Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

பென் டிரைவுக்கும் ஸ்கூட்டி ஓட்டுற பொண்ணுக்கும் என்ன சம்பந்தம்? எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ்!

$
0
0
எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ்!



1.      என்னங்க பின்னாடி இருந்து ஒருத்தன் என் கால்ல சுரண்டறான்
அப்படியா! திரும்பி உன் முகத்தை காட்டு! சாகட்டும் தறுதலை!

2.      உன் படிப்பின் மேல யாருக்கு அக்கறை அதிகம்?
 பஸ் கண்டக்டருக்குத்தான் டீச்சர்!
  எப்படி?
  அவர்தான் தினமும் நீ பாஸா! பாஸான்னு கேட்கிறாரே!

3.பியுட்டி பார்லரின் வாசலில் காணப்பட்ட வாசகம்!
   இங்கிருந்து வெளியே போகும் பெண்களை சைட் அடிக்காதீர்கள். போவது உங்கள் பாட்டியாகக் கூட இருக்கலாம்!

4.பெத்த பையனுக்கும் எக்ஸாம் பேப்பருக்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?
தெரியலையே!
 இரண்டையும் திருத்தவே முடியாது!

5.தண்ணியிலே இருந்து ஏன் மின்சாரம் எடுக்கறாங்க?
அப்படி எடுக்கலேன்னா குளிக்கும் போது ஷாக் அடிக்கும்!

6.ஏதாவது ஒருவார்த்தை சொல்லு அதில சந்தோஷமும் இருக்கணும் கஷ்டமும் இருக்கணும்!
“ஐ லவ் யூ அண்ணா!”

7.உனக்குப் பார்த்த பொண்ணு லட்டு மாதிரி இருப்பான்னு சொல்றே! ஆனா ஏன் வேண்டாம்னு சொல்லிட்டே?
எனக்கு சுகர் கம்ப்ளெயின்ட் இருக்கே!

8.நம்ம ஆஸ்பிடல் விளம்பரத்துக்கு ஒரு நல்ல பஞ்ச் டயலாக் சொல்லு?
கூட்டிட்டு வாங்க! தூக்கிட்டு போங்க!

9.உங்க கடையில எல்லா பன்னும் கிடைக்குமா?
  கிடைக்குமே!
ஒரு கிலோ ரிப்பன் கொடுங்க!


10.கடவுள் ஆணா பெண்ணா?
ஆண் தான் சார்! ஏன்னா பூஜா, ஆர்த்தி, அர்ச்சனா, ஆராதனா, கீர்த்தனா, ஜோதின்னு விரும்பறாரே!

11.ஏண்டா மச்சி ரொம்ப நாளா போன் பண்ணவே இல்லை?
 பேலன்ஸ் இல்லைடா!
பேலன்ஸ் இல்லைன்னா தூண்ல சாய்ஞ்சுகிட்டு பேசவேண்டியதுதானே!

12.பஸ்ல ஒரு சீட் இருந்தும் ஒரு பொண்ணு உக்காரலை ஏன்?
  அந்த பொண்ணு பேரு ”அமரா”வதி!

 13.ஏங்க நம்ம கல்யாண பத்திரிக்கையை ரொம்ப நேரமா உத்து பார்த்துகிட்டு இருக்கீங்க?

  எக்ஸ்பயரி டேட் ஏதாவது போட்டிருக்கான்னு பார்க்கிறேன்!

 14.குண்டூசி எவ்வளோ ஒல்லியா இருக்கு! அப்புறம் ஏன் அதை  குண்டூசின்னு சொல்றோம்?

 15.ஒரு அரக்கன் அரக்கியோட கோயிலுக்கு போனான். ஆனா கோயில் கதவை திறக்க முடியலை. ஏன்?

அர- கீ- யோடதான போனான் முழு கீயோட போகலையே!


16.முத்துசாமிக்கு எதிர்ச் சொல் என்ன?
 முத்து see மீ இதுக்குத்தான் கிராமர் சரியா கத்துக்கணும்னு சொல்றது!

 17.ஒரு கேர்ள் வண்டி ஓட்டுனா அதை கம்ப்யூட்டர் லேங்வேஜ்ல எப்படி சொல்வாங்க?
”பென் டிரைவ்”னு சொல்லுவாங்க!

 18.ஒரு ரூம்ல மூணு டீச்சர் உட்கார்ந்திட்டிருந்தாங்க! ஒருத்தர் தமிழ் டீச்சர், இன்னொருத்தர் கணக்கு டீச்சர், அடுத்தது இங்கிலீஷ் டீச்சர். திடீர்னு திருடன் அந்த ரூம்ல புகுந்துட்டான் அப்ப இங்கிலீஷ் டீச்சர் தீஃப் தீஃப் அப்படின்னு கத்தினாங்க! தமிழ் டீச்சர் திருடன் திருடன்னு கத்தினாங்க! மேத்ஸ் டீச்சர் எப்படி கத்துவாங்க?
தெரியலையே!
  420! 420!னு கத்துவாங்க!

19.உன்னைப் பார்த்து ஒரு அழகான பொண்ணு சிரிச்சா என்ன அர்த்தம்?
தெரியலை!
உனக்கு பின்னாடி நான் நிற்கிறென்னு அர்த்தம்!

 20.என்னப்பா! மாத்திரையோட சைடையெல்லாம் வெட்டிக்கிட்டு இருக்கே!
 அதுவா மாத்திரையை சாப்பிட்டா எந்த சைடு எஃபெக்டும் வரக்கூடாது பாருங்க!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!








 

Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!