவில் வந்த கயவன் என்னை கெடுக்க முயற்சித்தான் மன்னா!
நீதான் அவனை துடைப்பத்தால் அடித்து துரத்திவிட்டாயே கண்மணி!
சீர்காழி வி. ரேவதி.
16.தலைவரை எதுக்கு கைது பண்ணிகிட்டு போறாங்க?
எதிர் கட்சிக்காரங்க மோர் பந்தல் வச்சா இவர் போட்டியா பீர் பந்தல் வைச்சாராம்!
வி.சகிதா முருகன்.
17.தலைவரை கடத்திகிட்டு போன மாவோயிஸ்டுகள் எந்த நிபந்தனையும் இல்லாம தலைவரை விடுதலை பண்ணிட்டாங்களே எப்படி?
எல்லா மாவோயிஸ்டுங்க கிட்டேயும் கைமாத்தா பணம் கேட்டு குடைச்சல் கொடுத்தாராம்!
வி. சகிதா முருகன்.
18.பேங்க் திறப்பு விழாவுல பேசுன தலைவர் ரொம்ப சொதப்பிட்டாரு!
அப்படி என்னதான் பேசினாரு?
மின்வெட்டு நிலவுற இந்த சூழல்ல எல்லோரும் இந்த வங்கியில கரண்ட் அக்கவுண்ட் தொடங்கி மின்சாரத்த சேமிக்கணும்னு பேசிட்டாரு!
திருமாளத்து அம்பி.
நன்றி: குமுதம் வார இதழ்.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!.