புகைப்பட ஹைக்கூ 50
- உடைபட்டது
உழைப்பு!கடலில் பிள்ளையார்!- விருந்து கொடுத்து
விரட்டி அடித்தனர்கடலில் பிள்ளையார்!- பிடித்து வைத்து
உடைத்து எறிந்தனர்!கடலில் பிள்ளையார்!- குளிப்பதற்கு
ஊர்வலம் போனார்பிள்ளையார்!- பக்தியில்
கரைந்து போனார்பிள்ளையார்!- உடைத்து போட்டாலும்
உயிர்த்து வந்தார்கடலில் பிள்ளையார்!- தீர்த்த யாத்திரை
கிளம்பினார்தெருப்பிள்ளையார்!- மண்ணிலே தோன்றி
மனதினிலே ஊன்றிநீரிலே கரைந்தார் பிள்ளையார்!- வீதிவீதியாய்
சுற்றிவந்தவர்வீசப்பட்டார் கடலில்!- உற்சாக ஊர்வலத்தில்
உடைக்கப்பட்டார் கடலில்பிள்ளையார்!- மகிழ்வோடு
இறுதி ஊர்வலம்!கடலில் பிள்ளையார்!- கரைந்து போனாலும்
நிறைந்து நின்றார்மனதில் பிள்ளையார்!- அன்பில் திளைத்து
ஆழியில் மிதந்தார்பிள்ளையார்!- ஒரு வாரம் பூசனை
ஒரு நாள் ஊர்வலம்!ஒரு மணியில் கரைந்தார் பிள்ளையார்!- விருந்தும் மருந்தும் மூன்றுநாள்
விளக்கமாய் நிருபித்தார்கடலில் பிள்ளையார்!- கடல் கொண்டு போனாலும்
திடம் கொண்டு எழுகின்றார்அடம் கொண்ட பிள்ளையார்!- கடவுள்
கடலில் வீசப்பட்டார்!கலியுகத்தில் பிள்ளையார்!- விதவிதமாய் ஜனித்தனர்
ஒரே விதமாய் மறைந்தனர்கடலில் பிள்ளையார்!- கடலில் வீசப்பட்டது
கடவுள் ரூபத்தில்காசு!20 விலை போன கடவுள்வீசப்பட்டார்கடலில்!தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!- உடைபட்டது