மும்பை: ஆஸ்திரேலியாவிடம் இந்தியா 0-4 என்ர கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்ததைத் தொடர்ந்து டோணியை நீக்கி விட்டு வீரேந்திர ஷேவாக்கைத்தான் கேப்டனாக்க இந்திய கிரிக்கெட் அணி தேர்வாளர்கள் விரும்பினர். ஆனால் அது நடக்கவில்லை என்று முன்னாள் கேப்டன் மொஹீந்தர் அமர்நாத் கூறியுள்ளார். இதுகுறித்து அமர்நாத் கூறுகையில், சில உள் காரணங்களால் டோணி நீக்கப்படவில்லை. தேர்வாளர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக டோணியை நீக்க விரும்பியபோதும் அதை அந்த உள் காரணங்கள் தடுத்து நிறுத்தி விட்டன. என்ன காரணம் தேர்வாளர்களை தடுத்து நிறுத்தியது என்பது குறித்து நான் விரிவாகச் சொல்ல விரும்பவில்லை. ஆனால் சரியான நேரம் வந்தால் கண்டிப்பாக அந்த விவரத்தை நான் சொல்வேன். நாட்டு மக்களுக்கும் அது தெரிய வேண்டும் என்றார் அமர்நாத். ஸ்ரீகாந்த்துக்குப் பிறகு இந்திய தேர்வுக் குழுத் தலைவராக அமர்நாத்தான் வந்திருக்க வேண்டும். ஆனால் கிரிக்கெட் வாரியம் அவரை விரும்பவில்லை. காரணம், அமர்நாத் அதிரடியாக பேசக் கூடியவர், முடிவெடுக்கக் கூடியவர், யாருடைய பரிந்துரையையும் ஏற்க மாட்டார் என்பதால். கபில் தேவ் தலைமையில் இந்தியாவுக்கு முதன் முறையாக உலகக் கோப்பையை வென்று கொடுத்தவர்களில் அமர்நாத்தும் முக்கியமானவர்.1983 உலகக் கோப்பைப் போட்டியின் அரை இறுதிப் போட்டியிலும், இறுதிப் போட்டியிலும் ஆட்டநாயகன் விருதைப் பெற்றவர் அமர்நாத் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சரிவுடன் ஆடி வரும் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்து விட்டது என்று வெளிப்படையாக அறிவுறுத்தியுள்ளார் அமர்நாத். மேலும் டோணியையும் அவர் கடுமையாக சாடி வருகிறார். இந்த நிலையில் டோணியை கிரிக்கெட் வாரியத்தினர்தான் காத்து வருவதாக புதிய சர்ச்சையை அவர் கிளப்பியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் கிரிக்கெட் பிரபலங்களின் வரிசையில் மொஹீந்தர் அமர்நாத்தும் இணைந்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் கிரிக்கெட் பிரபலங்களின் வரிசையில் மொஹீந்தர் அமர்நாத்தும் இணைந்துள்ளார்.
ஏற்கனவே சச்சின் தனது நிலை குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கவாஸ்கர், கபில்தேவ், கங்குலி, திலீப் வெங் சர்க்கர் ஆகியோர் கூறியுள்ளனர். இதில் நான் சச்சினாக இருந்திருந்தால் இன்னேரம் ஓய்வு பெற்றிருப்பேன் என்று கூறியுள்ளார் கங்குலி.
இந்த நிலையில் முன்னாள் கேப்டன் அமர்நாத்தும் தற்போது சச்சின் ஓய்வு பெற வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
சச்சின் அத்தனை சாதனைகளையும் செய்து விட்டார். இப்போது அவர் ஓய்வு குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. எல்லோருக்கும் கண்டிப்பாக ஒரு நாள் ஓய்வு வந்துதான் தீரும். தற்போது சச்சினுக்கான நேரம் வந்து விட்டது. எவ்வளவு வேகமாக ஓய்வு பெறுகிறாரோ, அவ்வளவு நல்லது என்று கூறியுள்ளார் அமர்நாத். நன்றி தட்ஸ் தமிழ்