ஜோக்ஸ்!
1. என் ஹஸ்பெண்டுக்கு கோவம் வந்தா பின்னு பின்னுன்னு பின்னிடுவார்!
அதானே பார்த்தேன்! நீ எப்படி டெய்லி ஆபிஸுக்கு ரெட்டை ஜடை பின்னிக்கிட்டு வரேன்னு இப்பத்தான் புரியுது!
மா. அமிர்தலிங்கம்.
2.தயிர் ஏன் வெள்ளையாக இருக்கிறது தெரியுமா?
அதை தோய்ப்பதால்!
எஸ்.உதயகுமார்.
3.என் மாமியார் எனக்கு போட்டியாத்தான் எதையும் செய்வாங்க!
அப்படி என்ன செஞ்சாங்க!
கோடைக்கு நான் ஊட்டி போகலாம்னு சொன்னேன். அவங்க தார் பாலைவனத்துக்கு போகலாம் நான் பார்த்ததே இல்லைன்னு சொல்றாங்க!
நிவேதா மூர்த்தி.
4. நான் ரெயில்ல போகும்போது பக்கத்தில் இருந்தவரை எந்த ஊர்னு கேட்டேன் பத்துரூபாய் தெண்டம்!
எப்படி?
அவர் வெற்றிலை போட்டுக்கொண்டிருந்த வாயை திறந்து தூத்துக்குடின்னு சொல்லிவிட்டார்!
தேனி. எஸ் மாரியப்பன்.
5. டாக்டர்! இன்னிக்கு என்னை பெண் பார்க்க வர்றாங்க லீவு வேணும்!
பெண் பார்க்கும் நிகழ்ச்சியை நம்ம கிளினிக்கிலேயே வச்சுக்கேயேன் ஒரு நாளாச்சும் கூட்டமா கலகலப்பா இருக்குமில்ல!
எம்.பி
6. டைப்பிஸ்ட் ராதாவுக்கு தங்கமான மனசு!
எப்படி சொல்றே?
எல்லோரும் உரசப்பாக்கறாங்களே!
கோ.சு. சுரேஷ்.
7. பொண்டாட்டிக்கு புடவை தோய்ச்சு போடறீங்களே முடியாதுன்னு சொல்றதுதானே!
இன்னிக்கு ராத்திரி காலை அமுக்கிவிடும்போது சொல்லிப்பார்க்கிறேன்!
வி.சாரதிடேச்சு.
8. என்னது தாலி கட்டப்போற நேரத்துல மாப்பிள்ளை காப்பாத்துங்க காப்பாத்துங்கன்னு கத்தறார்!
இப்பத்தான் பொண்ணை நேரில் பார்க்கிறார் போலிருக்கு!
எ.நாபன்.
9. லேடிஸ் டெய்லர்ன்னு தெரியாம அவன் கிட்ட பேண்ட் சர்ட் தைச்சது தப்பா போச்சு!
ஏன் என்ன ஆச்சு?
ரெண்டுக்கும் ஜன்னல் வச்சு தச்சிட்டான் படுபாவி!
பா.ஜெயக்குமார்.
10. பம்ப் செட் லோன் கேட்கிறீயே நிலம் எவ்வளவு இருக்கு?
நிலம் எதுவும் கிடையாது எசமான்! பால் வியாபாரத்துக்குத்தான்!
தி.முருகேசன்.
11 அந்த ஆள் இன்னும் ரெண்டு தலைமுறைக்கு காலை ஆட்டினு சாப்பிடலாம்!
ஏன் நிறைய சொத்து இருக்கா?
இல்ல ஒரே ஒரு டெய்லரிங்க் மிஷின் இருக்கு!
வி.சாரதிடேச்சு.
12. நேத்துலேர்ந்து சொல்ல முடியாத வலி டாக்டர்?
எங்க வலிக்குது?
அதான் சொன்னேனே டாக்டர் சொல்ல முடியாதவலின்னு!
வி.சாரதிடேச்சு.
13. கல்யாணமான சரியா போயிடும்னு சொல்றீங்களே அப்படி என்ன பொண்ணுக்கு குறை…?
ஒண்ணுமில்லே பொண்ணு கர்ப்பமா இருக்கா!
வி.சாரதிடேச்சு
14. என் கணவருக்கு தொப்பை விழுந்துடுச்சு!
பார்த்தா தெரியலையே?
அதான் விழுந்துடுச்சுன்னு சொன்னேனே எப்படி தெரியும்!
வி.பார்த்தசாரதி
15 நம்ம ஹீரோ அத்தை மேல ரொம்ப பாசமா இருக்கார் அத்தை வீட்டிலேயே தங்கியிருக்கார், அத்தையை கொன்னவங்களை பழி வாங்குகிறார்..
அடப்பாவி… ‘ஆண்ட்டி’ ஹீரோ சப்ஜெக்ட்னு சொன்னியே அது இதானா?
கே. சதீஷ் குமார்.
17. மன்னா திடீரென ஓட்டப்பந்தய பயிற்சி பெறுகிறீர்களே ஏன்?
போரில் புறமுதுகிட்டு ஓட வசதியாக இருக்குமே அதான்!
இரா.செல்வன்.
18. அம்மா எனக்கு யாரையாவது அடிக்கணும் போலிருக்கும்மா!
என்னங்க.. நம்ம பொண்ணுக்கு கல்யாண ஆசை வந்திருச்சிங்க!
ஜே.நஷீர்கான்.
19. அந்த கண் டாக்டர் போலி!
எப்படி?
கண் மங்கலா தெரியுதுன்னு சொன்னேன். கண்ணுக்கு பக்கத்துல ஒரு சின்ன பல்பு போடறேன்னு சொல்றாரு!
பா.ஜெயக்குமார்.
20. எப்பவும் வீக்கா இருப்பாளே நம்ம கமலா… இப்ப எப்படி இருக்கா?
மாசமா இருக்கா!
எஸ். சுலோசனா.
21. இதுவரை என் வாழ்க்கையில் ஒரே ஒரு தடவைதான் ஏப்ரல் ஃபூல் ஆகியிருக்கேன்!
உங்க கல்யாணம் ஏப்ரல் மாசம் நடந்துச்சா!
சந்துரு.
(பழைய குமுதம் இதழ்களில் இருந்து தொகுத்தது)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவுகுறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!